Page:Tamil proverbs.pdf/85

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
67
  1. ஆட்டுக்குட்டிக்கு ஆணையைக் காவுகொடு.
    Sacrifice an elephant for the sake of a kid.

  2. ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதை.
    The story of one who wandered through the jungle in search of a lamb that he had on his shoulder.

  3. ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.
    He aims to catch the leopard by exposing the sheep.

  4. ஆட்டைத் தேடி அயலாள் கையிற் கொடுப்பதைப்பார்க்க, வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது நல்லது.
    It is better to build a house and set fire to it, than to buy sheep and place them under the care of others.

  5. ஆட்டைக்கொருமுறை காணச் சோட்டை இல்லையோ?
    Have you no desire to see us at least once a year?

  6. ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.
    Broth and curry ought to be prepared with all their ingredients.

  7. ஆணவத்தால் அழியாதே.
    Do not destroy yourself by pride.

  8. ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.
    Standard gold, and a woman at one with her mother-in-law are rare.

  9. ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.
    Although one may injure a man, a woman may not be injuriously treated.

  10. ஆணை அடித்த வளர், பெண்ணைப் போற்றி வளர்.
    Train a boy strictly, but a girl kindly.