திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/074.நல் சந்த மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



74.பல் சந்த மாலை[தொகு]

இலக்கணம்:-

பலவாகிய சந்தங்களைப் பெற்றுவரும் பாடல்கள் பலவற்றால் பாடப்பெறும் இலக்கியம் இதுவாகும்.

பத்துக்கொரு சந்தம் பாடிப்பா நூறாக
வைத்தறான் பல்சந்த மாலை யாம்
- பிரபந்தத்திரட்டு  - 6
பல் சந்த மாலையே பத்துச் செய்யுளில்
ஒவ்வொரு சந்தமாய் ஒருநூறு உரைத்தலே
- பிரபந்த தீபம்  - 28
பல் சந்த மாலை பப்பத்தொடு சந்தஞ்
சிலவந்தாதியாய்ச் செப்புமன் விருத்தம்
- தொன்னூல் விளக்கம்  - 275
பப்பத் தாகப் பல்சந் தத்தொடு
வீரைம் பான்பாட் டியல்வ ததுபல
சந்த மாலையாம் சாற்றுங் காலே
- முத்துவீரியம்  - 1054
அகவல் விருத்தம் வகுப்பாதல் பத்தாதி
யந்தம் நூறாகும் பல் சந்த மாலை
- சிதம்பரப் பாட்டியல்

பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருப்புகழ், பத்து வகையான சந்தங்களில் பல்சந்த மாலையாகப் பாடப்பெற்றுள்ளது.

நல் சந்த மாலை

காப்பு

கலிவிருத்தம்

நல்வ சந்தம் நமக்கருள் நாயகர்
தொல்ப ழம்பெரும் சீர்சிறப் பும்புகழ்
பல்சந் தமாலை பாடு விழைவினேன்
தொல்பொ ருள்அருள் தாள்மலர் காப்புகாண்!

நூல்

சந்தக்குழிப்பு 1
தன்ன தன்னன தன்னன தானன

காகபுசுண்டர்

கலி விருத்தம்

ஆதி தேவன்அ ருட்பெருக் காலிங்கண்
நீதி மெய்யை நிலைநிறுத் தும்தயை
வேத மோர்திரு மேனியர் தெய்வமாய்
நாதர் நானிலத் தேஅவ தாரமே (1)

நித்ய வாழ்வில் நிலைபெறல் தான்மனு
சத்ய நன்னெறி என்றமெய் ஓர்கிலார்
உத்த மஉயர் மெய்வழி ஓங்கவே
வித்து நாயகம் வையகம் மேயினார் (2)

புழுக்கம் வித்துஅண் டம்சினை என்றுநால்
ஒழுக்க மானபி றப்பிடம் அன்னவை
எழும்த ருக்கினம் புள்காலி ஊர்வனம்
வழுவில் ஜலம்வாழ் ஜந்தம ரர்மனு (3)

எண்பத் துநால்னூ றாயிரம் பேதங்கள்
மண்ண கத்தினில் வாழும் உயிர்களாம்
மண்ணு றையும் அவற்றுளே தான்மனு
விண்ண வராக வந்தனர் காண்மினே! (4)

நரரெ னும்நிலை தன்னில்பி றந்தனர்
சுரரெ னும்நிலைக் கேறிட வேண்டியே
அரன்இ ரங்கியிவ் வம்புவி போந்தனர்
தரம்தி றன்மனுப் போல்மேனி கொண்டனர் (5)

தேசம் காலவர்த் தமான மெண்ணியே
ஈசன் மேனி எடுத்திங்ஙண் போதரும்
நேசம் கொண்டு பணிந்தபேர் உய்ந்தனர்
வாச மெய்ம்மனு ஞானம்அ டைந்தனர் (6)

சதுர்யு கக்கலிக் கடையில்யு கவித்து
அதம்செய் தீமைகள் ஓங்க அதுகண்டு
புதுயு கம்செய் பரமருள் எண்ணியே
இதமு யர்தமிழ் நற்புவி போந்தனர் (7)

இங்ஙன் சாதிம தம்வெறி மண்டியே
எங்கும் கோரம் எழுந்திடர் செய்யவே
தங்க மேரு தடுத்தெமை ஆட்கொள
சிங்க மொத்துதி ருவரு கைசெய்யும் (8)

எம்பெ ருமான்வ ருகைசெய் காலமும்
உம்பர் கோனின் குலம்செயல் மாட்சியும்
தம்ப தம்கண்டு தீர்க்கத்த ரிசியர்
தெம்பொ டேயுரை செய்துவைத் தேகினார் (9)

பொன்ன ரங்கராய் எம்பிரான் போதர
வின்ன வெங்கலி வீய்ந்து மடிந்திட
தென்னன் சீர்பெருந் துறையெனு மெய்வழி
தன்னில் ஞானச்செங் கோல்செயிக் காலமே (10)

சந்தக் குழிப்பு 2
தானதன தானதன தானதன தான

கலித்தாழிசை

காகமுனி தீர்ககவுரை ஞானவிழி நோக்கில்
பாகுமொழி யால்உரைகள் பண்ணுமிரு லட்சம்
பூகயிலை தன்னிலிறை ஆதிமனு வென்னும்
ஏகனின்பு கழ்,பரவி இன்பவுரை கூரும் (11)

அத்தனவர் சொன்னதுசு யம்எனது சாட்சி
முத்திதரும் மேநிலையில் மார்க்கரிஷி தெய்வம்
வித்துதனின் நாயகமென் பாரறிவர் அன்னோர்
சித்திதரு சாலைவளர் தெய்வமவர் தாமே! (12)

மூலகண பதியவர்வி நாயகமோர் நாமம்
ஞாலமிசை நன்குஅவ தாரமது செய்தார்
சீலமிகு சீர்வணக்கம் அன்னவர்க்கே என்பார்
கோலமிகுத் யோவனத்துக் கோமகனார் அவரே! (13)

ஆதிமனு மேனிகொடு அம்புவியி லுற்று
நீதியைநி லை நிறுவு நித்தியரும் இவரே!
வேதியராம் ஆணெனவும் மெய்யறி வுளாக்கி
சேதியுரை காகமுனி செப்புவது சத்யம். (14)

ஆர்க்குமெழில் ஆதிமனு அற்புதநன் நாமம்
மார்க்கரிஷி மாமுனிவர் என்றுரைகள் செப்பும்
தீர்க்கு(ம்)பவ வெவ்வினைகள் தீர்ந்தொழியும் இந்நாள்
கார்க்கும்தீ கைகொண்ட கர்த்தரவர் எம்மான் (15)

தன்னுலக மேவிடியும் சார்ந்துதொடர்ந் தோர்க்கு
பொன்னுலக பூரணம தாகு(ம்)உப தேசம்
தன்னெழில்வ யங்குகின்ற ஞானபதி பாசம்
முன்னிலையர் பண்டிதர்வி ளங்கு(ம்)பிர சாசம் (16)

கருணையரிவ் வுலகில்வரு தாளைவணங் காதோர்
வருணமிலை மெய்ந்நிலையைக் கண்டவர்கள் பார்ப்பார்
அருணயந்த ஆதியிவர் அத்தனெனும் சித்தர்
திருமிளிரப் பணிபவர்கள் சீருயரும் முத்தர் (17)

சீலமிகு தெய்வமணி தந்தஉயர் பரிசு
மூலமெனு மந்திரமே மிக்கஉயர் செல்வம்
ஆலமது உண்டசிவம் அத்தனருள் நீதி
கோல(ப்)புது கோட்டையரு கேயமரும் கோமான் (18)

திருநாமம் காலைமதி யம்மாலை செப்பில்
பெரும்பாக்யம் வருகாலம் திருவோங்கும் என்று
அருளாரும் வணக்கஙக்ள் அத்தனுயர் மாட்சி
பெருஞாலம் முழுதாளும் பெற்றியது காண்மின் (19)

ஜீவமுத்தி உண்டென்பர் செகத்தோர்கள் இதுகால்
தேவநிலைத் தேகமுத்தி உளதென்று அறிமின்
பூவுலகில் இதுகாறும் பேசறியாப் புதுமை
ஆவுடையார் அருண்மக்கள் அற்புதத்தைத் தெளிமின் (20)

சந்தக்குழிப்பு 3
தான தான தனதான
தான தான தன தன னா

சொராஸ்டிர நாயகம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

வாரும் உலகீர் வளர்ஞான
வாக்யம் உரைப்பேன் செவியேண்மின்
தீரும் அறியா மையதுவும்
ஜெனனப் பிணியும் மாரணமும்
கூரும் தீர்ப்பு நன்னாளில்
குறைதீர் குழுமம் தனில்புரியும்
சீரும் சிறப்பாய் மறுஉலக
சிருஷ்டி துவங்கும் நல்லிரே!
(21)

காலச் சக்ரச் சுழற்சியது
கடிதே முடியும் முன்சிருஷ்டி
கோலம் திரிந்து பரிசுத்த
ஆவி தெய்வம்அ கூர்மஸ்த்தா
சீலம் கொண்டு பட்டயத்தைத்
திருவார் கரத்தில் ஏந்திவரும்
ஞாலம் காக்க வருபவர்தம்
நாமம் சோஷி யாஸ்ஆமே
(22)

பரிசுத் தாவித் தெய்வமெனும்
பெம்மான் சாலை ஆண்டவர்கள்
தரணி மிசைநம் முன்னிலையில்
சிறப்பாய்த் திகழ்தல் காண்மின்கள்
அரிய மெய்ஞ்ஞா னம்ஒன்றே
அகிலந் தனிலே நிலையாகும்
இரியும் தீமை எலாநலமும்
இலங்கும் புவியில் என்றென்றும்
(23)

தீர்க்கத் தரிசி யர்ஆவோர்
சோஷி யாஸ்குக் கீழ்ப்படிவோர்
ஆர்க்கும் சமூகத் தாயவர்கள்
அவலக் கலியை வெறுத்திடுவார்
கார்க்கும் துணையாய் நின்றிலங்கி
கடைநா ளில்மீட் பருள்வார்கள்
யார்க்கும் இறுதி நற்றுணையே
எம்மான் சாலை ஆண்டவரே!
(24)

நடுத்தீர் வையென் றுருக்குமுக
நெடுஞ்சோ தனையொன் றுண்டாகும்
கடுந்தேர் வதனில் இறைபெருமான்
கள்ளர் நல்லோர் தமைத்தெளிவார்
படுவர் தீயோர் பெருந்துன்யம்
பக்தர் சுவர்க்க பதம்பெறுவார்
நடுவர் ஆஷா அர்மதியும்
நாதர்க் குதவி யாயிருப்பர்
(25)

ஞான மாலி ஓளிர்ந்திலங்கும்
நாடு நோக்கி நாசகர்கள்
ஈன மனத்தோர் இடும்பரவர்
எழும்பிப் படைகொண் டேவருவர்
ஆன நாட்டில் பயிர்வளரா
அநியா யம்மே மிக்கிருக்கும்
ஊனப் படுத்த விரைந்திடுவான்
உலகில் கலியன் ஆட்சிமிகும்
(26)

பரிசுத் தாவித் தெய்வத்தின்
பலன்பே றுஞ்செங் கோல்வருகும்
தரிசித் திறைவர் தாள்படிந்தோர்
சாவா வரமும் தவப்பலனும்
பரிசாய்ப் பெறுவர் பாருலகில்
பண்பா டுயர்ந்த குலமாவார்
அரிதாம் அமரர் வாழ்வடைந்து
அழியா ஐஸ்வர் யம்பெறுவார்
(27)

சுத்தம் வடித்துத் தெளித்தெடுத்துச்
சுகந்தம் பதித்த இதயமுளோர்
அத்தன் தாளை அடைந்திங்ஙன்
அமல ராகிச் சிறந்திருப்பார்
முத்தி நடனம் இறையருள
மெய்த்தெய் வத்தடி யார்பெறுவார்
சித்தம் தெளியார் சிறுமையுறும்
தேவ மக்கள் பெருமைபெறும்
(28)

நல்லோர் சுவன உலகிலுறும்
நாச காலர் நரகேகும்
வல்லார் இறைவர் ஒருவரெனும்
மதிகொண் டோர்க்கென் றும்இன்பம்
அல்லல் இல்லார்க் கோர்மகவு
அங்ஙண் உண்டா கும்அவர்கள்
நல்லார் வர்க்க வானென்று
நவில்வார் தீர்க்கத் தரிசனமே
(29)

மெய்யாம் வழியே நின்றிலங்கும்
மேலாம் மாணாக் கர்ஆவர்
பொய்யே அழிந்து பட்டொழிந்து
புதுமெய் உதயம் செய்திலங்கும்
எய்தும் எல்லா நல்லவரும்
இறவாப் பெரும்பே ரின்பமுறும்
ஐயர் திருத்தாள் அடைக்கலமே
அதுவெங் கலிவெல் படைக்கலமே
(30)

சந்தக்குழிப்பு 4
தான தான தான தான
தான தான தனன னா

எழுசிர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

வெற்றி யார்க தாயு தம்மே
விளங்கும் பொற்க ரத்தினில்
நற்று ணையொன் றின்ப நாதர்
நானி லமுற் றுய்யவும்
நற்ற வர்சித் ரம்மே சானா
நன்மை செய்யும் தலைவராம்
குற்ற மற்ற மெய்வழிக்குள்
கொண்டு சேர்க்கும் திண்ணமே
(31)

பொய்யொ ழிந்து போகு மிங்ஙண்
மெய்மி கைத்து மேவுமே
ஐயர் சாலை ஆண்டவர்கள்
ஆளும் தெய்வ நீதமாம்
துய்ய இன்பம் நல்ல திர்ஷ்டம்
சொல்ந யம்சா வாவரம்
எய்த ரும்த வப்ப லன்கொள்
இன்ப நாடர் என்றுமே
(32)

ஸ்ரீ நாரத மகாமுனிவர்

ஜதத்கு ருமாரான கல்கி
ஜெகத்தி னில்மீண் டும்வரும்
ஜகத்கு குருசீ தளிப்பொய்கை
அரசியை மணம் கொளும்
ஜகத்கு ருசம் பாலா நகரம்
வந்து பிரசங் கம்செயும்
ஜகத்கு ருதான் வடக்கி லேகித்
தவச்செ யலில் ஓங்குமே
(33)

மின்ன லைவி டவும் வேகம்
கொண்ட அஸ்வ மேறுமே
பொன்ன ரங்கர் ஏழு வானம்
பூமியில்ச வாரியே
இன்னல் செய்யும் தீமை யென்றும்
இங்கி லாது ஏகுமே
அன்னை யோடு நைமிசா ரண்யம்
போய்த்தி ரும்பும் வாளுடன்
(34)

ஸ்ரீ புத்த பகவான் அவர்கள்

காலச் சக்க ரம்பு துமை
செய்யும் வேலை வந்ததும்
ஞால மீதில் காவி யாடை
புனையும் கண்ணிய வான்களே!
சீல மோங்கு தீர்ப்பர் நீதி
நடவு செய்யும் முடிவிலே
கோல மோங்கு பூமி யிஃது
அடியொ டேய ழிந்திடும்
(35)

இமய மதுவும் எரிந்து அழியும்
பிரம்ம உலகு தோன்றிடும்
சமயம் யுகத்தின் வித்துக் கென்று
சிறிய திட்டு மீந்திடும்
இமய வர்கள் என்னும் அனந்தர்
இடையில் பேதம் வேண்டிலை
தமரு கந்து அன்பு நேசம்
கொண்டு வாழ்தல் உய்வழி
(36)

ட்ஸ் ஜியான் வேதம்

மீட்பர் வந்து பூமி தன்னில்
விளங்கு மாட்சி காண்மினே
ஆட்கொள் தெய்வம் தேர்ந்த மக்கள்
மூன்றில் இரண்டு பங்கினர்
வேட்கை யாம்ரு சியும் வசதி
காமத் தேட்டில் இச்சையால்
மாட்டி யேம யங்கி மாள்வர்
என்று ரைப கருமே

(37)

ஸ்ரீ அகத்திய மாமுனிவர்

செண்ப கப்பூ வாச முள்ளாள்
தேவி வாலை தேன்மொழி
பண்ப கத்தி பார்பு ரக்கும்
அன்னை மார்க்கக் காரியாம்
ஒண்பு கழ்மிக் கோங்கும் கற்பின்
உத்த மித்தாய் ஆனவள்
விண்ம கள்இவ் வைய கத்தில்
மெய்வ ழிகொ ணர்ந்தனள்
(38)

வைய கத்தில் எண்ணி லாத
மொழிகள் உண்டு ஆயினும்
மெய்வ ழிக்குள் ஆக்கும் பாஷை
சாலை மெய்த்த மிழ் இஃது
உய்ய வேண்டு மாந்தர் கள்உ
வந்து வந்து கற்றுய்மின்
செய்வ ழிக்குள் ஆக்கு மாறு
சேதி கூறும் என்றுசொன்ம்
(39)

சரியை கிரியை யோகம் ஞானம்
சாற்று மிந்த நான்கினும்
உரிமை கொண்டு உய்ய வேண்டு
உத்தம தபோ தனர்
அரிய சாலை மெய்த்த மிழ்அ
றிந்து கற்று உய்மினே
பெரிய தைப்பெற் றுய்மின் கள்பே
ரின்ப சித்தி மேவுமே
(40)

சந்தக்குழிப்பு 5
தான தந்தனன தான தந்தனன
தான தந்தனன தானன

அஸ்மா ஆலத்தரசராகிய எஸ்கிலாஸ் தீர்க்கத்தரிசி அவர்கள்

எழுசிர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

காலச் சக்ரமெனும் கோள்தம் விக்கிரகம்
தெய்வ மென்னும்வழி பாட்டிலே
ஞால முற்றுமுள மக்கள் தாமயங்கி
ஞான மெய்ம்மையறி யாமலே
சீலர் தேவகுரு சமுகத் தாயவர்கள்
ஆதி அந்தமெனத் தோன்றுமே
கோல தீர்க்கவுரை எஸ்கி லாசவர்கள்
கூறும் செய்தியிது கேண்மினே!
(41)

அவத ரித்துவரும் ஆதி நாயகியே!
ஆங்கிலன் எல்லையில் வாழ்ந்துபின்
பவப்பி ணிதவிரப் பெரிய தாயவர்கள்
புதுமெய்க் கோட்டையது சார்ந்துள
தவத்தி ருத்தலமாம் ஊறல் மாமலைசார்
உத்தி யோவனத்தில் தங்குமே
நவத்தி ருப்பதியைப் பொன்ன ரங்கமென
நாட்டும் ஞானச்செங் கோலதே
(42)

செம்பொருள் கண்ட சிபில் மாதரசியர் அவர்கள்

தேவ ஆவியெனும் தங்கச் சந்ததியிப்
பூமி தன்னில்வர லானதே
தேவ சூரியராம் தெய்வச் சீர்குமரர்
தாங்கள் வந்துஅவ தாரமே
தேவ தேவர்திரு தரிச னைபெறுமின்
செல்வ சம்பத்துண் டாகுமே
தேவ தர்மமிகும் சற்குணம் சுசிலம்
சுகிர்தம் புண்ணியம்வ ளருமே
(43)

தெய்வ நற்குழவி தன்னை வண்ணமலர்
கொண்டு வந்தினிது வாழ்த்துமின்
உய்வ ழியருள வந்த சீர்மதலை
தன்னைப் போற்றுபவர் ஓங்குமே
துய்ய வானரசு சிவந்த நீலஉடை
தரித்து ராஜரிகம் மிளிரவே
ஐயர் பேர்தகைமை ஓங்கஇவ்வுலகு
அனைத்தும் காக்கவரு மாட்சியே
(44)

வண்ண வாசமலர் பூத்த பேரெழியால்
வைய முற்றும லங்காரமே
அண்ணல் வீரமிக ஓங்கிப் பாடுமிசை
ஆர்ப ரம்பரையின் மாட்சியே
விண்ணின் மைந்தர்எனும் வித்து நாயகமே
வாரும் வாருமெனப் பாடுவோம்
மண்ணில் மாதரசி சிபிலும் பாடுவதற்
கெவரும் எங்கும்நிக ரில்லையே
(45)

வல்லர் தெய்வமணி போற்றும் இன்னிசையே
வான்மு கடுவரை எட்டுமே
அல்லல் வெம்பிணிகள் தொல்லை நச்சினர்கள்
இல்லை யில்லையினி இல்லையே
நல்ல கண்ணியர்கள் நாட்டில் புண்ணியர்கள்
நன்று வாழ்வுறுவர் இன்பமே
செல்லம் எங்களுயிர் தேவ கோமகனை
சிந்தை யாரப்புகழ்ந் தேத்துவோம்
(46)

அண்ணல் ஆதிசங்கரர் அவர்கள்

அன்னை ஆதியுன தக்னி தத்துவத்தை
ஆஸ்ர யித்துத்துதி செய்கிறோம்
நின்னை ஜோதியுரு வாகக் கண்டுயிருள்
நீடு இன்பமதில் மூழ்குவோம்
இன்னல் தீருமினி இன்ப வாழ்வதுவும்
என்றும் பூமியில்நி லைக்குமே
தென்ன கத்துவரு மகதியே நினது
சீர்ப ராவுமுல குய்யுமே
(47)

மதிவானரசு மார்க்கண் டேயர் அவர்கள்

கல்கி யேஉலகு காக்கும் நின்னருளால்
கலக்கம் நீங்கிபுவி யோங்குமே
நல்கி ரியைசெய் பிரம்ம நாயகரை
நாடிச் சூழ்ந்து பணிதேற்றுவோம்
எல்லை யில்கருணை வாரியே உலகில்
தர்ம நல்யுகமே தோன்றுமே
அல்ல வைதவிர நல்ல வாழ்வுபெற
ஆக்கும் தெய்வமதை வணங்குவோம்.
(48)

ஞானசைதன்யத் தரசர் சுப்ரமணியர் அவர்கள்

நானி ருக்குமிடம் காட்டுவா ருயிரும்
தானி ருக்குமிடம் நாட்டுவார்
கோனெ னும்குருவின் காட்சி மாட்சியினைக்
காட்டி யின்பமிக ஊட்டுவார்
தேனார் மெய்வழியின் சீரோர் மார்க்கரிஷி
நாதர்உங்களையே போற்றுவோம்
ஞான சைதன்யராம் செந்தில் நன்மணியர்
நவிலு தீக்கதரி சனமிதே
(49)

திரிகாலம் கண்ட திருமூலர் அவர்கள்

இருதி ருக்கரங்கள் சன்ன தம்மிலங்க
ஈடில் ரத்தினநல் ஆடைகள்
திருசி ரம்மதினில் சீர்கி ரீடமதும்
திகழ மாட்சி மையும் ஓங்குமே
குரும கான்மியரின் கோதில் காட்சியெழில்
கண்டு சிந்தைகனி கூருமின்
அருள்மெய்ச் சீர்வழியின் ஆண்டவர்திருவாய்
அரிய போதமதைக் கேண்மினே
(50)

சந்தக்குழிப்பு 6
தனதந்த தான தனதந்த தான
தனதந்த தான தனன

ஞான சத்திமுத்து மாகாளி அம்மன் அவர்கள்

எழுசிர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

திருகொண்ட அன்னை மாகாளி செப்பும்
திடதீர்க்க தரிச னம்காண்
அருள்நின்ற அண்ணல் அறவாழி இந்த
அகிலத்தில் தீமை தீர்த்து
பொருள்மெய் நிறைந்து புதுமை சிறந்த
பொன்னின் அரங்கர் இதுநாள்
குரு கொண்ட லென்று வருகைபு ரிந்து
குலம்காக்கும் மாட்சி அறிமின்
(51)

கலிசெய்த தீங்கால் நலிவுற்ற ஞாலம்
கலக்கத்தை எய்தும் இதுகால்
வலிவுற்ற எந்தை கழலார விந்தம்
மண்மேற்ப படிந்து நடந்து
நலிவுற்ற மாந்தர் தெளிவுற்று மெய்ம்மை
நலம்பெற்று ஓங்க அருளி
வலிபெற்ற ஏமன் வலிவற்று வீய
வரமீயும் தெய்வம் போற்றி!
(52)

கபீர்தாசர் அவர்கள்

கலைபொங்கு காட்சி கவின்கோடு கண்ட
கபீர்தாசர் தீர்க்க வுரைகாண்
நிலைநின்ற மெய்யின் நகர்தன்னில் நாதர்
குருகொண்டல் நற்றாள் பற்றில்
நலம்விண்டு மாற்றிப் பிறப்பித்துத் தேவ
நிலைக்கேற்றி அன்புத் துறவின்
பலம்பண்பு செப்பும் பரமேசர் இந்தப்
பவம்தாட்டும் வல்லர் அறிமின்
(53)

சிம்மா சனத்தில் திருவீற்றி ருக்கும்
தேவாதி தேவர் பிரபை
அம்மா பெரிது அழியாத ஊற்று
ஆறங்கு பெருகும் இனிதே
பெருமானின் பாதம் பணிந்தோர்கள் எல்லாம்
பிறப்பும் இறப்பும் அறுவர்
அம்மாவிண்அத்தன் அருள்ஞான சூர்யன்
அன்புள்ளோர் வந்து பணிமின்!
(54)

வீரபோக வசந்தராயர்

அறவாழி நந்தம் அருட்ஜோதி தெய்வம்
அளவற்ற ஆற்றல் உடையார்
பிறவா நெறிக்கு உளவாக எய்த
பெரும்பாக்யம் ஈவர் இறைவர்
நிறைவாய் மகிழ்ச்சி மிகநம்மை எண்ணில்
நீள்மாட்சி யோக முறுமே!
அறவீர போக வசந்தாதி ராயர்
அழகாரு நாமம் உடையார்
(55)

உலகீரே! வம்மின் உருக்கொண்டு தெய்வம்
உவந்தேவந் திங்ஙண் இனிதே
நலம்யாவும் இங்கு நிறைவேற்றி ஆளும்
நாதாந்தர் காண்மின் பெரிதே
வலம் கொண்டு ஏமன் தனைவென்று மெய்யாம்
வழிதந்து காக்கும் இறைவர்
தலமிங்க னந்தர் குலம்தந்து கானம்
தனிலாட்சி செய்யும் அண்ணல்
(56)

உலகெங்கும் தர்மம் நிலைகுன்றி மாந்தர்
உழல்கின்ற துன்ப மிகவே
நலமின்று பூமி விளைவின்றி எங்கும்
நற்சாரம் மாறி அழிவாம்
பலம்குன்றி நாசம் பலவாகு காலம்
பரமேசர் மெய்ம்மை உதயம்
நலம்என்றும் எங்கும் வளம்பொங்கு மாட்சி
நிலைநின்று யாவும் இனிமேல்
(57)
இறைஒன்று என்ற நெறிநின்று மெய்யே
எழில்பொங்கு ஆட்சி நிலவ
மறைவேந்தர் ஞான மணிவாய்மை ஐயர்
மதியோங்கு கற்ப சுகிர்தர்
நிறைஆட்சி பீடம் தனில்வீற் றிருந்து
நிகழ்த்தும்மெய்ஞ் ஞானச் செங்கோல்
அறை கூவி உம்மை அழைக்கின்றேன் வம்மின்
அரன்பாதம் பற்றி உய்மின்!
(58)

பொலிவுற்ற ஞாலம் பவப்பாரம் மிஞ்சி
அழிவுக்கு ஏகு தருணம்
கலிமுற்றி எங்கும் கொடுயுத்தம் மேவும்
கதிருக்குள் ஓட்டை காண்மின்
வலுமிக்க தெய்வம் கலிக்கோ ளறுத்து
மிகு வெற்றி கொண்டு வருநாள்
உலகத்தில் மெய்யே நிலவச்செய் மாட்சி
உணந்தோர்கள் வம்மின் உய்மின்!
(59)

சாதிக்குள் பேதம் சமயத்தின் போர்கள்
சகமீது பல்கி அழிகால்
வேதித்து வையம் நீதிக்குள் ளாக்கி
மெய்யாட்சி என்றும் நிலவ
சாதிக்கும் வீர போகத்தின் ராயர்
சாலைக்கண் ஆளு கின்றார்
ஆதிக்கு முன்னர் ஆதிமெய் யண்ணல்
ஆண்ட வர்பாதம் போற்றி!
(60)

சந்தக்குழிப்பு 8
தன்னான தன்னான தனதான தனதான
தன்னான தன்னான தன்னான தான

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

விண்ணான மெய்தெய்வம் வியன்பூமி யில்வந்து
விளங்கிச்சி றந்துஅ றஞ்செயல் செய்தல்
மண்ணில்மாந் தர்கள்காண் கின்றிலிர் வந்திங்கு
வணங்கிப்ப ணிந்துவ ரம்பெற்று உய்மின்
எண்ணத்தில் தீங்காவி ஏறாமல் காத்தங்கு
எந்தைபி ரான்தன்னைப் போற்றுமின் நல்லிர்!
அண்ணல்அ றவாழி அவர்சார்ந்த மக்கட்கு
அந்தகன் தீங்கொன்றும் வாராது சத்யம்
(61)

தென்னன்பெ ருந்துறைச் சீமானைச் சார்ந்தோர்கள்
சுவர்க்கத்தின் சந்ததி என்றாகும் இங்கே
விண்ணினில்ப் பிரணவப் பட்சியா சனத்தேறி
விளங்குவர் ஞானம்து லங்குவர் காண்மின்
பொன்னின் அரங்கண்ணல் போற்றுமின் மாந்தரீர்
பொற்பதிக் காளாகும் நற்பேறு கொண்மின்
அன்னியம் இல்லாத அன்பேறும் பண்பாளர்
அறமோங்கும் அந்தணர் அருட்தாள்கள் பற்றும்
(62)

அடிபேரி கைகொட்டி அறைமிகள் உலகீர்க்கு
அருள்வீர போகவ சந்தரா யர்தான்
கொடிநாட்டிப் பயில்காட்டி மாந்தர்க்குப்பேரின்ப
போகம்வ ழங்கவந் துள்ளார்கள் என்று
விடிவெள்ளி தோன்றிற்று மெய்ச்சாலைக் கதிரோனும்
விளக்கம் பொலிந்துத யம்செய்தார் என்று
படிமீது மண்ணாற்கு டிசைகள் கட்டியே
பரமேசர் சீடர்கள் வாழ்கின்றார் இங்கே
(63)

கணக்கற்ற கிரணங்கள் ஓளிவீசப் பொலி ஞான
கதிரோனின் வெளிச்சத்தில் களிப்போடு வாழ்ந்து
வணக்கத்தின் பலன்பெற்றுத் தவத்தேறி வளர்வுற்று
வான்தேவ மக்கள்யாம் அனந்தாதி தேவர்
மணக்கும்செண் பகவாசர் திருமேனி தெய்வத்தின்
மலர்த்தாள்கள் போற்றிசெய் கின்றோமிங் ஙினிதே
குணக்கற்ற நெறிமெய்யாம் வழியிந்தப்புவிதன்னில்
கோதற்று ஓங்கோங்க வென்றேயாம் வாழ்த்தும்
(64)

மயிலாடும் குயில்கூவும் கிளிகொஞ்சும் உத்தியோ
வனச்சாலை தவராஜ்யம் தனில்மெய்யாம் தெய்வம்
இயல்வை குண்டத்தை இங்கேகொ ணர்ந்துள்ளார்
இசைந்தம தியோர்க்கு நிசமிங்கு தவழும்
துயரில்லை எமனில்லை சுகமுண்டு என்றென்றும்
திங்கள்மும் மாரிதான் பெய்யும்மெய்த் தெய்வத்
தயவுண்டு உயிருய்ய வம்மின்கள் உலகீரே!
தருமத்தின் யுகந்தோன்றும் அதிசயம் காண்மின்
(65)

உயிர்வாழ்க்கை என்றெண்ணி உடலுக்கு உணவீந்து
உறவாடிக் கடனுக்கு உயிர்மாயும் உலகே
உயிருக்கு உணவொன்று உளதென்று அறிமின்கள்
உயிர்வாழ்வு இத்தோடு முடிவாவ தில்லை
துயரற்ற சுகபோகத் துறையுண்டு மெய்யீயும்
துணைவந்து தனைத்தந்து கரையேற்று விப்பார்
அயர்வற்று அரன்பாதம் அகலாது புகல்கொண்டால்
அறவோர்தம் இணையோடு பெறுவாரிம் மாட்சி
(66)

வஞ்சம்கொள் வம்பர்க்கு நெஞ்சாணி யொத்தார்காண்
வல்லார்க்கு வல்லாரென் மாதேவர் தெய்வம்
தஞ்சம்என் றுற்றோர்க்கு தகையோங்கு துணையாவர்
தவமேரு சிவஞானம் தருமெங்கள் கோமான்
அஞ்சாமல் கலிவென்று அமரர்க்கு நலம்தந்து
அழியாத வரந்தந்து அருள்செய்யும் அண்ணல்
மிஞ்சாது இதுவின்றி வேறோர்திட் டுலகத்தில்
மெய்வாழ்உத் யோவனத் திருப்பொன்ன ரங்கம்
(67)

சந்தோஷம் இங்கன்றி சகமீதில் இலையில்லை
சர்வேசர் திருமேனி திருக்காட்சி நல்கும்
வந்தோர்கள் பெற்றார்கள் வாராதார் நீறானார்
மாட்சிமை நல்கும்மெய்ச் சாலைஆண் டவர்கள்
சிந்தா குலமில்லை திருவோங்கு தவவாழ்வும்
செழிப்பேற்றி மறுவாழ்வு தருவார்கள் அண்ணல்
நந்தாவி ளக்கென்ன நற்றேவர் கூட்டங்கள்
நாதர ருள்பெற்று நலவாழ்வுற் றோங்கும்
(68)

திருவாரும் அறவேந்தர் கழல்பற்றிக் கடைத்தேற
தேவர்கள் அனைவோரும் வம்மின்கள் இங்கே
பெருகோசை விரிக்கின்ற எக்காளத் தொனிகேட்டு
பெருமானின் அருளாண்டு உருவாக வம்மின்
தருவான கற்பகத் தடியில்நின் றினிதிங்கண்
சர்வவ ரம்கொள்ள சீரோரே எழுமின்!
குருவான திருக்கோலம் கொண்டார்கள் முழுமுதல்
கொண்டாடி மகிழ்வோங்கிக் கதிகொள்ள விரைமின்!
(69)

காற்றாலும் மழையாலும் அழிவிந்தப் புவிதன்னில்
கடுகிவந் திடர் செய்யும் கொடுமைஎன் சொல்கேன்
ஏற்றாண்ட தம்மக்கள் இன்னல் கொள் ளாவண்ணம்
எம்மான்குக் குடம்போல இறக்கைக்குள் காக்கும்
மாற்றான்வெம் மறலிகை தீண்டாத வண்ணம்மே
மணிவாணி மன்னர்காத் தருள்புரி கின்றார்
ஊற்றாக ஆகாய கங்கைபொங் கியிங்கே
உயிரின்ப யிர்செழித் தோங்கச் செய்தனரே!
(70)

சந்தக்குழிப்பு 8
தனதானன தனதானன தனதானன தனனா
தனதானன தனதானன தனதானன தனனா

கலித் தாழிசை

வடலூரதில் இனிதளுகை செயுமாதவ நல்லார்
வள்ளற்பிரான் வரைந்திட்டநற் றிருவாயுரை கேண்மின்
அடலேறென திருச்சாலையில் அருட்ஜோதியர் வருவார்
அனைத்துமதம் குலமொன்றென அரியசெயல் புரிவார்
திடஞானமெய் வழிதன்னையே தரணிதனில் கொணர்வார்
செயிர் மாரணம் இலதோர்நெறி தருசாலையர் இவரே!
நடமேபுரிந் தேறும்நிலை மிசையேற்றிய அருளே
நமைக்காத்தருள் புரிஜோதியர் திருஆண்டவர் தயவே!
(71)

உண்மைப்பெரு நெறியாகிய சுத்தம்முயர் மார்க்கம்
உரிமைப்பெரு நிறைநேயமொ டான்மாவினுள் ஒருமை
உண்மைக்கட வுள்தாம்திரு வுளங்கொண்டொரு சபையை
உருவாக்கிட திருக்கோலமொ டுடலுள்ளமும் குளிர
மண்மீதினில் பெரும்புண்ணியம் உடையோரென வாய்க்கும்
மகிழப்புதுத் திருக்காட்சிகள் அருட்கேள்விகள் அறிவும்
ஒண்மெய்பெற சுகபூரணப் பெருவாழ்வது தருகும்
உயர்ஆண்டவர் வருவாரிது சத்யம்இது சத்யம்
(72)

இதுநாள்வரை கர்மசித்தர் காலம்இனி வருநாள்
இயல்மெய்யுயர் ஞானசித்தர் தனின்கால மிதாகும்
மதஜாதிகள் ஆசாரங்கள் பிறபேதங்கள் யாவும்
மடிந்தேவிடும் சமச்சீர்நிறை வழியாகிடும் இனிதே
இதன்மேற்பட மறையாகமம் புராணமதில் லட்சியம்
இனிவேண்டுதில் இறையுண்மையை மறைத்தேயவை உரைக்கும்
அதுஆண்டவர் வருநாள்உரை தெளிவாகிடும் அறிமின்
அதனால்சம யம்சாத்திரம் தனில்லட்சியம் வேண்டாம்
(73)

குருகொண்டலென் றுருகொண்டொரு அருள்மேனியர் வருவார்
கோதில்திரு ஞானம்மது குறைவின்றியே அருள்வார்
பெருலாபமும் பேரின்பமும் பெரும்பேரறி வதுவும்
பெறஈந்திடும் அருள்ஆண்டவர் திருச்சாலையில் உதயம்
தருணம்மிது சன்மார்க்கமே துலங்குமிது காலம்
தெளிவித்திடும் அறிமெய்ப்பொருள் தருமெய்க்குரு கோலம்
திருவார்அருட் செங்கோலது புரிவார்தனித் தலைவர்
திருந்தியுடன் எழுந்தேவரில் சுகவாழ்வது பெறுவீர்!
(74)

சன்மார்க்கமே உலகில்உறும் சமயம்மத பேதம்
சாதிக்கொரு ஆச்சாரமும் தவிர்த்தேஒழிந் தேகும்
நன்மார்க்கமாம் பெருசீர்வழி ஒழுக்கம்மது விளங்கும்
நமக்கேயது தென்பாகமெய் வழிச்சாலையே அதுவாம்
முன்மூர்த்திகள் கடவுள்அடி யார்தேவர்கள் சித்தர்
முனியோகியர் கர்த்தர்தலை வர்என்பவர் அல்லர்
இன்னோர்மிக எதிர்பார்த்திடு தனித்தந்தையாம் தலைமை
இனியபெரும் பதிதெய்வமாம் எழில்ஆண்டவர் காண்மின்
(75)

இன்பாலுல கம்கண்டிடு ஈடில்தயை மிக்கார்
இறவாவரம் தருவார்அவர் அருள்ஆண்டவர் தக்கார்
தென்பாலுள திருசாலையில் சித்தாடிடு தெய்வம்
திருநாளிது தொடர்வோருயர் வரம் பெற்றினி துய்யும்
அன்பால்விளை ஞானம்மது அருளால்பெறு வரமே
அகத்தேதெளி வுற்றோர்க்கிது அமையும்மிது தெளிமின்
என்பால்வரு இன்னோர்க்கருள் ஈகின்றனன் என்றே
இறைஆண்டவர் இறைவாக்கருள் அருட்சாலையர் நன்றே
(76)

அருளார்நெறி சன்மார்க்கமென் றறைமின்உல கெங்கும்
அதுசெந்நெறி அனைத்தையுமே அன்போடுஉள் வாங்கும்
திருவார்நெறி தென்பால்விளங் கிடுசாலையில் விளங்கும்
செம்மல்இளை சிவகொண்டல்மெய் வழிச்சாலையில் துலங்கும்
வருவார்தவ மிகுமேருவாம் அருளாண்டவர் வந்து
வணங்கிப்பணிந் திடுவோர்க்கினி இறவாவரம் தந்து
குருகோமகன் அருள்நாமணி குலதெய்வமே வருவீர்
குறையாநிதி அருளாள்பதி வரமேமிகத் தருவீர்
(77)

வழியென்பது திருமெய்வழி உயிர்உய்வழி சார்மின்
வள்ளால்உம தன்பால்எமை மகவன்பொடு கூர்மின்
அழிவில்நெறி அகிலந்தனில் அமலர்தரு ஏற்றம்
அமரர்பதி அருளால்வில கிடுவான்கொடுங் கூற்றம்
எழிலோங்கிடுமே தவமேருவின் இணையில்தவக் காட்சி
எல்லோர்க்குமே எல்லாமருள் இறைஜீவருள் சாட்சி
பழியாகிய எமனின்படர் பயந்தோடிடு மாட்சி
பண்போங்குமெய் வழிஆண்டவர் செங்கோல்திரு ஆட்சி
(78)

உயிரானது அடங்குமெனில் எரியூட்டிட வேண்டாம்
உறக்கம்கொளும் மாந்தர்தமை எரியூட்டிடல் உண்டோ?
அயல்வேஷர்கள் ஆஷாடர்கள் அதுபுண்ணியம் என்பர்
அந்தோகொடு மைகாணிது அடக்கம்செயல் நன்றே
மயல்கொண்டவர் சினம்கொண்டுதற் கொலைசெய்வது முண்டு
மறலிதுயர் தனைஎண்ணிடார் மயக்கம்கொளல் எண்ணாம்
துயரம்அறு தொலைநோக்குடை சபைமெய்வழி சார்மின்
தயைஆண்டவர் தரப்பெற்றுயர் அடக்கம்கொள ஆர்மின்
(79)

இறந்தார் உயிர் எழுவார்தயை இறைநன்கருள் புரியில்
இதுஎண்ணியே சார்மின்உயர் இயல்மெய்வழி நெறியில்
துறந்தார் அரசெமதாண்டவர் மதசாதியுட் பேதம்
தவிர்த்தார்புலை கொலைசூதுகள் பெருகாமமும் புகையும்
மறந்தார் உயர் சன்மார்க்கிகள் மதியோங்குநன் நெறியே
மறுவற்றுவர் குருபெற்றவர் திருவுற்றவர் அறிமின்
சிறந்தாருயர் பேரின்பநற் பெருவாழ்வினில் திகழ்ந்தார்
தனிப்பேர்கரு ணைவாரிதி சாலைஆண் டவரே!
(80)

சந்தக்குழிப்பு 9
தந்தன தந்தன தந்தன
தந்தன தான தான

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

வள்ளற்பிரான் திருக்காப்பிட் டுக்கொண்ட
இருபத்து ஏழாம் ஆண்டில்
தெள்ளியசீர்த் திருச்சாலை ஆண்டவர்கள்
திருவோங்க வருவா ரென்று
உள்ளமதிற் தெளிவாக உணர்ந்துகொண்மின்
உலகீரே! உண்மை சத்யம்
கள்ளமொன் றில்லாதவுரை கழறுகிறேன்
கேண்மின்கள் கதிபெற் றுய்மின்
(81)

எங்குமென்றும் கண்டறியாக் காட்சிகளும்
கேட்டறியாக் கேள்வி மற்றும்
பொங்கிவரும் மெய்ஞ்ஞானப் பேருண்மை
உணர்வுகளும் உணர்மின் மக்காள்
இங்கெவரும் மெய்ஞ்ஞானப் பேருண்மை
பேரின்ப சித்தி வாழ்வு
துங்கஎழில் சாலைவளர் ஆண்டவர்கள்
தந்தருள்வார் பெறுமின் இன்னே
(82)

கங்குல்பகல் அற்றநிலை கருதரிய
சித்திகளும் உணர லாகும்
துங்கமணித் துரியாதீ தத்வநிலை
தந்தருள்வார் சுவர்ண மேனிப்
பங்கினராய்ப் பரிமளிப்பீர் பாருலகும்
வாணாளும் போதும் போதும்
செங்கமல திருத்தாளர் தெய்வமணிக்
காட்பட்டோர் நீடு வாழ்க!
(83)

எங்குமிலா இன்பமது நம்பால
தாகுமென்று அறிமின் மக்காள்
கங்கணமுத் திரைகாப்பு கரங்களினில்
பன்னிருசன் னதங்கள் தாங்கி
பொங்கிவரும் பிரளயத்தைத் தாம்நடத்தி
யுகத்தீர்ப்பு செய்து அண்ணல்
இங்குபுது யுகம்புரக்கும் என்சாமி
எனதுரை சாலை தெய்வம்
(84)

வழிவழியென் றேயுரைத்து மக்களின்
மனத்தையுமே கெடுத்த தீய
அழிமாறிப் பொய்ப்பயல்கள் அறமழித்து
அறவோரை அலைக்க ழித்த
பழிகாரக் கும்பலினைப் பாதகத்தை
வென்றாண்ட பரமர் தெய்வம்
எழிலரசாம் எங்கோமான் இணைமலர்த்தாள்
சிரம்பதித்து வணங்கும் போற்றும்
(85)

மேதினியில் மெய்ஞ்ஞானம் தளிரவந்து
துளிர்இலங்கும், சழக்கர், மெய்ம்மை
ஏதினியிங் என்னும்வரை இழந்துவிட்ட
அதுகாலம் அவத ரித்து
நீதியினை நிலைநாட்டி நிட்டூரர்
குலமழித்து நீள்மெய்ஞ் ஞானம்
ஆதியிறை கொணர்ந்தார்கள் அகிலமிசை
அடிபணிந்தேம் வணங்கி யேத்தும்
(86)

எத்தனைபா டருமுயற்சி இடர்க்குவைகள்
ஏறிவந்து அழிக்க மேவ
அத்தனையும் அழித்தொழித்து அம்புவியில்
ஒன்றிறைவன் குலமும் ஒன்றே
முத்தனைய திருவாக்யம் நிறைவேற்றும்
முழுமுதல்வர் சாலை தெய்வம்
அத்தனிவர் சாலைஆண் டவர்தாள்கள்
அகங்குழைந்து பணிந்து போற்றும்
(87)

மறையனைத்தும் தெளியவொரு வகைபுரிந்து
அறம்வளர்க்கும் மாட்சி மிக்கார்
இறையுருவர் பொன்னரங்கர் எம்பெருமான்
கொடிநாட்டிப் பயில்கள் காட்டி
துறையறிவித் தாண்டருள்செய் துரையெங்கோன்
அருட்ஜோதி தெய்வம் தூயர்
நிறைமணிமெய் வழிச்சாலை ஆண்டவர்கள்
அடிநிழலிற் படிந்து வாழ்வோம்
(88)

செத்தார் எழுவாரென்று கைத்தாளம்
போடவைத்த சித்த சாமி
அத்தாஎ னக்கருள்செய் ஆனந்தத்(து)|r}}
ஆண்டவர்காண் அவர்தம் மாட்சி
எத்தால்உ ரைத்திடவும் ஏலாது
எம்பிறவி மக்காள் கேண்மின்
முத்தான முழுமுதல்வர் முனிக்கரசு
மலர்த்தாள்கள் சரணம் தஞ்சம்
(89)

சன்மார்க்கத் திற்குரிய சற்சனரே
மீண்டெழுப்பப் படுவர் நாளை
நன்மார்க்க நாதரெனும் நற்றவர்மெய்ச்
சாலைவள நாடர் எங்கோன்
பொன்மார்க்கப் பொற்பதியர் இப்பெரிய
செயல்செய்வர் அவர்தாள் போற்றி
இன்மார்க்கம் இயல்பதியெம் பெருமானே
தயவருள்வீர் இறைவா! போற்றி!
(90)

சந்தக் குழிப்பு  10
தனதனன தானத்தான தனதனனத் தானத்தான
தனதனன தானத் தானன

தேவசிங்காசனர் சடகோபரவர்கள்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

கற்குங்கல்விக் கெல்லையில்லை கற்குக்கல்வி யானே என்றும்
கற்கும்கல்வி செய்வேன் யானெனும்
கற்கும்கல்வி தீர்ப்பவரும் கற்கும்கல்விச் சாரம் நானென்
றேயுரைத்த கல்வி நாதரே
உற்றாரெனக் காருமில்லை உற்றாரெனக் கெல்லோரும்காண்
உற்றார்களைச் செய்வேன் நானெனும்
உற்றார்கட்கு உற்றேன்யானே உற்றாரை அழிப்பேன் நானென்று
உற்றதெய்வம் நன்குரைப்பர் காண்
(91)

கோலம்கொள் சுவர்க்கம்மோட்சம் கோலமில்ந ரகம்யானே
கோலம்கொள் உயிரும் நானெனும்
கோலம்கொள் தனிமுதலும் கோலம்கொள் அனைத்தும்நானே
கோலம்கொள் கோமானே உரைக்கும்
ஞாலத்தில் நடக்கும்நன்மை தீமைகட்கும் காரணங்கள்
நானென வுரைக்கும் நாதர்காண்
சீலமோ டவதரித்து செய்வினைக்க லியழித்து
செகம்புரக்கும் சாலை தெய்வமே!
(92)

விதிகடந்த வித்தகர்மெய்ச் சாலையருள் வேந்தர்காண்மின்
விதியைத்தெய்வம் மதியால் வெல்லுவார்
பதியவரே பல்லுயிர்க்கும் பசிதவிர்த்து பரிபலிக்கும்
பரமர்மனுப் போலுருக் கொண்டு
அதிசயங்கள் பலவும்காட்டி ஆருயிரின் நிலையும்காட்டி
அற்புதம்செய் பொற்பகர்தெய்வம்
கதியருள்வார் மதிமணிநா மாதவத்தார் வேதியராம்
காருண்யர் கழல்கள் போற்றுவோம்
(93)

கைவார தீர்க்கத்தரிசனம்

ஆதியென்னும் பிரம்மமிங்கு அவதரித்து வையகத்தை
அறநெறியில் ஏகச்செய் வர்காண்
சாதிபேத இருட்பரப்பைத் தாமொழித்து அருளொளியால்
சமரசப்ர காசம் விரித்து
நீதியற்ற மதவெறியை நீணிலத்தில் தூண்டிவிட்டு
நேசமற்று நீதம் விட்டோர்கள்
வாதம்மிக்கு அலையும்நாளில் மகதியையர் யாவுமொன்றாய்
மாற்றியமெய் மாட்சி என்சொல்வேன்
(94)

முகலாய வம்சமதில் முழுமுதலும் அவதரிப்பார்
மென்மேனி செண்பக வாசமே
சிகையதுவெண் பனியனைத்து திருவுருவம் எலுமிச்சை
திருவுயர்வண் ணம்மிளிருமே
மிகவுநீண்ட திருக்கரங்கள் முழந்தாளின் முட்டுவரை
மிக்கெழிலைக் காட்டி யிலங்கும்
பகலவன்ஆ யிரவரின் பிரசாசம் கொப்பளிக்கும்
பைந்தமிழில் தோன்றும் பகவான்
(95)

அண்ணல்திரு வாயினின்று இருபுறமும் கருக்குள்ள
பட்டயம் வெளிப்படுமென்பர்
வண்ணர்திருத் தாள்கள்வெண்க லம்உருக்கி வார்த்தனபோல்
மிக்கப்பிர காசம் ஓளிரும்
விண்ணவர்திருவாயொலி வெள்ளமதின் இரைச்சலைபோல்
மிக்கப்பெரும் சப்தமிலங்கும்
மண்ணகத்தோர் குலம்ஜாதி மதத்தவரும் ஒன்றிணைந்து
மாதேவர் தம்மைப் போற்றுவார்
(96)

வெற்றுமுரண் டாட்டமில்லை வேடிக்கைக்காட் சிகலில்லை
மண்குடிசை வாழ்வே நிகழும்
முற்றதிசை ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையெங்கும்
முத்தர்சித்தர் அன்பனந்தர்கள்
வெற்றிபெற்றோர் புலன்களைவென் றடக்கியாண்ட வீராதி
வீரர்செங்கோல் ஆட்சிபுரிவார்
கொற்றவர்ஏழ் எக்காளம் துந்துமி இசைத்தினிது
கோதில்அர சாட்சி நிகழ்த்தும்
(97)

பீற்றலென்னும் குடிசையிலும் பெருமான் புகுந்தொளிர்ந்து
பேரின்பந் தந்தாட்சி புரிந்து
ஆற்றல்மிக்கார் அன்புருவார் அருள்கனிந்து வரமளித்து
அரவணைத்து அன்புரைவிண்டு
கூற்றொழித்துக் கோபுரத்தில் ஏற்றிவைத்துக் காணரிய
காட்சிகளும் காண வைத்தனிர்
ஏற்றமிகு என்துரையே! என்சாமி! என்காமீல்
இணையடிகள் தஞ்சம் தஞ்சமே
(98)

உண்டென்றெ லாம்தெளித்து நன்றென்றெலாம் கொடுத்து
ஓங்குமெய்ம்மை ஞாலமுய்யவே
அண்டருக்க ரசர்சாலை ஆண்டவர்கள் பொற்பதியர்
அனைத்துவரம் கொண்டு தந்துமே
தொண்டரித யத்தொளிர்ந்து தூமணியாசனத்தோங்கும்
தேவதேவே பாண்டி நாடரே
எண்டிசையும் கண்டறியா எந்தைபதம் போற்றுபவர்
என்றும்நித்ய வாழ்வில் நிலைப்பர்
(99)

முன்னைக்கும் முன்னைப்பொருளே! முழுமுதலே! முனியரசே!
மோனசபா முத்திக்கு வித்தே!
பின்னைக்குமப் பெற்றியரே! பேரின்பமே! பேரரசே!
பொன்னரங்கப் பொற்பதியரே!
அன்னையுமாய் அத்தனுமாய் அருட்குருவாய் ஆன்றதேவாய்
அனைத்துமாய் நின்றிடுமரசே
என்னையுமே ஓர்பொருளாய் ஏன்றதனிப் பெருங்கருணைக்
கென்கடவேன் போற்றி! போற்றியே!
(100)

நல் சந்த மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!