திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/064.திரு நாம மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



64.நாம மாலை[தொகு]

இலக்கணம்:-

தலை மகனைப் புகழ்ந்துரைக்கும் பாடற் பொருண்மையுடையது நாமமாலை.

மைந்தர்க் காயின் வஞ்சிப் பல்வகை
நேர்ந்த அடிமயக்கம் நாம மாலை
- பன்னிரு பாட்டியல் 176
அகவலடி யும்கலியி னடிமயங் கியவஞ்சி
யானவப் பாவினாலே
ஆண்மகனை யேபுகழ்ந் தேகருத்தளவினில்
ஆற்றுவது நாம மாலை
- பிரபந்த தீபிகை 11
அகவலடி கலியடியு மயங்கிய
வஞ்சியாற் புருடனை வாழ்த்திப் புகழ்வது
நாம மாலையா நாடுங்காலே
- முத்து வீரியம் 1053
நாம மாலையே நாயகன் தன்மையை
கலியடி அகவலடி கலந்து பாடலே
- பிரபந்ததீபம் 27

சர்வ உலகிற்கும் ஒரே தலைமகன், தெய்வம், எம்பெருமான் பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களே. அவர்களின் திருவருட் பெரும் புகழை விதந்து ஓதுவது இந்த நாம மாலை என்னும் சிற்றிலக்கியமாகும்.

திரு நாம மாலை

காப்பு

நேரிசை வெண்பா

நாமம்பல் கோடி நலந்திகழும் மெய்வழியர்
சேமநிதி ஆண்டவர்நும் சீர்புகழை - நாமம்ஆர்
மாலையெனப் பாட மகரிஷியே மெய்த்துணைசெய்
சீலமிகு செம்மலர்த்தாள் காப்பு

நூல்

சிந்தடி வஞ்சிப்பா அகவற்றூங்கல் ஒன்றிய வஞ்சித்தளை

அறவாழியர் அமுதாயினர் அகமேவினர்
மறலியமல் கெடவேசெயும் திடமாதவர்
அமலாண்மிகர் அருள்வானவர் அனந்தாதியர்
தமதாருயிர்க் குயிரானவர் தவமேரெனும்
உயர்மெய்வழி இறைவரெனும் எமதாண்டவர்
துயர்தீர்வுற வரமேதரு தனிநாயகம்
பவவெம்பிணி பறந்தோடிட எடுவாளினர்
சிவகொண்டலர் சிரஞ்சீவியர் திருமாமறை
தெளிவாகிட கழிபேருவ கையதேபெற
ஒளிவீசிடு கதிரோனிவர் பிறவாநெறித்துறைதரும்
ஒருதனித் தலைமையர் வழங்கிடும்
அருள்கொள இருள்கெட அடிமலர் துணையே (1)

நம்பியோர்பெயர் நம்பியஉயிர் நமனிடர்கெடும்
வெம்பிடும்கொடு வினைதவிர்ந்திடும் விமலரின்னவர்
செம்பொருளிவர் திருமலர்மொழி அருள்துறைதரும்
கொம்பரின்னவர் தம்பினேதொடர் தம்முளம்நிறை
உம்பரின்னவர் உலகிவர்ந்திடு உயர்சமரசம்
அம்போருகர் அடிமலர்படி அகிலமுய்ந்திடும்
எம்பிரானிவர் எமக்குரியவர் இடர்கடத்திடும்
வம்பியற்றெமன் வலிமையற்றிடும் மகிழ்உலகுறும்
தெம்பெமக்குற திருவிளங்கிடத் தவப்பலன்தரும்
கும்பகம்மென உயிர்ப்பமைவுறும் குலஇறையிவர்
பைம்பொன் மேனியர்
தம்பெரும் புகழ்தனைச் சாற்றிட
நம்பர்தம் நல்லுயிர் நாலாம் பதம்பெறும் (2)

மார்க்கமாமணி மகிழ்தனிகையர் மகவெனச்சொலும்
மார்க்கமதெலாம் மருவியொன்றிடும் வழியருள்பவர்
தீர்க்கமாயுரை திருவுயர்தவ மொழிநிறைவுறும்
ஆர்க்கவுமெழில் தரிசனைதரும் அறம்நிறைவழி
கார்க்குமாமெழில் திருக்கரத்தினர் கார்த்திகையராம்
மூர்க்கனாமெமன் முறிந்திரிந்திட வரமருள்தரும்
பார்க்கவும்பிற வியின்வெம்பிணி பறந்துஏகிடும்
சீர்க்கெலாமொரு திருவுமாயினர் தவமிகுந்தவர்
பார்நிவர்த்திசெய் பரமரைத்தொழல் பெரியபாக்கியம்
சேர்க்குமேதிரு மலரடிதனில் வணங்கிடுமவர்
அருள்பெறும்
நேரியர் ஆரியர் பாரினில்
காரியம் வீறிட் டெழும்வரம் பெருகுமே (3)

ஒருதனிமுதல் உயிர்ப்பிணிதவர் திருவுளம்கொடு
குருவுருவுடன் குவலயம்தனில் அவதரித்தனர்
அருட்கலைநிதி அமரரின்பதி அனைத்துயிர்க்கதி
குருமகான்மியர் குலகுருமலர்ப் பதம்பணிந்தவர்
பெருமிடர்எனும் எமன்படர்கடந் தினிதுஉய்குவர்
திருவுயர்பதம் நிலைபெறுமவர் நலமிகவுறும்
கருவழியினி இலையெனும்நிலை கனிவொடுபெறும்
இருள்வழியிலை ஒளியுலகினில் அமரரெனவே
மருவிடும்தரம் மகிழ்வொடுபெறும் மதிதெளிவுறும்
அருள்வரோதயர் உயர்ந்தமெய்வழி இறைவராண்டவர்
பதம் சிரம்
சூடுமின் பாடுமின் பணிமின்
நாடுமின் நலங்கிளர் மெய்வழி நண்ணுமே! (4)

இனியோர்கதி இலையேஇது நிலையாம்நிதி
தனிகைமணி கனியாமிவர் தவவான்கொடை
பனிமாமதி பதியாமிவர் பலகோடியர்
தனிமாமுதல் தலைவர்க்கினி இணையேதிலை
வரமோங்கிடு கரமேயுடை பரமேயிவர்
சரணாகதி யடைவோர்பெரு சுகவீடுறும்
மணியேமணி ஒளியேஒளிர் கதிரானவர்
அணியாயினர் அகமேநிறை அருட்ஜோதியர்
குணமாமணி குருகொண்டலர் குறையேதினி
மணம்கற்பக மலரானவர் மறையாசுகம்
வழங்கிடு மாதவர்
கொழுநிழல் சேவடி தனிலே
அழுந்தி மகிழ்ந்திரு ஆருயிர் செழித்தே! (5)

அனந்தாதியர் அகலாதுறை அமலோற்பவர்
தினமேபுதி யவராயினர் திருவோங்கிறை
வனமேஉறை பதிவானவர் மணிநாயகர்
இனமேஒருங் கிணைந்தோங்கிடு மியல்பாக்கினர்
அனந்தாதியர் எனுமெய்க்குலம் உருவாக்கினர்
மனமேயடங் கிடுமெய்ந்நெறி வகுத்தாக்கினர்
தனமேசிவ மதுநித்தியம் எனக்காட்டினர்
சினமேதவிர் குணமேநலம் எனக்கூட்டினர்
மனுவேஅம ரர்ஆம்நெறி வழியேற்றினர்
இனிச்சாவிலை எனுமாவரம் அருள்தேக்கினர்
எந்தைகாண்
விந்தையார் உய்வழி மெய்வழி
தந்தனர் சிந்தையுள் வந்துறை தெய்வமே (6)

அமலாண்மிகர் அருள்வானவர் அருட்ஜோதியர்
எமனால்வரு இடர்தீர்ந்திட வரமீந்தனர்
சிரஞ்சீவியர் சிவமேஒரு உருவானவர்
பரஞ்சோதியர் பவமாம்கடல் கடந்தேகிட
புணையானவர் புகழோங்கிடு பரமேஸ்வரர்
இணையாருமில் எனுமாட்சியர் இறைசூலிவர்
திருமாமறை அனைத்தும்தெளி வுறச்செய்திடு
பெருமானிவர் பெரியோரிவர் அறவோரெனும்
குருகொண்டலர் குலதெய்வமு மெமக்காகினர்
குருபரர்
அரும்பதக் காமீல் அண்ணலர்
பெரும்பதம் நல்கும் பெம்மான் எம்பிரான் (7)

அகமேநிறை அறவோரிவர் அமுதானவர்
ஜகதகுரு சுகவாரிதி சிரஞ்சீவியர்
பவவெவ்வினை பறந்தேகிடப் பதம்தந்தவர்
சிவமோர்பொரு ளெனவானவர் தேவாதியர்
தனிகைமணி தருமோர்பரி செனும்தேனகர்
இனிமைகனி இதமேபுரி இறைமாமணி
உயிருக்குயிர் எனமேவிய உயர்நற்றுணை
செயிர்தீர்வுறு செயலாற்றிடு தவமேவினர்
கனிகற்பக மெனுநற்றவர் கதியானவர்
தனிமெய்த்தவ தலைமைப்பதி தருமதுரைத்
தங்கமே
எங்குமே இன்னருள் பொங்குமே
அங்கமாய் ஏற்றனிர் அடிமலர் தஞ்சமே (8)

கயிலைச்சிவ கணநாயகர் கலைத்தூயகர்
அயில்வேற்கரர் அமராதிபர் அருளானவர்
தயவோருரு தவவானிதி திருப்பாற்கடல்
துயில்கொண்டருள் திருநாரணர் திருவுந்தியில்
மலர்த்தாமரை மிசைவீற்றிடு பிரம்மம்மிவர்
குலதெய்வமும் குருகொண்டலு மெனவானவர்
இலகாரெழில் திருச்சாலையில் உத்யோவனத்
தவமேவியர் தனிகைமக வெனவாயினர்
புவனம்மிசை பெருமாள்வுறு பரிசேபெறத்
தவனெம்பிரான் திருத்தாளினிற் சரணம்புரி
நெஞ்சமே!
கோதறு நெடுங்குடிக் கோமகன்
தீதறு மெய்வழித் தெய்வமே தஞ்சமே! (9)

பரமன்ஒரு உருவாகியிப் படிமீதுறு
பிரமன்எனும் பெருமானெனும் திருமாலெனும்
அருள்பொங்கிடு அறவாழியர் அருணோதயர்
மருள்வெங்கலி மருண்டோடிட வரமேதரு
குருமாமணி கமழ்செண்பக மணமேனியர்
ஒருமெய்வழி தருதந்தையர் உயர்விந்தையர்
பெருவிண்ணக நிதியிங்குறு அருட்தாயிவர்
இருளேதினி இலையேஇணை இமையோர்தவப்
பெருஞ்சாலையர் மலர்ச்சோலையர் மதிவானவர்
அருங்கோளரி திருவாளினர் எமையாண்டவர்
திருத்தாள்
அடைக்கலம் அன்பருள் படைக்கலம்
தடைக்குலம் வேரறத் தஞ்சமே! தஞ்சமே! (10)

திரு நாம மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!