Tamil Proverbs/நூ

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
நூ
3766357Tamil Proverbs — நூPeter Percival

நூ.

  1. நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.
    Like making a garland of flowers without a string.

  2. நூல் கற்றவனே மேலவன் ஆவான்.
    The learned only will gain eminence.

  3. நூறு ஆண்டு ஆகிலும் கல்வியை நோக்கு.
    Though a hundred years old, diligently acquire knowledge.

  4. நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்கவேண்டும்.
    A hundred offences must be forgiven as if only six faults.

  5. நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்.
    The learning acquired in a hundred days, will be lost by six days neglect.

  6. நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணிகாரம்.
    Though the debt may increase to another hundred, bake the cakes in ghee.

  7. நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அரிகீரை.
    Though a hundred years old, he is only a young plant to the regent of the dead.

  8. நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.
    Those who will live to be a hundred, will not die at fifty.

  9. நூற்றுக்குமேல் ஊற்று, ஆயிரத்துக்குமேல் ஆற்றுப்பெருக்கு.
    After a hundred a spring, after a thousand a flooded river.

  10. நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.
    When he is worth a hundred, a word, when a thousand, a mere nod.

  11. நூற்றைக் கெடுத்தது குறுணி.
    One measure of chaff spoiled a hundred of grain,

  12. நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.
    Ascertaining the rules of the Veda, live virtuously.