பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு -{۔ 34 سینہ எண்ணிக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டே - நேரங் கழிக்கும் பேர்வழிகளைப் போன்றவர்கள். உண்மையான திறனாய்வாளர் கவிதைகளைத் துய்க் கும் ஆற்றல் பெற்றவர்; அவர் கவிதைகளில் உண்மையை யும் அழகையுமே காண முயல்வார். தாம் காணும் ஒரு சில குறைகளை ஒரு பக்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கவிதைகளைப் படைத்த கவிஞர்களின் அருகில் வாழ விரும்புவார்; அவர்களுடைய பெருமையில் தம்மையும் வைத்துக் காண முயல்வார்; விழைவார். இவ்வாறு ஆரா யும் திறன் எளிதல் கைவரப் பெறுவது அன்று. இதற்குப் பயிற்சியும் வேண்டும்; ஒழுங்கும் கட்டுப்பாடும் வேண் டும். பல காலம் ஒழுங்காய்க் கட்டுப்பட்டுப் பயின்ற இலக்கியப் பயிற்சியுடையவர்க்கே இத்திறன் வாய்க்கப் பெறும். குறைகளைக் காண்பது மிகவும் எளிது; கம்பன், இளங்கோ போன்ற மேதையர்களிடமும் குறைகளைக் கண்டுவிடலாம். ஆனால், அவர்களைப் போல் உன்னத நிலையிலிருந்து கொண்டு மானிட வாழ்க்கையைப் பரந்து காணும் திறனை யாவர் பெற முடியும்? கவிதைகளில் பொருள்களின் தன்மையை விட அக்கவிதைகளைப் படைத்த கவிஞர்களின் உணர்ச்சிகளே சிறப்பிடம் பெறு கின்றன; அவர்கள் காணும் அழகும் வாழ்க்கை உண்மை களுமே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. கவிஞர்கள் அவ்வப்போதைய மனநிலைக்கேற்ப, அவ்வக் காலத்து சூழ்நிலைக்கேற்பப் பல்வேறுபட்ட உணர்ச்சிகளை உடையவராக இருப்பர். இத்தகைய வேறு பட்ட உணர்ச்சிகளைக் கொண்டு தாம் மேற்கொண்ட பொருள்களின் அழகைக் கற்பனை செய்து பாடுவதனால் தான், அக்கவிதையில் புதுப்புதுக் காட்சிகளைக் கான முடிகின்றது; நாமும் அக்காட்சியின் அழகில் ஈடுபட்டு அநுபவிக்கின்றோம். இடையிடையே காணும் வாழ்க்கை யைப் பற்றிய உண்மைகள் நம்மை வியப்புக் கடலில்