Page:Tamil proverbs.pdf/95

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
77
  1. ஆரடா விட்டது மானியம் நானே விட்டுக்கொண்டேன்.
    Sirrah! who invested you with a free tenure, I did it myself.
    A long continued favour is regarded as a right.

  2. ஆராகிலும் படியளந்து விட்டதா?
    Has any one measured out my daily allowance?

  3. ஆராருக்கு ஆளாவேன் ஆகாத உடம்பையும் புண்ணையும் கொண்டு.
    How many shall I serve with this debilitated and ulcerated body?

  4. ஆராற் கெட்டேன் நாராற் கெட்டேன்
    By whom was I ruined, by twisted hemp.

  5. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும்.
    Although engaged in a mere puppet-show, one ought to keep the eye on the main chance.

  6. ஆருக்கும் அஞ்சான் ஆர்படைக்கும் தோலான்.
    He is fearless and shrinks not in the presence of any foe.

  7. ஆருக்கு ஆர் சதம்?
    Who is really true to another?

  8. ஆருக்கு பிறந்து மோருக்கு அழுகிறாய்?
    To whom were you born? you cry for butter-milk.

  9. ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
    Treachery against any man will be slowly requited, but treachery against one’s self will meet with immediate retribution.

  10. ஆருமற்றதே தாரம் ஊரில் ஒருவனே தோழன்.
    A wife who has no connections is to be preferred and so the friendship of one.

  11. ஆரும் ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.
    Who are related to each other? the mother and her child.