Tamil Proverbs/ஐ

From Wikisource
Jump to navigation Jump to search
3764475Tamil Proverbs — ஐPeter Percival

ஐ.

  1. ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி இவன்.
    He is a broken grain fallen out of five kalams.
    One of a large number of insignificant persons.

  2. ஐங்காதம் போனாலும் அகப்பே அரைக்காசு கிடையாதே.
    Though you may go fifty miles, you will not fetch half a cash.

  3. ஐங்காதம் போனாலும், அகப்பை அரைக்காசு.
    Although it may go fifty miles, an agappai will fetch but half a cash.

  4. ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.
    Though one goes fifty miles off, an acquaintance is needed.

  5. ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.
    Though he may go fifty miles, his own sin will still cleave to him.

  6. ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
    Though cooked with five ingredients, the wild gourd will not lose its odour.
  7. ஐதது நெல், அடர்ந்தது சுற்றம்.
    In rice plants, distance is required, in kindred, closeness.

  8. ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.
    The price of five chits a small bird is two cash.

  9. ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.
    In October drizzling, in November heavy rain.

  10. ஐப்பசி மாதத்து வெய்யலில் அன்று உரித்த தோல் அன்று காயும் .
    In the sunshine of October a skin dries the day it is stript off.

  11. ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி தம்பிக்கும் சரி.
    If the rains of October and November fail, the elder and younger brother will be on a par.

  12. ஐப்பசி மாதத்து எருமைக்கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.
    A buffalo in the month of October and a Vaishnava brahman in December are alike.

  13. ஐம்பதிலே அறிவு, அறுபதிலே அடக்கம், அறுபதுக்குமேல் ஒன்றுமில்லை.
    At fifty discrimination, at sixty moderation, after sixty no distinguishing characteristic.

  14. ஐம்பது வயதானவனுக்கு ஐந்து வயது பெண்ணா?
    Is a girl of five fit to be the wife to a man of fifty?

  15. ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.
    Even the Aiyangar may communicate contagious disease.

  16. ஐயப்பட்டால் பைய நட.
    If in doubt, advance slowly.

  17. ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.
    Like the story of one who rode Aiyanàr's horse.

  18. ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.
    To do a doubtful thing is bad.

  19. ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
    Though reduced to beggary, learn to be wise.

  20. ஐயர் என்பவர் துய்யர் ஆவர் .
    Those who are entitled to be called brahmans are holy.

  21. ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா?
    Will the new moon await the brahman’s arrival?

  22. ஐயர் கதிர்போல அம்மாள் குதிர்போல.
    The husband is like an ear of corn, the wife is like a rice bin or grain receptacle.

  23. ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.
    As the potter perished in the army of Aiyanar.

  24. ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.
    The bricks of Aiyanar’s temple are so many gods.

  25. ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.
    Those who have trodden the ground of Aiyanar’s temple are so many Pidaris.

  26. ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.
    Come, Aiyanar, and accept a goat, a sacrifice.

  27. ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.
    No one may dispute the pre-ordination of god.

  28. ஐயோ என்றால் இவனுக்கு ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.
    The man who expresses commiseration for him will incur six months sin.