Page:Tamil proverbs.pdf/584

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
566
பழமொழி.
  1. வைதீகர் என்றால் பார்ப்பாருக்கு பெயர்.
    The term vaidikar is another name for brahmans.

  2. வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.
    The sacred and the secular are both indispensable.

  3. வைதீகம் என்றால் தெய்வ சமயம்.
    Vaidikam means the divine religion.

  4. வைதீகம் ஆய்ந்து அறி.
    Arrive at a knowledge of religion by studious investigation.

  5. வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாம்.
    If its being put there be true, its being lost may also be true.

  6. வைத்தது கண்டது சொல்லாதே.
    Tell not what has been kept or what you sew.

  7. வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
    If the hair is left to grow, kudumi, if shaved, bald.

  8. வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?
    Which is greater, a physician or a schoolmaster?

  9. வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.
    A physician and a schoolmaster never disagree.

  10. வைத்தியன் எல்லாருக்கும் பொது.
    A physician is common to all.

  11. வைத்தியம் வேண்டாதார் உலகில் இல்லை.
    There is no one on earth who does not require the services of a physician.

  12. வைத்தியம் வாயாடிக்குப் பலிக்கும்.
    A loquacious doctor is successful.

  13. வைத்தியம் எல்லாம் நம்பிக்கையாற் பலிக்கும்.
    Faith in medicine makes it effectual.