Page:Tamil proverbs.pdf/153

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
135
  1. உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.
    Never trust one who has deceived you.

  2. உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.
    O thou hunch-backed woman of Madras, how can I give thee up, hast thou not become crooked by bearing burdens?

ஊ.

  1. ஊசல் ஆடியும் தன் நிலையில் நிற்கும்.
    Though the swing oscillates, it will resume its proper centre.

  2. ஊசி ஒரு முழத்துணியையாவது கொடுக்கும் உற்றார் என்ன கொடுப்பார்.
    A needle will give a cubit of cloth, what will your friends give?

  3. ஊசி கொள்ளப் போய்த் துலாம் கணக்குப் பார்க்கிறதா?
    When going to buy a needle, is the weight to be regarded?

  4. ஊசி கோக்கிறதற்கு ஊரில் துளாவாரம் ஏன்?
    Why such a stir in the village about threading a needle?

  5. ஊசிக்குக் கள்ளன் உடனே இருப்பான்.
    Where there is a needle there will be a thief.

  6. ஊசிக்கு ஊசி எதிரேறிப் பாயுமா?
    Can one needle penetrate another when brought point to point?

  7. ஊசி பொன்னானால் என்ன பெறும்?
    Though made of gold what will a needle fetch?

  8. ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான் பூசனிக்காய் போகிறது தெரியாது.
    He notes the loss of needles, but not that of pumpkins.

  9. ஊசிபோல மிடறும் தாழிபோல வயிறும்.
    A throat like a needle, a belly like a caldron.