Page:Tamil proverbs.pdf/156

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
138
பழமொழி.
  1. ஊமையன் பேச்சு பழகின பேருக்குத் தெரியும்.
    The speech—gesticulation—of the dumb is known to those accustomed to it.

  2. ஊமையாயிருந்தால் செவிடும் உண்டு.
    If one is dumb he is deaf also.

  3. ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற்போல.
    As the dumb on meeting the dumb scratch their noses.
    If a person on meeting a dumb man scratches his own nose the dumb man becomes very angry.

  4. ஊமையும் அல்ல செவிடும் அல்ல.
    Neither dumb nor deaf.

  5. ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை.
    No one at enmity with the whole community ever preserved his life.

  6. ஊரார் கணக்கு உடையவன் பிடரியிலே.
    The liabilities of a village are on the neck of its chief.

  7. ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
    He flies on the property of others like a demon.

  8. ஊரார் எருமை பால் கறக்கிறது நீயும் ஊட்டு நானும் உண்ணுகிறேன்.
    The buffalo of the village is in milk, you suck and I will also suck.

  9. ஊரிலே கல்யாணம் மார்பிலே சந்தனம்.
    Marriage ceremonies in the village and sandal paste on the breast.

  10. ஊரில் ஒருவனே தோழன் ஆரும் அற்றதே தாரம்.
    Have one only of the community as a friend, and a woman without ties as a wife.

  11. ஊரில் எளியாரை வண்ணான் அறிவான் சாதிப்பொன் பூண்டாரைத் தட்டான் அறிவான்.
    The washerman knows the poor of a village, the goldsmith knows whose ornaments are made of fine gold.