Page:Tamil proverbs.pdf/66

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
48
பழமொழி.
  1. அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
    Does the measure know the price of grain?

  2. அளந்த நாழிகொண்டு அளப்பான்.
    He will measure in the accustomed measure.

  3. அளந்தால் ஒரு சாணில்லை அரிந்தால் ஒரு சட்டிகாணாது.
    When measured it is not a span long, when chopped up it does not fill a chatti.

  4. அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.
    By repeated measurement articles will be diminished.
    Constant use wears out a thing.

  5. அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.
    The prosperity of him who does not cultivate sociality is like the filling of a tank without a bank.

  6. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
    If in excess even nectar is poison.

  7. அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது.
    That of which no part is taken out will not lessen, that which is not uttered will not get out.

  8. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்துக் கொடுத்தால் கடன்.
    If taken up and given in handsful it is free, if measured out it is charged for.

  9. அள்ளிப் பால் வார்க்கையிலே சொல்லிப் பால் வார்த்திருக்குது.
    Whilst teeming milk already laded, the quantity is given.

  10. அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது கிள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும்.
    One cannot afford to live with a plunderer though he might live with a pilferer.