Page:Tamil proverbs.pdf/68

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
50
பழமொழி.
  1. அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார்.
    One highly learned fell into a pot of gruel.

  2. அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை.
    The story of a scrupulousy chaste wife who addressed her husband as Appa, father.

  3. அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல.
    As the thoroughly practised musk-rat was drowned in the refuse-pan.

  4. அறமுறுக்கினால் கொடுமுறுக்காகும்.
    When twisted to excess, fibres snap.

  5. அறமுறுக்கினால் அற்றுப்போகும்.
    If over-twisted it will snap.

  6. அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும்.
    When excessively twisted, strands break.

  7. அறம் பொருள் இன்பம் எல்லாருக்கும் இல்லை.
    Virtue, wealth and pleasure are not common to all.

  8. அறவடித்த முன்சோறு காடிப்பானையில் விழுந்தாற்போல.
    As when being thoroughly strained the uppermost portion of the boiled rice fell into the refuse-pan.

  9. அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு
    (Better) to live in subjection to a mountaineer than to be the subject of a cruel tyrant.

  10. அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்.
    It is the merit of the wise to gain knowledge by meditation.

  11. அறிந்த ஆண்டையென்று கும்பிடப் போனால், உங்கள் அப்பன் பத்துப் பணம் கொடுக்கவேண்டும் கொடு என்றான்.
    When I went to a master whom I knew, to pay my respects, he said, your father owes ten fanams, give it me.