Tamil Proverbs/நெ

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
நெ
3766358Tamil Proverbs — நெPeter Percival

நெ.

  1. நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?
    May one tell a lie knowingly?

  2. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
    There is no deceit which can be concealed from the mind.

  3. நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியும்.
    It will be known in the river, who is tall and who is short.

  4. நெடும் கடல் ஓடியும் நிலையே கல்வி.
    Though you may cross the broad sea your learning will remain with you.

  5. நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.
    Even a long day has a sunset.

  6. நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?
    What has a weaver to do with a young monkey?

  7. நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.
    As the ants swarm on a ghee pot.

  8. நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.
    If the ghee pot is broken, the dog has a feast.

  9. நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.
    The breaking of the ghee pot, is a hunting excursion to the dog.

  10. நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.
    Use ghee after melting, and curds diluted.

  11. நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்?
    Though it be but a thistle that has entered your foot, you must sit down, must you not, to pull it out?

  12. நெருப்பில் ஈ மொய்க்குமா?
    Will flies swarm in fire?

  13. நெருப்பினும் பொல்லாது கரிப்பின் வாதை.
    The distress of famine is worse than that of fire.

  14. நெருப்பிலும் பொல்லாச் செருப்பு.
    Shoes worse than fire.

  15. நெருப்பிலே புழுப் பற்றுமா?
    Will worms breed in fire?

  16. நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும்.
    A river of fire, and a bridge of hair.

  17. நெருப்பு இல்லாமற் புகை புகையுமா?
    Will there be smoke where there is no fire?

  18. நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நின்றாலும் நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.
    Something may possibly remain in a forest after a fire, but nothing remains after a flood.

  19. நெருப்பு என்றால் வாய் வேகுமா?
    By pronouncing the word fire, will the mouth be burnt?

  20. நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.
    Whether you tread on fire wittingly or unawares, it will burn you.

  21. நெருப்பைச் சேர்ந்த யாவும் அதன் நிறமாகும்; அதுபோல, பெரியோரைச் சேர்ந்தவரும் ஆவார்.
    Things put into fire partake of its colour, in like manner will it happen to those who join the great.

  22. நெருப்புச் சிறிது என்று முன்றானையில் முடியலாமா?
    May you tie fire in the skirt of your cloth because a mere spark?

  23. நெருப்பைத் தலை கீழாய்ப் பிடித்தாலும் அதின் சுவாலை கீழாகுமா?
    Although you carry fire head downwards, will the flame burn in that direction?

  24. நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ?
    Am I destined to carry both paddy and grass?

  25. நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக் கூடுமா?
    Will a mixture of paddy and salt be agreeable to the palate?

  26. நெல்லு வகை எண்ணினாலும் பள்ள வகை எண்ணக் கூடாது.
    Though one may enumerate the various kinds of rice, he cannot enumerate the varieties of the palla caste.

  27. நெல் விளைந்த பூமியும் அறியாய், நிலா எறிந்த இடமும் அறியாய்.
    You do not know a rice crop, nor a moonlight space.

  28. நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.
    It is useless to teach those who diviate from rectitude.

  29. நெற்பயிர் விளை.
    Cultivate rice.