Page:Tamil proverbs.pdf/60

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
42
பழமொழி.
  1. அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது.
    Even the grass under his footsteps will not die.
    Used when speaking of one remarkable for gentle habits.

  2. அவன் மிதித்த இடம் பற்றியெரிகின்றது.
    The place whereon he treads bursts into flames.
    Spoken of the reckless and violent.

  3. அவன் மெத்த அத்துமிஞ்சின பேச்சுக்காரன்.
    His words exceed all bounds.
    Said of one who delights in abusing others.

  4. அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.
    The work that was indicated by the foot he will perform by the hand.

  5. அவன் சாதி எந்தப் புத்தி குலம் எந்த ஆசாரமோ அதுதான் வரும்.
    The devices of his caste and habits of his tribe will predominate.

  6. அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.
    That which he tied with his foot cannot be loosened by the hand.
    Spoken of one of superior skill.

  7. அவன் அசையாது அணுவும் அசையாது.
    Unless he move not an atom will move.

  8. அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.
    Every man’s purpose will be either effectuated or frustrated by the Supreme Ruler.

  9. அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.
    He is sharpening a knife for another's throat.

  10. அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.
    His mind is full of sores, his body is covered with blisters.