Tamil Proverbs/நி

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
நி
3770131Tamil Proverbs — நிPeter Percival

நி.

  1. நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும்.
    One thing ascertained will remove many evils.

  2. நிசாம் அல்லி தண்டில் நிசார்க்காரனைக் கண்டது உண்டா?
    Was any trousered sepoy seen in the army of Nizam Aly?

  3. நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும், நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும்.
    God will destroy the eyes of an oppressor, and a bribe will destroy the eye of an upright man.

  4. நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா?
    Do any weep when deaths are of daily occurrence?

  5. நித்தம் போனால் முற்றம் சலிக்கும்.
    If you continually go thither, even the court-yard will be weary of you.

  6. நித்தியக் கண்டம் தீர்க்க ஆயுசு.
    Constant trouble, long life.

  7. நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
    May new moon fare be expected daily?
    The proverb refers to the ceremonies which are performed, at the period of the new moon, in honour of deceased ancestors. On these occasions the household eat only once during the day, but the food is of a superior kind and prepared with great care in cooking utensils that are kept for sacred purposes. If a brahman be present he offers oblations of sesamum grain and water to the manes of the dead, naming each in order as fur back as the third generation.
    In some parts of India ceremonies supposed to affect the state of the dead are performed no less than ninety-six times every year. The ceremonies of the Ancient Romans of like kind are hinted at by Virgil and Horace as is known to the classical student.

  8. நித்திரை சத்துரு.
    Sleep is an enemy.

  9. நித்திரை சுகம் அறியாது.
    Sleep is unconscious of enjoyment.

  10. நிந்தனை சொல்லேல், நீதி கைப்பிடி.
    Speak no reproachful words, do justice.

  11. நிமிஷநேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.
    Momentary pleasure is inferior pleasure.

  12. நிமிஷ நேரம் நீடிய இன்பம்.
    A pleasure that lasts but a moment.

  13. நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.
    He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.

  14. நிமிர்ந்து போட்டது என்ன குனிந்து எடுத்தது என்ன?
    What is lost by an erect posture, and what gained by stooping!

  15. நிமைப் பொழுதேனும் இல்லை நீச உடல்.
    The vile body will not endure even for the twinkling of an eye.

  16. நிருவாண தேசத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.
    It were an act of folly to wear clothes in a country where all go naked.

  17. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடியவேண்டும்.
    Plants decay on the ground from which they sprung.

  18. நிலத்திற்குத் தகுந்த கனியும் குலத்திற்கு தகுந்த குணமும்.
    Fruit appropriate to the soil, and quality agreeable, to one’s rank.

  19. நிலம் கடக்கப் பாயலாமா?
    Can you clear the earth at a leap?

  20. நிலத்துக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.
    Like going to another country to escape from moonlight.

  21. நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.
    The words of the unstable are letters on water.

  22. நிலையிற் பிரியேல்.
    Swerve not from rectitude.

  23. நிலையை விட்டால் நீச்சு.
    When out of your depth, swimming.

  24. நில்லாத காலடி நீண்ட தூரம் போகும்.
    Ceaseless walking accomplishes great distances.

  25. நில்லாது ஏதும் நிலையே கல்வி.
    Learning alone is enduring, all else is evanescent.

  26. நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.
    The body may be compared to a shadow, and to theft,

  27. நிழல் அருமை வெயிலில் தெரியும்.
    The salubrity of shade is realized in sunshine.

  28. நிழல் நல்லது முசிறு பொல்லாதது.
    The shade is good, the ants are bad.

  29. நிறைந்த ஆற்றில் பெருங்காயம் கரைத்ததுபோல.
    Like dissolving assafœtida in a flooded river.

  30. நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.
    As an ass put its mouth into a full sack.

  31. நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.
    I do not want a kuruni heaped up, give me a kuruni of grain level with the brim.

  32. நினைக்குமுன் வருவான் நினைப்பதும் தருவான்.
    He will come before you think of him, he will give what you intend applying for.

  33. நினைத்த நேரம் நெடுமழை பெய்யுமா?
    Will heavy rain fall as we may wish?

  34. நினைத்தது இருக்க நினையாதது எய்தும், நினைத்தது வந்தாலும் வந்து நேரும்.
    When one thing is expected another may come, and that which is thought of may possibly come.

  35. நின்ற மரத்தில் நெடு மரம் போனால் நிற்கும் மரமே நெடுமரம்.
    When the lofty trees are felled, the remaining trees look tall.

  36. நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.
    The flood that was, has been swept away by the flood that followed.

  37. நின்றால் நெடு மரம் விழுந்தால் பனைமரம்.
    When standing, a tall tree, when fallen, a palmyrah tree.

  38. நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.
    If you fall as you stand, your head will be broken.