Page:Tamil proverbs.pdf/89

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
71
  1. ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.
    The owl is small, its screech is loud.

  2. ஆபத்திற் காத்தவன் ஆண்டவன் ஆவான்.
    He who helps another in his misfortune becomes his master.

  3. ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.
    Prosperity and adversity are common to all.

  4. ஆபத்துக்குப் பாவம் இல்லை.
    A thing done through necessity is no crime.

  5. ஆபத்துக்கு உதவினவனே பந்து.
    He is a friend who aids in adversity.

  6. ஆப்பாத்தாள் கல்யாணம் போய்ப்பார்த்தால் தெரியும்.
    The condition of one’s elder sister may be ascertained by attending her wedding.

  7. ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.
    As the monkey perished by drawing out a wedge.

  8. ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?
    If castor seed (palma christi) be sown will àchcha (ebony) spring up?

  9. ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?
    Are the nuts of the castor plant pearls?

  10. ஆமணக்கும் பருத்தியும் அடர விதைப்பானா?
    Will he sow castor and cotton seeds in close proximity?

  11. ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.
    The tortoise or a turtle is in the well, the squirrel is on a branch.
    Said of two things or persons not found together.

  12. ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாம் அது சொன்னாற் பாவம்.
    They will catch the turtle, they will turn it on its back, for me to say so would be a crime.
    Indicating that it is more dangerous to speak of the crime of another than to commit it.