Tamil Proverbs/வி

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
வி
3805063Tamil Proverbs — விPeter Percival

வி.

  1. விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.
    If the sky withholds rain, not a blade of grass can be seen.

  2. விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.
    It is said that a devout crane died from wandering about.

  3. விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.
    If she be faithful, even a harlot will prosper; if he be honest, even the low born will flourish.

  4. விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.
    It is said that a devout cat carried away the dried fish.

  5. விஷத்தைக் குடிக்கப் பாலாமா?
    Will poison when drunk turn into milk?

  6. விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.
    Poison is the medicine of poison.

  7. விஷம் தின்றால் கொல்லும்.
    If poison be swallowed, it will kill.

  8. விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.
    He who has swallowed poison must take pepper water.

  9. விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.
    Though they may take poison, the faithful will not die.

  10. விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?
    Which is the more destructive, poison or sin?

  11. விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.
    A physician is necessary to counteract poison, and God, to remove sin.

  12. விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.
    You must go to Srírangam to understand that Vishnu is great.

  13. விஷ்ணுவைப் பெரிது என்பார் ஸ்ரீரங்கத்தில், சிவனைப் பெரிது என்பார் அருணாசலத்தில்
    The inhabitants of Srírangam say that Vishnu is great, those of Arunasalam, say that Siva is great.

  14. விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர், சிவனே பெரிது என்பார் சிலர்.
    Some profess that Vishnu is all in all, while others maintain that Siva is the greater of the two.

  15. விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.
    Vishnukarantai-Sphœranthus Indicus-is a specific remedy for fever.

  16. விடாத மழை பெய்தால் படாத பாடு படவேண்டும்.
    Should it rain unceasingly, intolerable suffering would follow.

  17. விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.
    Unceasing rain stops leaks.

  18. விடிந்தால் தெரியும் மாப்பிள்ளை குருடும் பெண் குருடும்.
    It will be known at day-break whether the bridegroom or the bride is blind.

  19. விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?
    Does the woman require a veil even after sunrise?

  20. விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.
    As one asked what relationship existed between Ráma and Sita, after listening to their history till day-break.

  21. விடியற்காலம் கலியாணம், பிடி அடா தாம்பூலம்.
    The marriage will take place at dawn, thou fellow, take betel.

  22. விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.
    Though the unfortunate may find work, he will not get his hire.

  23. விடியுமட்டும் இறைத்தவனும் விடிந்தபின்பு சாலை உடைத்தவனும் சரி.
    He that draws water till day-break, and he that breaks his bucket at day-break, are on an equality.

  24. விடியுமட்டும் மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது.
    Though it may rain till day-break, a potsherd will not germinate.

  25. விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.
    He flits about like a grass-hopper.

  26. விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.
    Unceasing driving rain is preferable to intermitted showers.

  27. விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.
    The pleasure of the wood-apple ceases with the shell.

  28. விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்.
    It is said that he who went to point out the heavens, returned to shew his eyes.

  29. விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?
    What is become of your ostentation, and where is your guitar?

  30. விண்ணுமாலைக்குக் கலியாணம் விழுந்து கொட்டடா சாம்புவா.
    O, thou tomtom beater, Vinumal is to be married, fall down and beat your tomtom.

  31. விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.
    One may escape a thunderbolt, but he cannot escape the effects of an evil eye.

  32. விண்தொடு கொடிமூடி மேருவும் வீறளி தென்திசைக் கிரியும்.
    Meru whose summit reaches to heaven, and the merit giving mountain on the south.

  33. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
    If the sky fail, the earth will fail.

  34. விண் வலிதோ மண் வலிதோ?
    Which is the more powerful heaven or earth?

  35. விதி போகிற வழியே மதி போகும்.
    The mind will follow destiny.

  36. விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.
    A viper will bite him whose prescribed term of life is at an end.

  37. விதியை மதியால் தடுக்கலாமா?
    Can destiny be averted by prescience?

  38. விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்
    A boaster if he die, cannot return to life.

  39. வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.
    Out of nothing, nothing comes, whether above or below.

  40. வித்துவானுக்கு எது பரதேசம்?
    What country is foreign to a man of learning?

  41. வித்துவான்களுக்கு எது பெரிது?
    What is difficult to the learned?

  42. வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள்வந்து கொத்தோடே தைத்ததாம்.
    The sapient old mother-in-law is said to have got foul of the thorny cactus, when she went to gather firewood.

  43. வித்தை அற்றவன் அழகு வாசனை இல்லா முருக்கம் பூப்போல.
    The beauty of the unlettered, is like the inodorous Muruku flower.

  44. வித்தை விரும்பு.
    Desire learning.

  45. வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி.
    She is a hypocrite, and idle;—she is that old thief that sold págal fruit.

  46. வித்தையடி மாமி விக்குதடி பணிகாரம்.
    O thou pretending mother-in-law, cakes stick in my throat.

  47. வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற்றுப்பெட்டி.
    Of arts sorcery is the easiest, of textures the pastry boiling basket.

  48. வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.
    It is said that an hypercritical hen has its bile in its chest.

  49. வித்தையுள்ளவன் பெரியவன்.
    He who is learned, is truly great.

  50. விநாசகாலே விபரீத புத்தி.
    Bent on destruction by a strange fatality.

  51. வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
    Litigation is a pole planted in mud.

  52. வியாதிக்கு மருந்து உண்டு விதிக்கு மருந்து உண்டா?
    Medicine may be had for a disease—is there any for destiny?

  53. வியாதியிலும் மருந்து கொடிது.
    The medicine is worse than the disease.

  54. விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?
    Is fasting more meritorious than penance?

  55. விரதம் கெட்டாலும் சுகம் தக்கவேண்டும்.
    Though the penance may prove ineffectual, one must have regard to his comfort.

  56. விரலுக்குத் தக்க வீக்கம்.
    The swelling will be proportioned to the size of the finger.

  57. விரல் உதவி விருந்தினர் உதவார்.
    Guests are not as serviceable, as are one’s fingers.

  58. விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்?
    If the finger swell to the size of a rice mortar, how large will the mortar be when that swells?

  59. விரல் போகாத இடத்தில் உரல் போமா?
    Can a mortar pass through an opening which is not large enough to admit a finger?

  60. விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.
    There are few on the face of the wide world who are wise.

  61. விருது கூறி வந்து செடியில் நுழையலாமா?
    Anxious for fame, may one crawl under bushes?

  62. விருதுக்கோ வேட்டை ஆடுகிறது?
    What, hunting, to acquire fame?

  63. விருத்தாசலம் போனால் திரட்பாவம் போகும்.
    Pilgrimage to Viruttáchalam will expiate great sins.

  64. விருந்து இட்டுப் பகை தேடுகிறது.
    Seeking enemies by means of hospitality.

  65. விருந்திலோர்க்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்
    The inhospitable are destitute of agreeable manners.

  66. விருந்து இல்லாச் சோறு மருந்து.
    Food without hospitality is medicine.

  67. விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.
    Win your enemy by hospitality.

  68. விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.
    Hospitality and medicine must be confined to three days.

  69. விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
    Can that which is unattainable by ambition, be attained by mere boasting?

  70. விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
    Will the bottle gourd spring up when a different seed is sown?

  71. விலக்கக் கூடாத துன்பத்திற்கு விசனப்படாதே.
    Do not fret about disagreeables that cannot be averted.

  72. விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக்கொண்டதுபோல.
    Like being put in the stocks after liberation from chains.

  73. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.
    It befits a harlot to make her person shine.

  74. வில் அடியால் சாகாதது கல் அடியால் சாகுமா?
    Will that which resisted the stroke of a bow, die by the pelting of stones?

  75. வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?
    Why should a man without a bow seek arrows?

  76. வில்லம்போ சொல்லம்போ?
    Is it an arrow or sarcasm?

  77. வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை.
    If you shoot an arrow when the bow is not sufficiently bent, the enemy will not retreat.

  78. வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.
    In archery Vijaya, in horsemanship Nakula.

  79. வில் வளைந்தால் மோசம் தரும்.
    The bending of a bow is dangerous.

  80. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசி போக.
    They eat vilvam fruit to remove biliousness, and palmyrah fruit to appease hunger.

  81. விவேகத்தின் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்.
    It is the excellence of discretion to avoid indiscretion.

  82. விழலுக்கு இறைத்த நீர்.
    Water drawn for coarse grass.

  83. விழித்தவன் கன்று நாகுகன்று தூங்கினவன் கன்று கடாக்கன்று.
    The calf of the man who watched is a female; that of him who slept is a male.

  84. விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?
    Why put your hand on a tottering wall?

  85. விழுங்கின ரசம் வயிற்றில் இராது.
    Swallowed mercury will not remain in the stomach.

  86. விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.
    No time to lift up the child that has fallen down.

  87. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.
    Though he has fallen down, he says that his mustache is not soiled with dust.

  88. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
    What, a silk tassel for a broom?

  89. விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிரப் பிள்ளை பிழைப்பது இல்லை.
    The child did not survive,—it was only waste of oil.

  90. விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.
    Though one roll himself in sand, after applying oil to his body, he cannot make a larger quantity of sand adhere to his body.

  91. விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்.
    It is said that what he uses for the head is lamp-oil.

  92. விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?
    What, falling into a well with a lighted lamp in the hand?

  93. விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ?
    Does any one place a lighted lamp on the floor?

  94. விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறதுபோல.
    Like wandering abroad for fire, while there is a lighted lamp in the house.

  95. விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில்போல.
    Like a grass-hopper fascinated by a lighted lamp.

  96. விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.
    If a simpleton go for firewood, though it be found, a creeper to bind it into a bundle will not be found.

  97. விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.
    A playful child will not fear venomous reptiles.

  98. விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
    Originating in playfulness it ended seriously.

  99. விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.
    Things prepared by playful children never come home.

  100. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
    The future crop is known in the germ.

  101. விறகு கட்டுக்காரனுக்கு நாரை வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது ஒன்றேகாற்பணம் விற்கும்.
    If a crane cross a firewood man from left to right, what he sells ordinarily for a fanam, will fetch a fanam and a quarter.
    If a crow fly on the right of one going out of his house, he is sure to meet with success. If on the left, he will not obtain what he seeks.

  102. விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?
    Will firewood not ignite, because crooked?

  103. விற்ற குண்டைக்குப் புல் போடுவான் ஏன் ?
    Why feed a bullock after it is sold?

  104. வினைக்காலம் வரும் காலம், மனை வழியும் தெரியாது.
    When times are inauspicious, one does not know his way home.

  105. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
    He who sows actions will reap actions, he that sows millet will reap millet.