Page:A classified collection of Tamil proverbs (IA classifiedcollec00jensiala).pdf/35

From Wikisource
Jump to navigation Jump to search
There was a problem when proofreading this page.
FATE.

FATE.

விதி

NO ONE WILL ESCAPE WHAT GOD HAS PREDICTED.

  1. அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.
    No one shall escape God's account.
  2. அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.
    In what God has written there will not be an atom of failure.
  3. அயன் அளந்தபடி.
    According to God’s measure.
  4. அன்றைக்கு எழுதினதை அழித்து எழுதுவானா?
    What God has written before that He will not destroy and re-write,
    "That which must be, will be."
  5. அயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.
    No one can cast off God's decree.
  6. இட்ட எழுத்துக்கு ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா?
    If we want more than God has appointed, shall we get it?
  7. இல்லது வாரது, உள்ளது போகாது.
    That which does not exist will not come into existence, and that which exists will not be annihilated.
  8. ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்.
    Even if a man make penance standing on the point of a needle, he will not get more than was destined for him. 56.
  9. ஊத்தை போனாலும், உள்வினை தீராது.
    Though dirt may be got rid of, inherited fate will not expire.
  10. எண்ணெய் போக முழுகினாலும், எழுத்துப் போகத் தேய்ப்பாருண்டா?
    One may bathe so as to wash off oil, but who can rub himself so as to free himself from fate.
  11. எழுதின விதி அழுதால் தீருமா?
    Though one weeps, will the fate written (by Brahmà) be removed?
  12. கோட்டையில் (or நாட்டையான) பெண் பிறந்தாலும், போட்ட புள்ளி (எழுத்து) தப்பாது.
    Though a woman is born in a fort (in a royal family), she will not escape her fate.
  13. ஜாதிக்குத் தக்கப் புத்தி, குலத்துக்குத் தக்க ஆசாரம்.
    No one will be able to rise above the range of understanding and the religious customs that belongs to his caste.
  14. தலை எழுத்து இருக்க, தலையைச் சிரைத்தால் போகுமா?
    Since the letters of fate are on your head, will your fate leave you because you shave your head.