Tamil Proverbs/அ

From Wikisource
Jump to navigation Jump to search
3754531Tamil Proverbs — அPeter Percival

TAMIL PROVERBS,

WITH THEIR TRANSLATION IN

ENGLISH.


அ.

  1. அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
    Having placed the thing on the palm, why lick the back of the hand?

  2. அகடவிகடமாய்ப் பேசுகிறான்.
    He speaks artfully.

  3. அகதிக்கு ஆகாயம் துணை
    Heaven is the help of the helpless.

  4. அகதிக்குத் தெய்வமே துணை.
    God Himself is the help of the helpless.

  5. அகதி சொல் அம்பலம் ஏறாது.
    The word of the destitute does not reach the assembly.
    An assembly of learned men or men in power. The words of the poor, whether they relate to oppression, or to other injuries, or to opinion, are not likely to find admission where alone they can avail.

  6. அகதி தலையிற் பொழுது விடிகிறது.
    Light breaks on the head of the destitute.
    Blame, or suspicion, will fall on the head of the unprotected and friendless. The poor are at work by break of day.

  7. அகதி பெறுவது பெண்பிள்ளை, அதுவும் வெள்ளி பூராடம்.
    The destitute brings forth a female child, and that on Friday, under the star Púrádam.
    Used of one suffering from an accumulation of evils. The condition of the parent, the sex of the child, the day of its birth and its ruling star are alike inauspicious.

  8. அகதியைப் பகுதி கேட்கிறதா?
    What! is tribute demanded of the destitute?

  9. அகத்தில் அழகு முகத்தில் தெரியும்
    The beauty of the mind appears in the face.

  10. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே
    Though the Agatti—Coronilla grandiflora,—brings forth by thousands, its fruit remains ungathered.
    Spoken of the beneficent acts of one not held in estimation, and whose kindness is not therefore appreciated. The proverb is also used of a miser whose treasures are useless.

  11. அகப்பட்டுக்கொள்வேன் என்றோ கள்ளன் களவெடுக்கிறது?
    Does the thief steal in expectation of being caught?

  12. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து இராஜா
    He who was caught was under the influence of Saturn in the eighth sign, and he who escaped, did so, under the influence of Saturn in the ninth.
    Saturn situated in the eighth sign from that of one's birth is supposed to exercise a most malignant influence. This opinion of the Hindus appears in many of their proverbs.
    Hindu Astronomy is made the foundation of a vast system of Astrology. The real movements and the relative positions of the planets are wrought into a systematic connection with a great variety of arbitrary divisions of the signs of the Zodiac, and of the twenty-seven Lunar Mansions. To these bodies are added various Mythological appendages, as beasts, birds, trees, &c., all of which, of course, being a part of the fine-spun theory, help to form in the view of the people generally, a more recondite and imposing system than that of Astronomy itself.
    The Astrological dogmas of India have an important bearing on all the domestic arrangements and practices of the people. They extend to a great variety of popular superstitions which run out into every department of life. This is seen in the lucky and unlucky months, days end other divisions of time, in the horoscope, which has a powerful controlling influence in marriage, and in other matters relating to the settlement of families and in the more general prognostics for the year as given in the Hindu Calendar. Astrology in its popular developments exerts a powerful influence on all classes of Hindu Society.

  13. அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன?
    If he who has the ladle be one’s own servant, what matters it whether one be seated first or last at the feast?
    The Agappai—ladle—here referred to is made of a piece of cocoanut shell with a suitable wooden handle. The shell being very hard and not porous is well suited for the purposes of a spoon or ladle. It is easily cleaned, and well adapted for earthen cooking vessels. It may be seen in every cooking room or shed throughout the Tamil country.

  14. அகம் ஏறச் சுகம் ஏறும்.
    As grain becomes cheaper, enjoyment increases.

  15. அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.
    If grain abound, the five also will abound; if grain be scarce, the five will be so.

  16. அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.
    If grain abounds, all things abound, if grain he scarce, all things are scarce.

  17. அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை.
    If apart, long friendship, if together, the least touch will provoke hatred.

  18. அகல இருந்தால்ப் பகையும் உறவாம்.
    When apart, even enmity becomes friendship.

  19. அகல இருந்தாலப் புகல உறவு.
    Separation secures manifest friendship.

  20. அகலவட்டம் பகல் மழை.
    A large halo—a rainy day.

  21. அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
    He who knows not the price of grain, knows not sorrow.

  22. அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்.
    The most into which the alligator has plunged is to itself Vaikundam. (Paradise.)

  23. அகா நாக்காய்ப் பேசுகிறான்.
    He speaks glibly.

  24. அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?
    Is it to see the face of one who acts improperly?

  25. அகோர தபசி விபரீத சோரன்.
    A terrible ascetic, an atrocious cheat.

  26. அகோர தபசி, விபரீத நிபுணன்.
    In austerity, severe; in perversity, an adept.
    Prone to extremes.

  27. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
    Green pasture on this shore for the cattle on that.
  28. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை.
    If I say that I am about to clear away the jungle to sow cotton seed, my child exclaims, O father, give me a cloth.
    Sanguine and very anticipatory.

  29. அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச்சிற்றாடை என்கிறதாம் பெண்.
    If I clear away the jungle and sow cotton seed, it is said that the girl exclaimed, O father, a cubit of cloth.

  30. அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு.
    The friendship of a brother-in-law lasts while one's sister lives.

  31. அக்காள் உண்டானால், மச்சான் உண்டு.
    If one has a sister, he may have a brother-in-law.

  32. அக்காள் உடைமை அரிசி, தங்கைச்சி உடைமை தவிடா?
    Is the property of the elder sister rice, and that of the younger bran?
    Said of one who is extremely chary about his own property, and indifferent about that of another.

  33. அக்காள் உறவும் மச்சான் பகையுமா?
    Whilst cherishing friendship for the sister, are you at enmity with the brother-in-law?

  34. அக்காளைக் கொண்டால், தங்கையை முறை கேட்பானேன்?
    Having taken in marriage the elder sister, why inquire after the rank of the younger?

  35. அக்காளைப் பழித்துத் தங்கை அபசாரியானாள்.
    Having reproached her elder sister, the younger played the harlot.

  36. அக்காள்தான் கூடப்பிறந்தாள், மச்சானும் கூடப்பிறந்தானா?
    My sister was indeed born of the same mother: was my brother-in-law also?

  37. அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?
    Will a dog understand the Vedas, although born in a Brahman village?

  38. அக்கிராரத்துக்கு ஒரு ஆடு வந்தால், ஆளுக்கு ஒரு மயிர்.
    Should a sheep come into a Brahman village, each person will get but a hair.
    After a sheep has been sacrificed in a Brahmanical village and the carcass consumed, the Brahmans may use the hair when performing púja; this interpretation is disputed.

  39. அக்கிராரத்து நாய் பிரதிஷ்டைக்கு விரும்பினதுபோல.
    As a dog longed for the consecrated things of a Brahman village.
    Said when great expectations are entertained of something that is likely to prove illusory: an amusing story is told about this proverb.

  40. அக்கினி மலைமேல் கர்ப்பூரபாணம் பிரயோகித்ததுபோல.
    As one discharged a camphor arrow at a burning mountain.
    Spoken of an act done to injure another, fruitless or inadequate, and possibly destructive of the means employed.

  41. அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்.
    He is as if a libation had been poured out to the god of fire.
    Used of one naturally very black, who on hearing the proverb if he understands its purport, is of course very angry. When water is poured on burning charcoal the cinders appear exceedingly black. The intended reflection is not the less insulting because of the complimentary way in which it is conveyed.

  42. அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது.
    A cauterized wound will not fester much.

  43. அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன?
    Whence sorrow to him who has no connections?
    Said of one who is so obscure and isolated as to have no one whose griefs he can share or assuage.

  44. அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?
    Is it improper to bathe in a river?

  45. அங்கத்தைக் கொண்டுபோய் ஆற்றில் அலைசினாலும், தோஷம் இல்லை.
    Although he take his body and wash it in the river, no fault will be found.

  46. அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது.
    A body that has been deprived of life (murdered) may not be put into a river.

  47. அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை.
    He is seen everywhere enjoying himself: when looked at in his homestead, he is not worth half a cash.
    Said of one who, when out, affects to be well off, whereas he has nothing at all to depend upon.
    The word (காசு) Cash, is used for several kinds of coin, also for money.

  48. அங்காடி விலையை அதிர அடிக்காதே.
    Do not beat down the market price.
    Do not contravene the established opinions and practices of the people with whom you are associated.

  49. அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச்சொன்னால், வெங்காயம் கருவேப்பிலை என்பாள்.
    If a song be demanded of a woman going along with her market basket, she will exclaim venkaiyam, karuvéppilai, (Onions, curry leaves.)

  50. அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு.
    One who frequently changes his party will receive two slaps here and three cuffs there.

  51. அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பான்.
    Tummattippattan, who had escaped here and there, was caught.
    Referring to the adventures of a sorcerer.

  52. அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.
    He is here and there and has a share also in the boiled rice.

  53. அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால், காற்றாய்ப் பறக்கலாம்.
    Why, my daughter, are you crying there for kanji? come hither and you may fly as the wind.
    Spoken of a proffered change which may be for the worse.

  54. அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்.
    If her neighbour prospers, she will starve herself for five days.

  55. அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா?
    Is one to go to a foreign country, because his neighbour prospers?

  56. அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனைக் கெடுக்கப் பார்க்கிறான்.
    Regardless of circumstances, he aims to destroy his neighbour.

  57. அசவாப் பயிரும் கண்டதே உறவும்.
    Stunted grain—friendship at sight.
    Both valueless.

  58. அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு.
    A cow eats moving; a house eats standing.

  59. அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.
    The fearless goes into the assembly.
    Used of those who have more courage than discretion.

  60. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
    A car without a linch-pin will not move even three spans.
    Intimating that appliances however trivial cannot be disposed with, and that the best instruments and weapons require due management.

  61. அச்சிக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு.
    Though taken to Achchi, a wooden ladle will fetch only half a cash.
    Achchi being a prosperous place, cooking utensils are there in great demand, yet even there this inferior article will bring no more than its value.
    Spoken of the intrinsic value of a thing.

  62. அச்சியிலும் பிச்சைக்காரர் உண்டு.
    There are beggars even in Achchi.
    See the preceding proverb.

  63. அச்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.
    The cheat has got on the shoulders of the conjurer.
    Said when one deceiver has got the better of another.

  64. அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.
    Deferential respect is agreeable to every one.

  65. அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?
    Who will tolerate a presumptuous or impudent man?

  66. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது.
    A fifth born female cannot be obtained though earnestly sought.
    A fifth born female is regarded as the special favourite of fortune; an eighth,—as the very opposite.

  67. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
    Will that which was not bent at five, bend at fifty?

  68. அஞ்சினவனை குஞ்சும் வெருட்டும்.
    Even a fledgeling may scare the timid.

  69. அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?
    Will one ignorant at five understand at fifty?
    Early instruction essential to future knowledge. The proverb may also suggest that growth in years will not make one, that is naturally dull, bright.

  70. அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.
    Demons strike the timid.

  71. அஞ்சி ஆண்மை செய்.
    Act manfully, but modestly.

  72. அஞ்சினாரை கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.
    Those who were once feared may be made to beg; and they who were once oppressed may be made prosperous.

  73. அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்.
    To the timid the sky is full of demons.

  74. அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
    A horse is required for five cash, and he must be able to leap over a river.
    Used in derision when great results are expected from inadequate means.

  75. அஞ்சு குஞ்சும் கறியாமே? அறியாப் பெண்ணும் பெண்டாமோ?
    Are five young birds a curry? Is a young girl a wife?

  76. அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை.
    Of the five senses two are uninjured.
    Used with reference to some, of several desiderated objects that have been accomplished, or of some things that remain uninjured.

  77. அஞ்சு பணம் கொடுத்தாலும், இத்தனை ஆத்திரம் ஆகாது.
    Even if you were to give away five fanams, such haste or precipitation will not do.
    Precipitance in judgment is worse than actual loss.

  78. அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப் பெண்ணும் கறி சமைக்கும்.
    If possessed of five and three, even a young girl may make a curry.
    The five are acid, pepper, salt, mustard, and cumin; the three, are water, fuel and fire.
    This proverb is used by a man when his wife has prepared a curry that does not please him.

  79. அஞ்சுருத்தாலி நெஞ்சுருவக் கட்டிக்கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய்.
    Thou speakest ostentatiously as a matron who has come having her bosom adorned with a táli ornamented with five figures.
    The táli is a marriage symbol used as a wedding ring is in Europe. Various astrological observances attend the melting of the gold &c. The five forms referred to are the five weapons of Vishnu. Viz. the discus, the club, the conch, the bow and the sword.
    The Romanists ornament the táli with the figure of a dove.

  80. அஞ்சு வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்.
    A woman of fifty must bend the knee before a boy of five.
    Referring to the deference paid to the male sex by the Hindus.

  81. அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
    He aims to humble the timid by force.

  82. அஞ்சூர்ச்சண்டை சுண்டாங்கி, ஐங்கல அரிசி ஒரு கவளம்.
    Conflict in five villages is but curry, five maracals of rice is only a mouthful.
    Spoken of one who delights in the misfortunes of others.

  83. அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது.
    The five letters and the sentiment are like him.
    Spoken of a child who in feature and disposition resembles its father.

  84. அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?
    Of what use is beauty to a damsel living in retirement?

  85. அடக்கமுடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்.
    The well-ordered are wise; the disorderly are fools.

  86. அடக்கமே பெண்ணுக்கு அழகு.
    Modesty is the ornament of a woman.
    The proverb may be used of moderation generally and self-restraint.

  87. அடங்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான்.
    A dwarf without restraint—an unused tomtom-—he wanders about.
    Used of one irrecoverably worthless.

  88. அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்த்தடி.
    A bamboo staff is the king of a vicious snake.

  89. அடங்காத பெண்சாதியினாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
    A disobedient wife is an evil both to her mother and to one’s self.
    Spoken of a person inimical alike to two parties.

  90. அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்.
    A disobedient wife and a self-willed husband.
    Said of uncongenial society.

  91. அடங்கின பிடி பிடிக்கவேண்டும், அடங்காத பிடி பிடிக்கலாகாது.
    Seize that which can be grasped, not that which cannot.
    Aim at the practicable.

  92. அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.
    Even tender creepers when united are strong.

  93. அடா என்பான், வெளியே புறப்படான்.
    He will speak abusively, but will not come out.

  94. அடாது செய்தவர் படாது படுவார்.
    They who do what they ought not, will suffer what they might have avoided.
    It serves him right.

  95. அடி அதிரசம் குத்துக் கொழுக்கட்டை.
    A slap is a cake, a cuff is sweetmeat.
    Spoken of one who is beyond ordinary discipline,

  96. அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவுவார்களா?
    Will an elder or younger brother aid one as effectually as discipline or punishment?

  97. அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்.
    The more a ball is struck, the more it rebounds.

  98. அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும்.
    Beware of a beating wind and of falling rain.
    Beware of things beyond human control.

  99. அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயன்படுமா?
    Does the beating wind fear the sunshine?
    Spoken of irrelevant means to subdue an evil.

  100. அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.
    Winnow while the wind blows.

  101. அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.
    One hand smites, the other embraces.
    Discipline regulated by love; used sometimes of Divine chastisements.

  102. அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?
    Can one make a somersault in the bottom of a chatti?

  103. அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.
    What he received for his labour (ploughing) only paid for the kanji he drank.

  104. அடித்துப் பழுத்ததும் பழமா?
    Is that which ripens by force fruit?
    (A favour done under constraint is no favour.)

  105. அடித்துப் பால் புகட்டுகிறதா?
    Is a child to be beaten in order to pour milk into its mouth?

  106. அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வையாகா.
    Neither the child that is unchastised, nor the mustache that is untwirled will be right.
    Implying that due care must be exercised to secure a desiderated result.

  107. அடித்துவிட்டவன்பின்னே போனாலும், பிடித்துவிட்டவன்பின்னே போகலாகாது.
    Though you may trust one who has administered correction, you may not trust one who has betrayed you.

  108. அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா?
    What! is it nectar at the tip of the tongue while poison is at the root?
    Said of one, or to one whose professions are at variance with his intentions.

  109. அடி நொச்சி நுனி ஆமணக்கா?
    Is the stem nochchi, and the top a castor plant?
    Intimating that the same characteristics will prevail in a family or tribe.

  110. அடிப்பானேன் பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம்.
    Why beat him, why seize him? we will subdue him by proper means.

  111. அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்.
    Even a grindstone will move under repeated strokes.

  112. அடிமை படைத்தால் ஆள்வது கடன்.
    It is the duty of one who has a slave to employ him.

  113. அடியற்ற பனைபோல் விழுந்தான்.
    He fell as a palmira tree severed from its root.
    So perfect was his prostration. This may be used of obeisance or ruin.

  114. அடியற்ற மரம்போலே.
    As a tree without root.

  115. அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?
    If the root fail, will not the top fall?

  116. அடியா நாடு படியாது.
    A province in which authority is not enforced will not submit.

  117. அடியாத மாடு படியாது.
    An unchastised bullock will not obey.

  118. அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.
    That which exists in the bottom is likewise in the middle and top.

  119. அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?
    And besides being beaten, must (one) also eat sour mangoes?
    Spoken of something imposed on one who is already suffering from questionable inflictions.

  120. அடியென்று அழைக்கப் பெண்டீர் இல்லை, ஆண் எத்தனை பெண் எத்தனை என்கிறதுபோல்.
    Like saying to a man how many boys have you, and how many girls, when he has not a wife to whom he can say, Adi.

  121. அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.
    If the horizon becomes black, the household of the farmer will begin to parch.

  122. அடுக்களை கிணற்றிலே அமுதம் எழுந்தாற்போல்.
    Like the springing up of nectar in a kitchen well.

  123. அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும் இருக்கிறதென்கிறான்.
    He says, to cook, there is a woman; for outdoor work, a man.
    Spoken of needful help already at hand.

  124. அடுக்குகிற அருமை தெரியுமா உடைக்கிற நாய்க்கு?
    Does the dog that breaks (the cooking pots) know how difficult it is to arrange them?
    Used when a heedless clumsy person has disarranged or spoiled some cherished work on which great pains had been bestowed.

  125. அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம்.
    When a neighbour's roof is in flames one’s own is in danger.

  126. அடுத்தவனைக் கெடுக்கலாமா?
    Is it right to destroy one’s neighbour?

  127. அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்.
    Because his neighbour prospers he removes in the day-time i.e., at once.

  128. அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.
    He destroys those about him and robs those who fed him.

  129. அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.
    By continually urging, the work undertaken may be completed.

  130. அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி.
    A deceiver destroys when near, a harlot in contact.

  131. அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு.
    He is a teacher or spiritual guide who gives wholesome counsel to those who resort to him.

  132. அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.
    A story about butter being placed near the hearth.

  133. அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா?
    Is ornamentation requisite in a hearth or fireplace?
    The needful is sufficient in common things.

  134. அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.
    No fire in the hearth, no bran in the mouth.

  135. அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.
    Should the fire burn, you may parch grain.

  136. அடைந்தோரை ஆதரி.
    Take care of those who are under your protection.

  137. அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.
    A snake will bite him who removes a fence.

  138. அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்ததுபோல.
    As a lamb died in heavy rain.
    Said of one coming to grief from want of due care.

  139. அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை.
    Though the heavy rain is over, the dropping from the trees continues.
    Though the greater evils have passed away, the lesser remain. Though the spoiler is not upon us, the ordinary imposts are demanded by men in power.

  140. அட்டமத்துச் சனி கிட்ட வந்ததுபோல.
    As Saturn in the eighth sign approached.
    Some person or thing ominous of evil.

  141. அட்டமத்துச் சனி நட்டம் வரச் செய்யும்.
    Saturn in the eighth sign will bring loss.
    See the preceeding.

  142. அட்டமத்துச் சனி பிடித்தது, அரைத் துணியும் உரிந்துகொண்டது.
    Saturn in the eighth sign seized, and stripped off even the waistcloth.

  143. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.
    Like borrowing Saturn in the eighth sign on interest.

  144. அட்டைக்கும் திருத்தியில்லை, அக்கினிக்கும் திருத்தியில்லை.
    The leech is not satisfied, nor is fire.
    Inordinate desire is never satisfied.

  145. அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்ததுபோல.
    As a reptile caught and placed on a cushion.
    Said of a person in an unnatural situation.

  146. அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையையே நாடும்.
    Although you take a reptile and place it on a cushion, it will seek
    a heap of dried leaves.

  147. அணில் ஏறவிட்ட நாய் பார்ப்பதுபோல.
    As a dog looks up at a squirrel that has ascended and escaped his grasp.
    A despairing look after a thing irrecoverably lost.

  148. அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?
    Does the squirrel lack the pulp of the young palmyra fruit, or the child of a Saiva mendicant, rice?
    To give to religious mendicants is held, by the Hindus generally, to be meritorious.

  149. அணு மகாமேருவாமா ?
    Is an atom the great Meru?
    The sacred mountain Meru, forming the centre of the seven continents according to the Mythological geography of the Hindus; it appears to mean the highland of Tartary north of the Himálaya,

  150. அணுவும் மலையாச்சு, மலையும் அணுவாச்சு.
    An atom is become a mountain, a mountain an atom.

  151. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா ?
    Though one cry after it, will the flood that has burst its bund return?
    As a premonition, this proverb is used to inculcate caution, and as a remark on misfortune, it suggests the uselessness of regret.

  152. அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர் ஆர்?
    Who can stop a flood that has burst its bund?
    Spoken of insuperable evils.

  153. அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு.
    Whatever exists in the universe exists in the human body.

  154. அண்டத்தில் இல்லாததும் பிண்டத்தில் உண்டா ?
    Does that exist in the body which does not exist in the universe?
    The greater includes the lesser. This and the preceeding proverb really relate to the dialectics of the learned and philosophic schools.

  155. அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?
    Will a fruit be burdensome to Him who bears the universe?
    Used when some favour is sought of one who is known to possess ample resources.

  156. அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்.
    Of the universe and the body, the former is hidden, the latter open.

  157. அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்?
    Whom will the unapproachable demoness obey?
    The term Pidári is generally applied to a village goddess who is regarded as an evil being.

  158. அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி.
    A quarrel in a neighbouring house is refreshing.
    Spoken of envious persons who may be supposed to delight in a neighbour's shortcomings or misfortunes.

  159. அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.
    The neighbouring Brahman will breed a quarrel and settle it.
    Said of one who promotes evil in order that he may gain by it.

  160. அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.
    Disgrace will attach to a king who has not a competent person near him.

  161. அண்ணனார் அரண்மனையில் அள்ளி உண்ணப் போகிறாள்.
    She is going to eat rice in her elder brother’s house.

  162. அண்ணனிடத்தில் ஆறு மாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
    Although one may live six months with an elder brother, one cannot abide with his wife even half an hour.
    The first condition is proverbially difficult, how much more so the second?

  163. அண்ணனுக்குப் பெண் பிறந்தால், அத்தை அசல் நாட்டாள்.
    If my elder brother has a daughter, my paternal aunt becomes an alien.

  164. அண்ணனும் தம்பியும் சென்மப் பகைவர்.
    An elder and younger brother are natural (birth) enemies.
    They are supposed to be subject to envy, jealousy end hatred
    on account of the rights they inherit.

  165. அண்ணனைக் கொன்ற பழி, சந்தையிலே தீர்த்துக்கொள்கிறது போல.
    Like taking revenge in the market-place, or in the place where the Vedas are read, on account of an elder brother who has been murdered.

  166. அண்ணன் பெரியவன், அப்பா நெருப்பு ஊது.
    My elder brother is superior, father, blow the fire.
    Said when an inferior is treated with greater deference than one really entitled to distinction.

  167. அண்ணன் கொம்பு பம்பழ பளாச்சு.
    The horn of my elder brother is as soft (harmless) as a shivered stick.
    The foxes of a certain region familiar with the hare had, for a long time, an idea that its fine long ears were formidable horns, and therefore kept aloof from it. At length an old fox proposed that they should try to ascertain the nature of the extraordinary excrescences on its head; and suggested that some of their neighbours should be invited to a feast. This was done; and when all things were ready the foxes led their guests into the festive hall and they were seated a fox and a hare alternately, at table. During the feast one of the foxes professing great admiration for the fine horns of their guests, laid his hand upon one and looking round uttered the Proverb. On hearing this, each fox seized and devoured the hare next to him.

  168. அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்.
    Whatever is left uneaten by my elder brother is an advantage to my sister-in-law.

  169. அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே.
    Elder brother and younger brother are still wanted, O God.

  170. அண்ணாவியார் விழுந்தால் அடைவுமுறை.
    Should a teacher make a slip, it is attributed to his art.

  171. அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?
    Is the child of an artist (a dancing-master) without money; is the son of a barber in want of hair?

  172. அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது.
    It obstructed the throat and the uvula so as to cause them to quake.

  173. அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
    If the favour of Annámalai (Siva) be obtained, will the god Mannár pull out a hair?
    Safe as regards an inferior, if protected by a superior.

  174. அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
    The forms of worship prescribed for Siva are sixty-four; whereas the seasons for feeding religious mendicants are seventy-four.

  175. அதிக ஆசை அதிக நஷ்டம்.
    Excessive desire entails excessive loss.

  176. அதிக ஆசை அஷ்டதரித்திரம்.
    Excessive desire or greed ends in eight forms of poverty.
    The eight forms of poverty are the absence or negation of the eight sources of fruition or enjoyment. These are பெண் women; ஆடை apparel; அணிகலன் jewels; போசனம் food; தாம்பூலம் betel; பரிமளம் perfumes; பாட்டு songs; பூவமளி reclining on flowers.

  177. அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியுமட்டும் திருடலாம்.
    If the chief and headman are united, stealing may be carried on till day-break.

  178. அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்ததுபோல.
    As one placed in the house of the headman what he had stolen in the house of the chief.
    Said of a thing done unwittingly.

  179. அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்.
    An egg obtained from the house of the chief will break the grind-stone in the house of the peasant.
    Implying that authority imparts to the insignificant overwhelming power.

  180. அதிஷ்டம் தொட்ட கழுக்காணி.
    A short thick person favoured by fortune.

  181. அதிஷ்டம் ஆராய்ப் பெருகுகிறது.
    Fortune flows as a river.

  182. அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.
    When fortune smiles one may reign as a king.

  183. அதிஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்.
    Although the unfortunate gets a large measure of milk, the cat will lap it all up.
    Destiny prevails to thwart benefits when one is unfortunate.

  184. அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.
    When touched by the fortunate even earth becomes gold.

  185. அதிர அடித்தால், உதிர விளையும்.
    If thoroughly ploughed, the yield will be abundant.

  186. அதிலும் இது புதுமை, இதிலும் அது புதுமை.
    This is stranger than that, and that is stranger than this.

  187. அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடர் பூசாரி.
    O, priest there is no lack, proceed with the ceremony.
    Said to a Pujáchári by way of encouragement.

  188. அது அதற்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டுக் கவலை.
    Each object is attended by a single anxiety, whereas the master has eight.

  189. அது எல்லாம் உண்டிட்டு வா என்பான்.
    He will eat it all and say come.

  190. அதுக்கு இட்ட காசு மினக்கெட்டு அரிவாள்மணைக்குச் சுறுக்கிட்டதா?
    Did the money, diverted from the object for which it was given, avail for the purchase of a sickle?

  191. அதுவும் போதாதென்று அழலாமா இனி?
    May you hereafter weep because that also is too little?

  192. அதைரியமுள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல.
    Like calling a coward a fearless hero.
    Said of false adulation.

  193. அதைவிட்டாலும் கதியில்லை, அப்புறம்போனாலும் வழியில்லை.
    If that is renounced there is no help, if you go further there is no way.
    Spoken of evils from which there is no escape.

  194. அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்?
    It is by reason of his great wealth, is it not, that the barber asks a maiden in marriage?

  195. அத்தனையும் நேர்ந்தாள், உப்பிட மறந்தாள்.
    Although she put in so many ingredients, she omitted salt.
    Said of something complete in all but one essential.

  196. அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.
    My brother-in-law’s death has not affected me any more than the loss of a hair; but his blanket and mattress have become mine.

  197. அத்திக்காயைப் பிட்டுப்பார்த்தால், அங்கும் இங்கும் பொள்ளல்.
    If you break open a fig, you will see cavities here and there.

  198. அத்தி பூத்ததுபோல் இருக்கிறது அவன் வந்தது.
    His coming is like the flowering of the fig-tree.
    Something that never happens.

  199. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான்
    The more a fig is opened, the greater will be the number of worms found.

  200. அத்திப்பூவை ஆர் அறிவார்கள்?
    Who ever saw the flower of a fig-tree?

  201. அத்திப்பூவைக் கண்டவர்கள் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர்கள் உண்டா?
    Are there any who have seen the blossom of the fig-tree? are there any who have seen the young of an owl?
    Said of things that rarely or never happen.

  202. அத்திமரத்தில் தொத்திய கனிபோல.
    Like fruit sticking to a fig-tree.

  203. அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்.
    He transgressed and became mad.

  204. அத்தைக்கு மீசைமுளைத்தாற், சிற்றப்பா என்கலாம்.
    Should the mustache of one’s aunt grow we may call her uncle.
    Referring to improbable contingencies.

  205. அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா?
    Will beauty emanate from one void of symmetry?

  206. அந்தணர்க்குத் துணை வேதம்.
    The Veda is the staff of the Brahman.

  207. அந்தணர் மனையிற் சந்தனம் மணக்கும்.
    The house of the Brahman is perfumed.
    It being a requisite for ceremonial usages.

  208. அந்தரத்தில் கோல் எறிந்து அந்தகன்போல.
    Like a blind man who has thrown his staff into the air.

  209. அந்தி ஈசல் பூத்தால், அடைமழை அதிகரிக்கும்.
    If white-ants take wing in the evening, it prognosticates excessive rain.

  210. அந்தி மழை அழுதாலும் விடாது.
    The evening rain will not cease even if one should weep.

  211. அந்தூது நெல்லானேன்.
    I am become as useless as a grain of paddy eaten by insects.

  212. அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறதுபோல.
    While the father is sucking the husk of the cocoanut his son is crying for the kernel or pulp.
    Indicating desires beyond one’s means.

  213. அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது.
    While the hawk snatches away the father’s waist-cloth his daughter is crying for a silk dress.
    Said in reproof when wishes are entertained beyond one’s means.

  214. அப்பத்தை எப்படிச் சுட்டீர்கள்? தித்திப்பை எப்படி நுழைந்தீர்கள்?
    How did you bake the cake? how did you sweeten it?

  215. அப்பம் சுட்டது சட்டியில், அவல் இடித்தது திட்டையில்.
    Cakes are baked in a chatty, steeped rice is flattened in a mortar.
    Means must be suited to the end.

  216. அப்பம் என்றாற் பிட்டுக்காட்ட வேண்டுமா?
    If bread, is it necessary to break and prove it?

  217. அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்புச் சமைந்தால் தெரியும்.
    The value of a father is known after his decease, that of salt when exhausted.

  218. அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
    The father is crying for rice and his son is performing the ceremony of giving a cow at Kumbhakónam.

  219. அப்பன் பெரியவன், சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா என்கிறதுபோல.
    Like saying, my father is a great person, uncle, bring fire to light my cigar.
    Pride of wealth leads one to neglect the observance of established social rules.

  220. அப்பா என்றால் உச்சி குளிருமா?
    If one exclaim, alas! alas! will the crown of the head become cool?
    Expressions of sympathy are unavailing if not associated with real help.

  221. அப்பியாசம் கூசாவித்தை.
    Experience is knowledge that maketh not ashamed.

  222. அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை.
    Thoroughly acquired knowledge does not fail.
    Said in commendation of obvious efficiency.

  223. அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்?
    Why ask of the military officer if there is any compulsory service?
    Why gratuitously seek avoidable evil?

  224. அமரபட்சம் பூர்வபட்சம், கிஷ்ணபட்சம் சுக்கிலபட்சம்.
    The latter and former halves of the moon—its dark and bright sides.
    These symbolize the light and darkness, the gladness and sadness of human life.

  225. அமரிக்கை ஆயிரம் பெறும்.
    Quietness is worth thousands of gold.

  226. அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்.
    An oppressor and a clever man need no landed property.

  227. அமாவாசைக் கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி.
    In the darkness of the new moon the bandycoote finds a way wherever he goes.

  228. அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா?
    Is the food peculiar to the new moon to be had every day?

  229. அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களா?
    Will poison be received by the mouth accustomed to nectar?

  230. அம்பட்டகிருதம் வண்ணார ஒயிலும்.
    The arrogance of a barber and the affectation of a washerman.
    Said when inferiors give themselves airs of importance.

  231. அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராய்ப் புறப்படும்.
    If the rubbish heap of the barber be stirred, nothing but hair turns up.
    The more you examine an inferior thing, the viler will it appear.

  232. அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?
    Is hair a rare sight to the child of a barber?

  233. அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தால் என்ன, அடுத்த திருமாளிகையிற் கிடந்தால் என்ன?
    What matters it whether the helpless ass lies in an open place or in the adjoining palace.

  234. அம்பலத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான்.
    He is aiming to conceal the rumour which is to be brought before the public assembly (for discussion.)

  235. அம்பலத்தில் கட்டுச்சோறு அவிழ்க்கிறாப்போல்.
    As boiled rice tied up for a journey is untied in an open place.

  236. அம்பலத்தில் பொதி அவிழ்க்கல் ஆகாது.
    It is not good to unpack in an open place.
    Unnecessary exposure of one’s personal affairs is to be avoided.

  237. அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான்.
    He speaks like piercing arrows.

  238. அம்பிகொண்டு ஆறு கடப்போர், நம்பிக்கொண்டு நாரிவால் கொள்ளுவார்களா?
    Will those who cross the river on a raft entrust themselves to the tail of a jackal?

  239. அம்மணமும் இன்னலும் ஆயுசுப்பரியந்தமா?
    Are nakedness and misery to continue to the end of life?

  240. அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
    Is a veil necessay for a woman in a bad condition?

  241. அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.
    The father-in-law and son-in-law are slaves in the same house.

  242. அம்மான் மகளுக்கு முறையா?
    Why enquire after the relationship of the daughter of one’s maternal uncle?

  243. அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா?
    Having to chastise a maid-servant in a father-in-law’s house, is it necessary to ask the chief permission to do so?

  244. அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?
    Whether is stronger, the grindstone or she who grinds?

  245. அம்மி மிதித்து அருந்ததி பார்த்ததுபோல.
    Like one standing on a grindstone and looking at Arundathi.
    Arundathi is a star in the Great Bear regarded as the wife of Vasishta, a pattern of chastity. This star is pointed out to the bride at the marriage ceremony.

  246. அம்மியிருந்து அரசனை அளிப்பாள்.
    She will bring forth a king on the grindstone.
    During the time of child-birth it is not uncommon for the mother to be seated on a grindstone.

  247. அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல்.
    As a leaf-plate sought advice when the grindstone and its roller were flying in the air.

  248. அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
    If a thievish woman eat the cream will there be any butter?

  249. அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.
    The strife of Ammai, (a village goddess) has begun, boil and present (rice.)

  250. அம்மையார் எப்பொழுது சாவான்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?
    When will my mistress die? when shall I get her blanket?

  251. அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் கட்டுகிற அரைஞாட்கயிற்றுக்கும் சரி.
    The yarn spun by the old dame will only just suffice to form waist-string for her grandson.

  252. அம்மையார் பெறுகிறது அரைக்காசு, தலை சிரைக்கிறது முக்காற்காசு.
    Three fourths of a cash is demanded for shaving the head of a old woman worth only half a cash.

  253. அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.
    What sorrow has the old dame? that of raggedness.

  254. அம்மையாரே வாரும், கிழவனைக் கைக்கொள்ளும்.
    Come, old lady, and receive the old man.

  255. அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
    He flies at his neighbours’ property as a demon.

  256. அயலார் உடைமையில் அந்தகன்போல் இரு.
    Be blind as regards your neighbours’ property.

  257. அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.
    No one escapes the decree of Brahma.

  258. அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.
    The writing of Brahma will not fail in the least.

  259. அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல்.
    Even the Airai (small as it is) will give itself airs if it be not mixed with the food.

  260. அயோக்கியர் அழகு அபரஞ்சித் சிமிழில் நஞ்சு.
    Beauty in the unworthy is poison in a casket of fine gold.

  261. அய்யன் அளந்தபடி.
    As God measured.

  262. அய்யாவையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா?
    Is Appaiyangar the dispenser of Aiyavaiyar’s gruel?

  263. ஹர ஹர என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதோ?
    Whether is greater as regards merit, to say Hara, Hara, or to give to the mendicant?

  264. அரக்கன் ஆண்டால் என்ன, மனிதன் ஆண்டால் என்ன?
    What matters it whether a demon or a man rules?

  265. அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.
    To play draughts without a board and to speak without a knowledge of the shastras are alike.

  266. அரசன் அளவிற்கு ஏறிற்று.
    It reached even the king.

  267. அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.
    A country without a king, a family without a head.

  268. அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.
    The sky is the witness regarding the king’s property.

  269. அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
    The king kills at once, God delays and kills.

  270. அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.
    If it be reported that brinjals are growing on a stone in the king’s courtyard they will say that the outcome is thousands of bunches and thousands of clusters.

  271. அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.
    As is the king such are his subjects.

  272. அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.
    The people follow the lead of their ruler.

  273. அரசன் வழிப்பட்டது அவனி.
    It is the earth i. e., its inhabitants that follows the king.

  274. அரசன் வழிப்படாதவன் இல்லை.
    No one is exempt from duty to the king.

  275. அரசனுக்கு ஒரு சொல் அடிமைக்குத் தலைச்சுமை.
    As regards the king it is a word, to the subject it is a burden.

  276. அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.
    The fear of the king among those in power operates auspeciously as regards the poor.

  277. அரசனுக்குத் துணை வயவாள்.
    The help of a king is his mighty sword.

  278. அரசனும் அரவும் சரி.
    A king and a snake are alike.

  279. அரசனும் அழலும் சரி.
    A king and fire are alike.

  280. அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.
    A king, fire. and snake are alike.

  281. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.
    Like losing a husband through trusting in a king.

  282. அரசுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.
    A king observes not the distinction between little and great.

  283. அரசுடையானை ஆகாயம் காக்கும்.
    The heavens guard the king.

  284. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.
    To the eye of the timid every thing obscure is a demon.

  285. அரத்தை அரம் அறுக்கும், வயிரத்தை வயிரம் அறுக்கும்.
    A file will cut a fie, diamonds cut diamonds.

  286. அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.
    An Aiyampettah pony is preferable to an Arab steed.

  287. அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?
    If a mungoose see a snake will it let it escape?

  288. அரவுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.
    The distinction of big and little does not apply to snakes.

  289. அரன் அருளில்லாமல் அணுவும் அசையாது.
    Not an atom will move without the permission of God.

  290. அரன் அருள் அற்றால், அனைவரும் அற்றார்.
    Should the favour of God fail, every one will come to nought.

  291. அரி அரி என்றால், ராமா ராமா என்கிறான்.
    If I say Ari, Ari, he cries Rama, Rama.

  292. அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.
    If one understand the import of the word Ari, he may exercise regal power.

  293. அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?
    May one transgress the bounds of propriety if he comprehends the purport of the syllable Ari?

  294. அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக் கோபம்.
    If one says Ari the Saiva mendicant is angry, if one says Ara the Vaishnava mendicant is angry.

  295. அரிசி அள்ளின காக்காய்போல.
    Like a crow that has taken up rice.

  296. அரிசி ஆழாக்கானாலும், அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.
    Though there be only one álak of rice, three supporting points in the hearth are required.
    Alak—a small measure of capacity.

  297. அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.
    If there be rice there will be order—honour also, if a sister exist a brother-in-law may.

  298. அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று.
    Though there be only one ulak of rice, three supporting points in the hearth are required.
    An ulak is two álaks or the fourth of a measure.

  299. அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை.
    No one takes up rice to examine it, nor does any one blow upon chaff.

  300. அரிசி கொண்டு உண்ண அக்காள் வீட்டுக்குப் போவானேன்?
    Seeing you have to pay for the rice you eat why go to the house of your elder sister?

  301. அரிசிக்கு தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும்.
    Water in a pot proportioned to the rice, and a display of authority in a husband suited to his condition.

  302. அரிசிப் பகையும் ஆமுடையான் பகையும் உண்டா?
    Does hatred against rice or a husband exist?

  303. அரிசிப் பொதியுடன் திருவாரூர்.
    Tiruvaroor with a bag of rice.
    Spoken of a double benefit—the grain is valuable, and a visit to a sacred place is auspicious.

  304. அரிசி மறந்த உலைக்கு உப்பு என்ன?
    Of what use is salt in a pot of boiling water without rice?

  305. அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.
    His house is next to Harischandra’s.
    Used ironically of a notorious liar. Harischandra, a king famed for veracity.

  306. அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்.
    It is difficult indeed to comprehend the purport of the five letters.
    The famous five lettered incantation called the மூலமந்திரம் as being the foundation of all spiritual wisdom and all religion, and the means prescribed and proper for obtaining emancipation from births and all the evils thereunto belonging, and union with the supreme.

  307. அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டா?
    Is tax levied on dry twigs scraped together for fuel?

  308. அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.
    The precious body is a stone thrown into the air.

  309. அரியது செய்து எனியதுக்கு ஏமாந்து திரிகிறான்.
    Having performed difficult things he wanders about alarmed at that which is easy.

  310. அரியும் சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன் வாயில் மண்.
    Vishnu and Siva are one; let sand be put into the mouth of him who denies it.

  311. அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெடவேண்டும்.
    The sickle must be moved, and the landlord’s family must be ruined.

  312. அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ?
    Is it attempted to remove the heat of a burning fever as if it were that of a sickle?

  313. அரிவாள் சுருக்கே அரிவாள்முனை கருக்கே.
    Was it the dexterity of the reaper, or the sharpness of the sickle.
    Success in an enterprise is mainly owing to tho means employed.

  314. அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்.
    He who listens to the words of a woman will be accounted worthless.

  315. அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வௌவால் சேராது.
    Although the fruit of the wood-apple tree (Feronia elephantum) close by ripens, bats will not approach it.

  316. அருக்காணி நாச்சியார் குரங்குப்பிள்ளைப் பெற்றாலாம்.
    The haughty dame is said to have brought forth a monkey child.

  317. அருக்காணிமுத்துக் கரிக்கோலமானால்.
    She who was a precious pearl has become black as coal.

  318. அருக்காமணியா முருக்கம்பூவா?
    Is it a rare gem or a Murukkam flower?

  319. அருங்கோடைத் துரும்பு அற்றுப்போகுது.
    Through severe drought every blade has perished.

  320. அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை.
    Divine favour is common to all, material wealth is not.

  321. அருணாம்பரமே கருணாம்பரம்.
    A cloth tinged red indicates the divine favour.
    Refers to the dress of religious mendicants.

  322. அருமை அறியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன?
    What matters it whether he who has no discrimination rules or dies?

  323. அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதிகாலத்து உரல் போகல் ஆகாது.
    If it must be so, let the head of my son-in-law go; but the old mortar must not go.
    Said of things which long possession has made peculiarly precious,

  324. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிராது.
    Even a buffalo will not abide in a house where it is not regarded.

  325. அரும் சுனை நீர் உண்டால், அப்பொழுதே ரோகம்.
    The drinking of water from a hill reservoir will at once produce disease.

  326. அருள் வேணும், பொருள் வேணும், அடக்கம் வேணும்.
    Kindness, wealth and self-restraint are essentials. _

  327. அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது.
    Chastity forfeited for half a cash, cannot be recovered though one should give thousands of gold.

  328. அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.
    The honour that has been forfeited for half a cash, will not return though one give thousands.

  329. அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது.
    Though sandal wood be rubbed, its fragrance will not be destroyed.

  330. அரைக்குடம் ததும்பும் நிறைகுடம் ததும்பாது.
    The water in a pot half full wabbles, if full it wabbles not.

  331. அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல.
    As one leaped over an Erukku leaf, Calotropis gigantea, under which he had concealed half a challi.
    A challi is a small copper coin, a fractional part of a larger coin.

  332. அரைச்சீலை கட்டக் கைக்கு உபசாரமா?
    Is the hand to be complimented for tying the waist-cloth?

  333. அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறலாமோ?
    Can one go before an assembly with half a word?

  334. அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச்சொல் முழுச்சொல்லாகும்.
    Half a word admitted into the assembly becomes a whole word.

  335. அரைத்த பயறு முளைத்தாற்போல.
    As if macerated gram should sprout.

  336. அரைத்து மீந்தது அம்மி சிரைத்து மீந்தது குடுமி.
    After grinding the stone remains; after shaving the head, the kudumi (tuft of hair) remains.
    A tuft of hair left on the head of a boy or man with a knot at the end. It is considered becoming; and is usually about a foot in length.

  337. அரைப்பணம் கொடுத்து அழச்சொல்லி ஒருபணம் கொடுத்து ஓயச்சொல்லுவானேன்?
    Having given half a fanam to weep, why give a fanam to ease?
    Fanam—a small coin of gold or silver,

  338. அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம்போல் ஆகுமா?
    Though the service bring half a fanam, will it be equal to service in the king’s house?

  339. அரைப்பணம் கொடுக்கப் பால்மாறி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செய்த கதை.
    A story of one who gave fifty gold pieces for a compound medicine after having hesitated to give half a fanam.

  340. அரையிற் புண்ணும் அண்டைவீட்டுக் கடனும் ஆகாது.
    Sores about the waist, and debt to one’s neighbour are both bad.

  341. அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?
    If one goes before an assembly with half learning will it become perfect?

  342. அலுத்துப் பிலுத்து அக்காள் வீட்டுக்குப் போனால் அக்காள் இழுத்து மச்சானிடத்திற் போட்டாளாம்.
    When he went to his elder sister’s wearied and exhausted, it is said that she sent him to his brother-in-law.

  343. அலை எப்பொழுது ஒழியும், தலை எப்பொழுது முழுகுகிறது?
    When will the waves be still, when will he wash his head?

  344. அலை மோதும்போதே தலை முழுகுகிறது.
    Bathing in the midst of beating waves.
    Said of attempting to do a thing under adverse circumstances,

  345. அலைவாய்த் துரும்புபோல.
    Like a straw on a wave.

  346. அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறதுபோல.
    Showing his teeth like a jackal of the ginger fields.
    Said of one who shows signs of disappointment.

  347. அல்லவை தேய அறம் பெருகும்.
    As vice wanes, virtue waxes.

  348. அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.
    The bitter tears of the oppressed are a file that wears away the wealth (of the oppressor.)

  349. அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.
    A bed free from anxiety is the most agreeable of all things.

  350. அல்லல் அருளாள்வார்க்கில்லை.
    The kind-hearted are free from sorrow.

  351. அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.
    A time for adversity, and a time for prosperity.

  352. அல்லாதவன் வாயில் கள்ளை வார்.
    Pour toddy into the mouth of the wicked.
    Add fuel to the fire.

  353. அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா.
    Ill-gotten wealth and illicit pleasure are both bad.

  354. அல்லும் பகலும் அழுக்கறக் கல்.
    Study day and night to be free from impurity.

  355. அவகடம் உள்ளவன் அருமை அறியான்.
    A wily man does not know the value (of friendship.)

  356. அவகுணக்காரன் ஆகாசமாவான்.
    The vicious will evaporate into thin air.

  357. அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
    The hasty are deficient in sense.

  358. அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கிறேன்.
    For hasty ornamentation I take up and sprinkle.

  359. அவசரத்தில் உபசாரமா?
    Is ceremonious behaviour demanded when one is in a hurry?

  360. அவசரத்திற்குப் பாவம் இல்லை.
    A thing done in an emergency is-not criminal.

  361. அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது.
    When in haste the hand will not enter even into a large chatty.

  362. அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.
    She is inclined to play the harlot, and is afraid that her husband will beat her.

  363. அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது.
    The mouth of the harlot is large, and the bubbling of five or six grains of rice when boiling is excessive.

  364. அவசாரிக்கு ஆணை இல்லை, திருடிக்குத் தெய்வம் இல்லை.
    The harlot has no oath, the thief has no god.
    Spoken of one wholly derelict.

  365. அவசாரி ஆடினாலும் அதிஷ்டம் வேண்டும் திருடப் போனாலும் திறமை வேண்டும்.
    If one plays the harlot fortune is wanted, and when one goes to steal ability is needed.

  366. அவசாரியென்று ஆனைமேல் ஏறலாம் திருடியென்று தெருவில் வரலாமா?
    As an abandoned woman one may ride on an elephant, but can one go along a street as a thief?

  367. அவதந்திரம் தனக்கு அந்தரம்.
    Chicanery ends in one’s ruin.

  368. அவதிக்குடிக்குத் தெய்வமே துணை.
    God himself is the help of a family in extremities.

  369. அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.
    The worthless and the cheat have no need of land.

  370. அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
    Time is better spent in austerities than in vanity.

  371. அவமானம்பண்ணி வெகுமானம் பேசுகிறான்.
    Having acted reproachfully he speaks flatteringly.

  372. அவரா சுறுக்கே அரிவாண்மணை கருக்கே.
    He is surely as sharp as the edge of a sickle.
    Spoken ironically of a man of vain pretensions.

  373. அவருடைய சிறகு முறிந்துபோயிற்று.
    His wing is broken.

  374. அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி.
    Each one's mind is the witness that acquits or condemns.

  375. அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.
    The supreme Ruler knows the purposes of every one.

  376. அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதில்லை.
    The circular curls of an ugly horse are not examined.

  377. அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்.
    He who leads a useless life will die a miserable death.

  378. அவலை நினைத்து உரலை இடித்தாற்போல.
    As if one beat an empty mortar thinking it contained unhusked steeped rice.
    Spoken of absence of mind.

  379. அவள் பாடுகிறது குயில் கூவுகிறதுபோல இருக்கிறது.
    Her singing is like the voice of the kuyil (an Indian cuckoo.)

  380. அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது.
    Her best cooking-pot was broken in the middle of the road.

  381. அவனுக்குக் கப்படாவும் இல்லை வெட்டுக்கத்தியும் இல்லை.
    This person will rise and eat before him.

  382. அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.
    He has neither a cloth nor a knife.
    Said of one utterly destitute.

  383. அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.
    That which is in his keeping is my livelihood.

  384. அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.
    He is now under the auspicious influence of the planet Venus.
    Spoken of one who is the favourite of fortune.

  385. அவனுக்கும் இவனுக்கும் எருமைச்சங்காத்தம்.
    The intimacy or friendship of these two persons is that of the buffalo.

  386. அவனுடைய பேச்சு காற்சொல்லும் அரைச்சொல்லும்.
    His speech consists of quarters and halves of words.
    Undecisive.

  387. அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல் இருக்கிறது.
    His prosperity is scattered like crabs from a broken vessel.

  388. அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்கிறது நல்லது.
    It is better to cry Siva, Siva, than opprobriously to reproach others.

  389. அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.
    He has authority both to behead and to release.

  390. அவனை அவன் பேச்சிட்டுப் பேச்சு வாங்கி, ஆமை மல்லாத்துகிறாப்போல் மல்லாத்திப்போட்டான்.
    Having fished out his secrets by cunning he turned him upside down as a turtle is turned.

  391. அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது.
    He cannot equal him though he raise himself to the top of a ladder.
    Said of one who is far inferior to another either socially or intellectually.

  392. அவன் நா அசைய நாடு அசையும்.
    When his tongue moves the country moves.

  393. அவன் அருள் அற்றால் அனைவரும் அற்றார், அவன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்.
    Without his favour all are destitute, if he favour, all are prosperous.
    Said of God’s grace and displeasure.

  394. அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி.
    He is a cold firebrand.
    Said of a person really dangerous though apparently not so.

  395. அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது.
    Even the grass under his footsteps will not die.
    Used when speaking of one remarkable for gentle habits.

  396. அவன் மிதித்த இடம் பற்றியெரிகின்றது.
    The place whereon he treads bursts into flames.
    Spoken of the reckless and violent.

  397. அவன் மெத்த அத்துமிஞ்சின பேச்சுக்காரன்.
    His words exceed all bounds.
    Said of one who delights in abusing others.

  398. அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.
    The work that was indicated by the foot he will perform by the hand.

  399. அவன் சாதி எந்தப் புத்தி குலம் எந்த ஆசாரமோ அதுதான் வரும்.
    The devices of his caste and habits of his tribe will predominate.

  400. அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.
    That which he tied with his foot cannot be loosened by the hand.
    Spoken of one of superior skill.

  401. அவன் அசையாது அணுவும் அசையாது.
    Unless he move not an atom will move.

  402. அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.
    Every man’s purpose will be either effectuated or frustrated by the Supreme Ruler.

  403. அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.
    He is sharpening a knife for another's throat.

  404. அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.
    His mind is full of sores, his body is covered with blisters.

  405. அவன் எனக்கு அட்டமத்துச்சனி.
    To me he is Saturn in the eighth sign.
    The most malignant of enemies.

  406. அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
    He seeks friendship and prays for a skin.

  407. அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்.
    What can his teacher do if he ruin himself?

  408. அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.
    What he has scored with his feet I efface with my tongue.

  409. அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ?
    Do you consider him as a green-herb nipped off?

  410. அவன் கையைக்கொண்டே அவன் கண்ணில் குத்தினான்.
    He took another’s hand and struck his eyes.

  411. அவன் சிறகில்லாப் பறவை.
    He is a bird without wings.

  412. அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்.
    He is preparing to cook my head.

  413. அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கே.
    Every one is responsible for his own actions.

  414. அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.
    He aims to scatter me to the winds.

  415. அவன் எரிபொரியென்று விழுகிறான்.
    He breaks out saying burn him, fry him.
    Said of one who suddenly bursts into a rage.

  416. அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்.
    Having run and sung, he at length sank like the pulse.

  417. அவன் வல்லாளகண்டனை வாரிப்போரிட்டவன்.
    He is the man who encountered and fought the champion.

  418. அவன் கொஞ்சப்புள்ளியா?
    Is he a man of limited wealth?
    Spoken of a slovenly miser.

  419. அவாந்தரத்தில் அக்கினி பற்றுமா?
    Can fire be kindled in mid-air?
    No, except by the Almighty "who holds the lightning in his hand and tells it whom to strike."

  420. அவித்த பயறு முளைத்த கதைபோல.
    Like the story of the germination of boiled peas.

  421. அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.
    Better is the hatred of the wise than the friendship of fools.

  422. அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.
    What can rice do? it can work the five senses, what can wealth do? it can subdue the world.

  423. அவையிலும் ஒருவன் சவையிலும் ஒருவன்.
    One who belongs to this convention and to that convention.

  424. அவ்வளவு இருந்தால் அடுக்கிவைத்து வாழேனோ.
    If I had so much should I not arrange my chatties earthen cooking vessels and prosper.
    Spoken regretfully of succour which ought to be and is not afforded.

  425. அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை.
    In beauty equal to natural coral, at home a cow-dung basket.

  426. அழகிற்கு மூக்கை அறுப்பார் உண்டா?
    Are there any who cut the nose for the sake of beauty.

  427. அழகு இருந்து அழும், அதிஷ்டம் இருந்து உண்ணும்.
    Beauty will sit and weep, fortune will sit and eat.

  428. அழகுப்பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி.
    O beautiful maid, frail kite, the comedian calls you.
    Spoken of a female whose demeanour is inconsistent with modesty.

  429. அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்.
    A jewel worn as an ornament may aid in adversity.
    Gold ornaments are often given as security for money borrowed to trade with, as well as to serve in pressing emergencies.

  430. அழச்சொல்லுகிறவர் தமர், சிரிக்கச்சொல்லுகிறவர் பிறர்.
    They who advise weeping are one’s friends, those who advise laughing are strangers.
    Spoken with reference to the character of advisers.

  431. அழச்சொல்லுகிறவன் பிழைக்கச்சொல்லுவான், சிரிக்கச்சொல்லுகிறவன் கெடச்சொல்லுவான்
    He who counsels us to weep does so to favour life; he who counsels mirth seeks our ruin.

  432. அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.
    God dements him who is to be destroyed.

  433. அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?
    What matters it with whom an abandoned woman goes?

  434. அழிந்த நந்தவனத்தில் அசுவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன?
    What matters it whether a horse or an ass grazes in a garden that lies waste?

  435. அழிவழக்குச் சொன்னவன் பழிபொறுக்கும் மன்னவன்.
    One who seeks to maintain an unjust claim and a king who extenuates crime.
    Both are injurious to society.

  436. அழுகள்ளர் தொழுகள்ளர் ஆசாரக்கள்ளர்.
    Weeping hypocrites, canting sycophants and religious formalists.

  437. அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
    A weeping man and a smiling woman are not to be trusted.

  438. அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்கலாம், ஒழுகுகிற வீட்டில் இருக்கலாகாது.
    Though one may abide in a house of mourning, it is not possible to remain in one that is leaky.

  439. அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் காட்டுகிறதுபோல.
    Like showing a ripe plantain to a crying child.
    A premium on naughtiness.

  440. அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.
    He tickles when one is weeping.
    Spoken of something that is obtruded at an inconvenient time.

  441. அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து, ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.
    Having given half a fanam for weeping, give a fanam to cease.

  442. அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடா?
    Are grief and self-will things to be made sport of?

  443. அழுக்குச் சிலைக்குள்ளே மாணிக்கம்.
    A ruby in a dirty rag.

  444. அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும்.
    Dirt will remove dirt, reproach will overcome reproach.

  445. அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது.
    Though cleaned and placed on one's knee, the mean disposition of a slave or low person will not leave him.

  446. அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.
    A weeping eye and a running nose.

  447. அழுதவனுக்கு அகங்காரமில்லை.
    He who is weeping has no pride.

  448. அழுதபிள்ளை பால்குடிக்கும்.
    A crying child obtains milk.

  449. அழுத பிள்ளை உரம் பெறும்.
    The weeping child will gain strength.

  450. அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்.
    Although she may weep, she herself must bare the child.

  451. அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான், இளகின நெஞ்சன் எவர்க்கும் உதவுவான்.
    The hard-hearted will be of use to none, the tender hearted will be of use to all.

  452. அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்.
    A corpse unwept and a funeral pyre unquenched.
    An affair or person forsaken by all.

  453. அழுவார் அழுவார் தம் தம் துக்கமே திருவன்பெண்டீருக்கு அழுவாரில்லை.
    All weep on account of their own griefs, none oh account of Tiruvan’s wife.
    Spoken of feigned sympathy and also of that outward expression of sorrow which is occasioned by surrounding circumstances.

  454. அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.
    The mother of a bride or bridegroom will not visit their new relations unless invited.

  455. அளகாபுரியிலும் விறகுதலையன் உண்டு.
    There are firewood carriers even in Alagapuri, (the city of Kuvéra.)
    Kuvéra a wealthy king; now regent of the North and the guardian of riches.

  456. அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.
    Although Alagapuri be given up to plunder, the unfortunate gains nothing thereby.

  457. அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.
    Though as wealthy as Kuvéra you must keep your expenses within due bounds.

  458. அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
    Does the measure know the price of grain?

  459. அளந்த நாழிகொண்டு அளப்பான்.
    He will measure in the accustomed measure.

  460. அளந்தால் ஒரு சாணில்லை அரிந்தால் ஒரு சட்டிகாணாது.
    When measured it is not a span long, when chopped up it does not fill a chatti.

  461. அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.
    By repeated measurement articles will be diminished.
    Constant use wears out a thing.

  462. அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.
    The prosperity of him who does not cultivate sociality is like the filling of a tank without a bank.

  463. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
    If in excess even nectar is poison.

  464. அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது.
    That of which no part is taken out will not lessen, that which is not uttered will not get out.

  465. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்துக் கொடுத்தால் கடன்.
    If taken up and given in handsful it is free, if measured out it is charged for.

  466. அள்ளிப் பால் வார்க்கையிலே சொல்லிப் பால் வார்த்திருக்குது.
    Whilst teeming milk already laded, the quantity is given.

  467. அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது கிள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும்.
    One cannot afford to live with a plunderer though he might live with a pilferer.

  468. அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்.
    It is said that a dog imagines every thing taken up by the hand is intended for himself.

  469. அறக்காத்தான் பெண்டிழந்தான்; அறுகாதவழி சுமந்து அழுதான்.
    An over-suspicious man lost his wife and carried her sixty miles weeping.
    Some mischievous persons having concealed her in a box employed him to carry it to the sea-shore.

  470. அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்.
    She will over-boil the rice; or she will boil it imperfectly.

  471. அறக்கூர்மை மழுமொட்டை.
    Excessive sharpness is perfect bluntness.

  472. அறச்செட்டு முழுநஷ்டம்.
    Hard dealing ends in loss.

  473. அறணை அலகு திறவாது.
    The streaked lizard opens not its mouth.

  474. அறணை கடித்தால் மரணம்
    If a streaked lizard bite, death ensues.

  475. அறத்தால் வருவதே இன்பம்.
    That is happiness which springs from virtue.

  476. அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?
    No cold to them that are completely wet.

  477. அறப்பேசி உறவாடவேண்டும்.
    On a full understanding of the party admit to friendship.

  478. அறப்படித்தவர் அங்காடிபோனால் விற்கவுமாட்டார்; கொள்ளவுமாட்டார்.
    When the hypercritical go to market they neither buy nor sell.

  479. அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார்.
    One highly learned fell into a pot of gruel.

  480. அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை.
    The story of a scrupulousy chaste wife who addressed her husband as Appa, father.

  481. அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல.
    As the thoroughly practised musk-rat was drowned in the refuse-pan.

  482. அறமுறுக்கினால் கொடுமுறுக்காகும்.
    When twisted to excess, fibres snap.

  483. அறமுறுக்கினால் அற்றுப்போகும்.
    If over-twisted it will snap.

  484. அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும்.
    When excessively twisted, strands break.

  485. அறம் பொருள் இன்பம் எல்லாருக்கும் இல்லை.
    Virtue, wealth and pleasure are not common to all.

  486. அறவடித்த முன்சோறு காடிப்பானையில் விழுந்தாற்போல.
    As when being thoroughly strained the uppermost portion of the boiled rice fell into the refuse-pan.

  487. அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு
    (Better) to live in subjection to a mountaineer than to be the subject of a cruel tyrant.

  488. அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்.
    It is the merit of the wise to gain knowledge by meditation.

  489. அறிந்த ஆண்டையென்று கும்பிடப் போனால், உங்கள் அப்பன் பத்துப் பணம் கொடுக்கவேண்டும் கொடு என்றான்.
    When I went to a master whom I knew, to pay my respects, he said, your father owes ten fanams, give it me.

  490. அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?
    A known brahman is a friend; are there only three pancakes for six cash?
    Said of taking advantage of previous acquaintance in a bargain.

  491. அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண் ஆயிற்று.
    Knowingly and unknowingly I have been ruined; scratching has caused sores.

  492. அறிந்தவனென்று கும்பிட அடிமை வழங்கிட்ட கதை.
    The story of one who claimed as his slave the man who had paid his respects to him because he was an acquaintance.

  493. அறிய அறிய கெடுவார் உண்டா?
    Do any become vicious by increasing knowledge?

  494. அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்.
    All the days before the age of discretion are as the days before birth.

  495. அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையில் கொடுக்கவா?
    Have I grown my beard not knowing that it would fall into the hands of the barber?
    Said with reference to the loss of a cherished object.

  496. அறியாப் பிள்ளைப் புத்தியைப்போல
    Like the idea of an innocent child.

  497. அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.
    Do not ask advice of the ignorant.

  498. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
    Though fools are told a thousand times the thing is useless.

  499. அறிவு ஆர் அறிவார்? ஆய்ந்தார் அறிவார்.
    Who possesses information? Those who have examined a thing thoroughly.

  500. அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்தில் தாழ்வுபடுவான்.
    An ignorant man is despised even by women.

  501. அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை.
    So to sleep as to be incapable of feeling is an impossibility.

  502. அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.
    He that increaseth knowledge increaseth sorrow.

  503. அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை.
    The ignorant are not manly.

  504. அறிவு புறம்போய உலண்டதுபோல.
    As a chrysalis destitute of intelligence.

  505. அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
    Wisdom is regulated by knowledge, good conduct by love.

  506. அறிவு மனதை அரிக்கும்.
    Conscious guilt will fret the heart.

  507. அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்.
    A mouth that instructs and a tongue uttering words of love.
    Spoken of one characterized by wisdom and love.

  508. அறிவுடையாரை அரசனும் விரும்பும்.
    Even a king will approve of wise men.

  509. அறிவுடையாரை அடுத்தாற் போதும்.
    To obtain the favour of the wise is enough.

  510. அறிவேன் அறிவேன் ஆவிலை புளியிலைபோல் இருக்கும்.
    I know, I know (i.e., I know it well) the leaf of the banyan tree is like that of the tamarind tree.

  511. அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள்.
    Fifty-eight sickles on the hip of one that cannot reap.
    Used in contempt of mere show and parade.

  512. அறுதவி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை.
    The son of a widow has evil gestures throughout his body.
    Said of persons irreclaimably and naturally vicious.

  513. அறுத்த கோழி துடிக்குமாப்போல.
    Fluttering as a fowl with its throat cut.

  514. அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்ற கதை
    The story of a widow who gave birth to a son.

  515. அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
    Seventy rags for sixty days.

  516. அறுபத்துநாலு அடிக் கம்பத்தின்மேல் ஆடினாலும், கீழே வந்து தியாகம் வாங்க வேண்டும்.
    Although one may balance himself on a pole sixty-four feet high, he has to descend to receive gifts.

  517. அறுபத்தெட்டுக் கோரம்பலம்.
    Sixty-eight tricks.
    Said of the various impediments which one meets with in carrying out a scheme.

  518. அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.
    In harvest time even a rat has five wives.

  519. அறுவாய்க்கு வாய் பெரிது, அரிசிக்கு கொதி பெரிது.
    The mouth of the rice-pot being enlarged by fracture, the rice must be boiled the longer.

  520. அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?
    One must appear in the assembly, must he not, after having practised privately?

  521. அறையில் இருக்கிறவர்களை அம்பலத்தில் ஏற்றுகிற புரட்டன்.
    One who leads private persons into a place of justice and perverts judgment.

  522. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
    The least unlawful desire destroys a myriad acts of austerity.

  523. அற்பத்தில் அழகு குலைகிறதா?
    Is beauty (self-respect) to be forfeited for a mere trifle?

  524. அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை அடக்கும்.
    Although the broom is inferior it will lay the dust in the house.

  525. அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்.
    The friendship of the mean will issue in fatal results.

  526. அற்பர் சிநேகம் பிராண சங்கடம்.
    The friendship of the base is dangerous.

  527. அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்.
    If a low-bred man obtain wealth, he will carry an umbrella at midnight.

  528. அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்.
    When a mean person acquires wealth he knows not how to take care of it.

  529. அற்றத்துக்கு உற்றதாய்.
    Fitted to the opportunity.

  530. அனல் குளிர் வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்திற்குள் அடக்கம்.
    Three kinds of weather, hot, cold and temperate are included in the six seasons.
    A year is divided into six seasons of two months each, beginning with August. The names of the seasons are 1. கார் cloudy. 2 கூதிர் cold. 3. முன்பனி evening dew. 4. பின்பனி morning dew. 5. இளவேனில் mild heat. 6. முதுவேனில் very hot.

  531. அனுபோகம் தொலைந்தால் அற்ப அவிழ்தமும் பலிக்கும்.
    Even a common medicine may prove effectual after a disease has passed the crisis.

  532. அன்பற்ற மாமியாருக்கு கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம்.
    The touch whether of the foot or the hand is an offence to one’s unkind mother-in-law.

  533. அன்பற்ற மாமியாருக்கு கும்பிடும் குற்றந்தான்.
    Even obeisance is an offence to an unloving mother-in-law.

  534. அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே.
    Don’t enter the portal of the uncharitable.

  535. அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி.
    Know a loving friend in adversity.

  536. அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை.
    They who are destitute of love are void of influence.

  537. அன்புள்ள குணம் அலையில்லா நதி.
    A loving disposition is a river without a ripple.

  538. அன்பு இருந்தால் ஆகாதும் ஆகும்.
    Where love reigns the impossible may be attained.

  539. அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.
    The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband.

  540. அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்.
    Love is all-important, and it is it’s own reward.

  541. அன்றற ஆயிரம் பொன்னிலும், நின்றற ஒரு காசு பெரிது.
    A single cash saved is greater than thousands of gold spent as soon as acquired.

  542. அன்றிறுக்கலாம் நின்றிறுக்கலாகாது.
    Pay at once, delay is bad.

  543. அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை.
    The body we then saw has suffered no decay.
    The word மேனி is also used for beauty, freshness.

  544. அன்றும் இல்லைத் தையல், இன்றும் இல்லை பொத்தல்.
    There was no stitching then, nor is there any hole now.

  545. அன்றுகொள், நின்றுகொள், என்றும் கொள்ளாதே.
    Buy when you require, be slow to make purchases, do not make daily purchases.

  546. அன்று தின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆமா?
    Will the boiled rice eaten then suffice for six months?

  547. அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துப் பசியை அறுக்கும்.
    The food which was then eaten will keep one free from hunger for six months.

  548. அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா?
    Will he who wrote then, erase and write again?
    Referring to the changeless preordination of God.

  549. அன்றைக்கு கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைத்த அரைக்காசு பெரிது.
    The half cash obtained to-day is greater than thousands of gold to be got hereafter.

  550. அன்றைக்குத் தின்கிற பலாக்காயைவிட இன்றைக்கு தின்கிற களாக்காய் பெரிது.
    The Kalà fruit, carissa diffusa, of to-day is better than the jack fruit of the future.

  551. அன்னப் பிடி வெல்லப் பிடி ஆச்சுது.
    A handful of boiled rice has become as precious as a handful of sugar.

  552. அன்ன மயம் பிராண மயம்.
    The property of food is the support of life.
    The supporting, nourishing quality of grain is its special property, without which, as life is now conditioned, it cannot exist.

  553. அன்ன மயம் இன்றிப் பின்னை மயம் இல்லை.
    There is no physical virtue in aught but food.
    The same as the preceding.

  554. அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்.
    The glutton and the sloven are alike worthless.

  555. அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?
    May we break through the wall of the house of those who fed us?

  556. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
    When food fails, the five senses fail.
    Referring to the exercise of the senses as dependent on the health of the body and its dependence on food.

  557. அன்ன நடை நடக்கபோய்த் தன் நடையும் கெட்டாற்போல.
    As in attempting to walk like a swan, the crow lost even its natural gait.

  558. அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு.
    When food or grain is scarce, all is scarce.

  559. அன்னப்பாலுக்குச் சிங்கியடித்தவள் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறாள்.
    She who was wandering about for rice water is seeking sugar to mix in cow’s milk.

  560. அன்னதானத்திற்குச் சரி என்ன தானம் இருக்கிறது?
    What gift is there that equals the gift of food?

  561. அன்னிய மாதர் அவதிக்கு உதவார்.
    Strange women will not avail in avail in adversity.

  562. அன்னைக்கு உதவாதான் ஆருக்கு உதவுவான்.
    Whom will he help that does not help his mother?

  563. அஸ்த செம்மானம் அடைமழைக்கு லக்ஷணம்.
    A crimson sunset betokens abiding rain.

  564. அஸ்திமசகாந்தரம் என்றதுபோல் இருக்கிறது.
    The difference is as great as that between an elephant and a mosquito.