Page:A classified collection of Tamil proverbs (IA classifiedcollec00jensiala).pdf/32

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
2
TAMIL PROVERBS
  1. அவன் அசையாது, அணுவும் அசையாது.
    Unless God move, not an atom will move.
    God is the hidden power behind everything.
  2. ஈசனுக்கு ஒப்பு இங்கு ஒன்றுமில்லை.
    Nothing here is equal to God.
  3. உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும்.
    The secrets of the heart are known to God. (Psalm 44,21.)
  4. எள்ளுக்குள் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருக்கிறான்.
    God pervades all, as the oil in the oil seed.
  5. ஒருவராயிருந்ததில் அவருக்குச் சந்தோஷமில்லை.
    God did not feel joy in being alone (and hence he created). (Upanishad.)
  6. சப்த பிரம்மத்தினால் அசப்த பிரம்மம் பிரகாசிப்பிக்கிறது.
    The invisible God is made to shine by the revealed God. (Upanishad.)
  7. சப்த பிரம்மம் பரபிரம்மம் இரண்டையும் அறிய வேண்டியது.
    We should know both the revealed and the unrevealed God. (Upanishad.)
  8. தன்னிலேயே தான் இருப்பான்.
    God is the self-existing. (Vishnu Puràna.)
  9. தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.
    He who is without sin is God.
  10. தெய்வ வணக்கமே நரக வாசலை அடைக்கும் தாழ்.
    The worship of God is the bolt that shuts the gates of hell.
  11. நாராயணன் ஒருவன் தான், இரண்டாவதன் ஒருவனுமில்லை.
    God is one, there is no second to him.
  12. பரபிரம்மத்தைத் தியானம் செய்வதினால், பிரகாசிக்காமலிருந்த விஞ்ஞா னமானது பிரகாசமாகிறது.
    By meditation on God the spiritual wisdom in man, which is unilluminated will become radiant. (Upanishad.)
  13. புகை நுழையாத இடத்திலேயும் அவன் நுழைவான்.
    Even where smoke cannot enter He can enter.
    Said also about a crafts person.

GOD AND MAN

  1. ஆகாசத்திலிருந்து அறுந்துவிட்டேன், பூமிதேவி ஏற்றுக்கொண்டாள்.
    I was torn off from heaven, but God's (Bhumidevi's) mercy received me on earth.
    So says one who stands alone and helpless in this world.
  2. அகதிக்கு ஆகாசமே துணை.
    Heaven helps the helpless.