Page:Tamil proverbs.pdf/74

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
56
பழமொழி.
  1. அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை.
    The body we then saw has suffered no decay.
    The word மேனி is also used for beauty, freshness.

  2. அன்றும் இல்லைத் தையல், இன்றும் இல்லை பொத்தல்.
    There was no stitching then, nor is there any hole now.

  3. அன்றுகொள், நின்றுகொள், என்றும் கொள்ளாதே.
    Buy when you require, be slow to make purchases, do not make daily purchases.

  4. அன்று தின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆமா?
    Will the boiled rice eaten then suffice for six months?

  5. அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துப் பசியை அறுக்கும்.
    The food which was then eaten will keep one free from hunger for six months.

  6. அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா?
    Will he who wrote then, erase and write again?
    Referring to the changeless preordination of God.

  7. அன்றைக்கு கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைத்த அரைக்காசு பெரிது.
    The half cash obtained to-day is greater than thousands of gold to be got hereafter.

  8. அன்றைக்குத் தின்கிற பலாக்காயைவிட இன்றைக்கு தின்கிற களாக்காய் பெரிது.
    The Kalà fruit, carissa diffusa, of to-day is better than the jack fruit of the future.

  9. அன்னப் பிடி வெல்லப் பிடி ஆச்சுது.
    A handful of boiled rice has become as precious as a handful of sugar.

  10. அன்ன மயம் பிராண மயம்.
    The property of food is the support of life.
    The supporting, nourishing quality of grain is its special property, without which, as life is now conditioned, it cannot exist.