Page:Tamil proverbs.pdf/80

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
62
பழமொழி.
  1. ஆடப் பாடத் தெரியாது இரண்டு பங்கு உண்டு.
    Neither able to sing nor dance, but he has two shares.

  2. ஆடமாட்டாத தேவடியாள் கூடம் போதாது என்றாள்.
    The temple girl who could not dance said that the hall was not large enough.

  3. ஆடவிட்டு நாடகம் பார்க்கிறதா ?
    Is it to look at the drama after having encouraged a profligate course?
    Spoken ironically.

  4. ஆடாஜாதி கூடாஜாதியா ?
    Are those unfit for the drama unfit for every thing?

  5. ஆடாது எல்லாம் ஆடி அவரைக்காயும் அறுத்தாச்சுது.
    All is done and the avarai fruit is cut?
    Indicating decayed circumstances.

  6. ஆடி அறவெட்டை அகவிலை நெல்விலை.
    July harvest having failed, the price of dry grain is that of paddy.

  7. ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்.
    The comedy began and ended in an hour.

  8. ஆடி ஓய்ந்த பம்பரம்.
    A top that spins no longer.

  9. ஆடிக் கரு அழிந்தால் மழை குறைந்துபோம்.
    If the embryo clouds of July fail rain will be scant.

  10. ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.
    A restless cow must be milked by force, and a gentle cow must be milked with kindness.
    Treatment to be regulated by circumstances.

  11. ஆடிக்காற்றில் உதிரும் சருகுபோல.
    As dry leaves falling in the winds of July.