Page:Tamil proverbs.pdf/64

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
46
பழமொழி.
  1. அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்கலாம், ஒழுகுகிற வீட்டில் இருக்கலாகாது.
    Though one may abide in a house of mourning, it is not possible to remain in one that is leaky.

  2. அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் காட்டுகிறதுபோல.
    Like showing a ripe plantain to a crying child.
    A premium on naughtiness.

  3. அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.
    He tickles when one is weeping.
    Spoken of something that is obtruded at an inconvenient time.

  4. அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து, ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.
    Having given half a fanam for weeping, give a fanam to cease.

  5. அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடா?
    Are grief and self-will things to be made sport of?

  6. அழுக்குச் சிலைக்குள்ளே மாணிக்கம்.
    A ruby in a dirty rag.

  7. அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும்.
    Dirt will remove dirt, reproach will overcome reproach.

  8. அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது.
    Though cleaned and placed on one's knee, the mean disposition of a slave or low person will not leave him.

  9. அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.
    A weeping eye and a running nose.

  10. அழுதவனுக்கு அகங்காரமில்லை.
    He who is weeping has no pride.

  11. அழுதபிள்ளை பால்குடிக்கும்.
    A crying child obtains milk.