Page:Tamil proverbs.pdf/65

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
47
  1. அழுத பிள்ளை உரம் பெறும்.
    The weeping child will gain strength.

  2. அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்.
    Although she may weep, she herself must bare the child.

  3. அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான், இளகின நெஞ்சன் எவர்க்கும் உதவுவான்.
    The hard-hearted will be of use to none, the tender hearted will be of use to all.

  4. அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்.
    A corpse unwept and a funeral pyre unquenched.
    An affair or person forsaken by all.

  5. அழுவார் அழுவார் தம் தம் துக்கமே திருவன்பெண்டீருக்கு அழுவாரில்லை.
    All weep on account of their own griefs, none oh account of Tiruvan’s wife.
    Spoken of feigned sympathy and also of that outward expression of sorrow which is occasioned by surrounding circumstances.

  6. அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.
    The mother of a bride or bridegroom will not visit their new relations unless invited.

  7. அளகாபுரியிலும் விறகுதலையன் உண்டு.
    There are firewood carriers even in Alagapuri, (the city of Kuvéra.)
    Kuvéra a wealthy king; now regent of the North and the guardian of riches.

  8. அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.
    Although Alagapuri be given up to plunder, the unfortunate gains nothing thereby.

  9. அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.
    Though as wealthy as Kuvéra you must keep your expenses within due bounds.