Tamil Proverbs/மி

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
மி
3768011Tamil Proverbs — மிPeter Percival

மி.

  1. மிகுதி ஆசை அதிக நஷ்டம்.
    The greater the inordinate desire, the greater the loss.

  2. மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை, வேதக்காரனுக்கும் உலகத்திற்கும் பகை.
    Enmity exists between the wealthy and the hypocrite, and between a religious man and the world.

  3. மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.
    Both, excess and want, lead to disease.

  4. மிகைபடச் சொல்லேல்.
    Do not exaggerate.

  5. மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது.
    It is not good for one to go westward carrying refuse.

  6. மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும்.
    A thing done through inadvertence may produce fear.

  7. மிடி இதயங்கொள் மீளாக் கதி தொடர்.
    Be humble, and seek unfailing bliss.

  8. மிடிமையிலும் படிமை நன்று.
    The habiliments of an ascetic are to be preferred before poverty.

  9. மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.
    The haughty sells his goods sitting.

  10. மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா?
    Are there any snakes that will not bite those who tread on them?

  11. மிருகங்களில் ஆனைபெரிது, அதிலும் சிங்கம் வலிது.
    Among beasts an elephant is the biggest, and a lion the strongest.

  12. மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். அதுபோல, அந்தம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.
    A shining arrow will occasion pain, in like manner, those who are handsome in person may produce pain.

  13. மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம்.
    It is said that a barber who had nothing to do, shaved a cat.

  14. மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?
    Does a fire fly dispel darkness?

  15. மின்னலைப்போல் பல்லை விளக்கானும், மினுக்கக் கொள்வானும் பதர்.
    He who will not clean his teeth so as to shine like lightning, and he who is fond of show, are chaff.

  16. மின்னாமல் இடி விழுமா?
    Does the thunder-bolt fall without previous lightning?

  17. மின்னாமல் மழை பெய்யுமா?
    Does it rain without previous lightning?

  18. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததுபோல.
    As a thunder-bolt fell without lightning and thunder.

  19. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
    All that glitters is not gold.

  20. மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.
    Lightning is always followed by rain.