Page:Tamil proverbs.pdf/96

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
78
பழமொழி.
  1. ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதயாகம் செய்தானாம்.
    He is said to have performed Ashwamedha, (the sacrifice of a horse) in an uninhabited country.

  2. ஆரை நம்பித் தோழா காருக்கு ஏற்றம் போட்டாய்?
    My friend, on whom did you depend for assistance when you put up a picotta to irrigate the kár rice?
    An efficient picotta is worked by two, frequently by three men.

  3. ஆரோ செத்தான் எவனோ அழுதான்.
    Some one died: some one cried.

  4. ஆர் ஆத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்.
    In the morning it will be known whose mother is dead.

  5. ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக்கூடாது.
    Whomsoever you delay to pay, the debt of Mári must be at once discharged.
    Mári is the Goddess who presides over pestilence, &c.

  6. ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்?
    Whose family did you intend to ruin when you assumed the guise of a religious mendicant?

  7. ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி.
    No matter who pounds it if we obtain the rice.

  8. ஆலகால் விஷம் போன்றவன் அந்தரமாவான்.
    He who is as dangerous to society as the poison of a serpent will be ruined.

  9. ஆலசியம் அமிர்தம் விஷம்
    Indolence changes nectar into poison.

  10. ஆலமரம் பழுத்ததென்று பறவைக்கு ஆர் சீட்டனுப்பினர்?
    Who informed the birds that the banyan tree was in fruit?

  11. ஆலின்மேற் புல்லுருவி
    A parasite on a banyan tree.