Page:Tamil proverbs.pdf/87

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
69
  1. ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.
    The Saivite and the Vaishnavite mendicants are as a water-pot and its cord.
    United or separate.

  2. ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான், தாதனைக் கண்டால் ரங்கன் என்கிறான்.
    When he meets a Saiva mendicant he is a Lingan, and when he meets a Vaishnava mendicant he is a Rangan.

  3. ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.
    When two mendicants embrace each other, the ashes of the one cleave to the other.

  4. ஆண்டி வேஷம்போட்டும் அலைச்சல் தீரவில்லை.
    Though he assumed the guise of a mendicant, his troubles did not cease.

  5. ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.
    If a mendicant be struck on his posteriors, ashes fly.

  6. ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.
    Kár rice a year old, and newly reaped Samba (superior rice) are rare to the eye of a cultivator.

  7. ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான்.
    If the year withhold her increase, even the menial servants will neglect to do obeisance.

  8. ஆண்டைமேற் கோபம் கடாவின்மேல் ஆறினான்.
    He wreaked his anger against his master on the male buffalo.

  9. ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்காள் தங்கைச்சி ஒத்திரார்கள்.
    A thousand men may live together in harmony, whereas two women are unable to do so although they be sisters.