Page:Tamil proverbs.pdf/116

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
98
பழமொழி.
  1. இரண்டு ஆட்டிலே ஊட்ட விட்ட குட்டிபோல.
    Like a lamb allowed to suck two sheep.
    Spoken of a youth full of strength and activity.

  2. இரண்டு பட்ட ஊரில் குரங்கும் குடி இராது.
    Even a monkey will not stay in a village divided against itself.

  3. இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?
    Is it to plant your feet on two dhonies?

  4. இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?
    Why fire in the house of a man that has two wives?

  5. இரண்டு வீட்டிலும் கலியாணம் இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
    It is said that the pup died between two houses where marriage festivities were going on.

  6. இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டதுபோல.
    As a bone thrown to two dogs.

  7. இரந்தும் பரத்துக்கு இடு.
    Though you have to beg them, make your offerings to God.

  8. இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்.
    It is the duty of the rich to give alms to beggars.

  9. இரப்பவனுக்கு வெண்சோறு பஞ்சமா?
    Is it difficult for a beggar to get fine rice?

  10. இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.
    A beggar nowhere suffers from famine.

  11. இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது, என் பிள்ளை ஆணை நான் கொடுக்கமாட்டேன்.
    The thing borrowed suits; I swear by my child that I will not return it.

  12. இரவல் சதமா, திருடன் உறவா?
    Is a thing borrowed a durable possession, is a thief a friend?