திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/055.திருக்கண்ணெழில்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



55. திருக்கண்ணெழில்[தொகு]

நூற் குறிப்பு:-

என்னை ஆண்டு கொண்ட குருபரராகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் அருளடை படுத்த இரு திரு கண்களின் அழகைப் பாடுவது இப்பனுவல்.

காப்பு

நேரிசை வெண்பா

கண்ணகன்ஞா லத்திவர்ந்த கண்ணாளர் காருண்யர்
வண்ண வடிவழகார் மாண்புயர்ந்த - கண்ணெழிலைப்
பாடிப் பராவிடவே பாதமலர் காப்பாகும்
நாடிப் பணிந்தேன் நயந்து.

நூல்

நேரிசை வெண்பா

விண்ணகமும் மண்ணகமும் ஈடிணையில் மாட்சியரே!
அண்ணல்நும் சீரார் அருள்நயனத் - தண்ணளியால்
மன்னும் உயிருய்ந்தோம் மாதவரே! மெய்வழியில்
நன்னலங்கள் பெற்றோம் நயந்து (1)

நயமார் திருநயன நன்னோக்கால் மாந்தர்க்(கு)|r}}
இயல்பாம் பிறப்பாம் இறப்பாம் - துயர்தவிர்ந்தோம்
சாலை வளவரசே! சீர்திகழும் பொன்மேனி
கோலங்காண் கண்ணன்றோ கண் (2)

இரக்கம் அடைபடுத்த ஏரார் நயனம்
சுரக்கும் அருளால் சுரராம் - பரபோகம்
எய்தத் தயைபுரிந்த எம்மான் திருத்தாளில்
பெய்துயிருய்ந் தோங்கும் பணிந்து (3)

பணிந்தோர் பிறவிப் பிணியகல நோக்கும்
அணிதிகழெங் கோமான் அருட்கண் - கணிக்கரிய
காருண்யம் பொங்கும் கலைக்கதிபர் சாலையண்ணல்
பேருரைக்கப் போமே பவம் (4)

ரோகம் தரித்திரியம் துர்மரணம் ஆற்றொண்ணாத்
தாகம் கசப்புறலாம் முத்தாபம் - மாகதியர்
சாலைதெய் வச்சீர் திகழும் திருநயனச்
சீலத்தால் தீரும் தெளி (5)

ஆயிரமாம் சூரியரும் நாணும் அருள்நயனர்
தாயின்மிக் காங்கருணைத் தெய்வத்தின் - நேயமிகும்
நோக்கொன்றால் நான்மறையும் ஆறங்க மும்தெளியும்
தேக்கும் தவச்செல்வச் சீர் (6)

திரிபுரமும் தாமெரித்தார் சீர்நோக்கால் எங்கோன்
விரிகருணை பொங்கும் விழியர் - அரியயன் மால்
ஓருருவாய் வந்தருள்செய் உத்தமர்மெய்ச் சாலையண்ணல்
சீர்பாதம் என்றும் துணை (7)

ஈடில் கருணை இலங்கும் திருநயனர்
கோடி கடந்த குருகொண்டல் - வாடாத்
தவவாய்மை மெய்வழியர் சாலையண்ணல் நோக்கம்
சிவமாக்கும் நம்மைச் சிறந்து (8)

மதிகோடி யும்நிகரில் வள்ளல் நயனம்
விதியும் எமபடரும் வீயும் - கதியருளும்
ஆண்டவர்கள் சீரார் அருட்கண் கடைக்கணித்தால்
மீண்டுய்வர் ஜீவர் விரைந்து (9)

சர்வபுவ னாதியங்கள் தாம்படைத்து வாழ்வருளும்
பர்வதமா மேரு பரமேசர் - நிர்மலர்மெய்
சாலையண்ணல் நோக்கால் சகலவரம் தந்தருள்வார்
கோலங்கண் டுய்வீர் கனிந்து (10)

திருக்கண்ணெழில் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!