Tamil Proverbs/நொ

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
நொ
3766362Tamil Proverbs — நொPeter Percival

நொ.

  1. நொடிப்போதும் வீணிடேல்.
    Lose not even a moment of time.

  2. நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் படைப்பானேன்?
    Why walk limping, and why offer oblations, to every god you see?

  3. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
    To slip is the excuse of the lame horse.

  4. நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து.
    Applying medicine to the sound eye, instead of to the one diseased.

  5. நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்.
    Those who are well versed in classical Tamil know not want.

  6. நொய் யரிசி கொதி பொறுக்குமா?
    Will bruised rice bear boiling?

  7. நொறுங்கத் தின்றார்க்கு நூறு வயது.
    Those who masticate their food, live a hundred years.