Page:Tamil proverbs.pdf/159

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
141
  1. ஊரைப் பார்க்கச்சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான்.
    When told to visit the village, he goes to the Pariah quarter.

  2. ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.
    Saturn that seized the village seized also Ganesha.
    One thing happens to all.

  3. ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை, நாட்டை வளைத்தாலும் நல்ல துணை இல்லை.
    Though one goes round the village he finds no help, though he goes round the country no real aid can be got.

  4. ஊரோட ஒக்க ஓடு நாடோட நடு ஓடு.
    If the people of the village flee, join them, if the whole country flee, flee in their midst.

  5. ஊரோச்சம் வீடு பட்டினி.
    Distinguished abroad, starving at home.

  6. ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது?
    When the ruler of a village forcibly takes away another man’s wife, to whom is he to make his complaint!

  7. ஊர் இருக்கிறது ஓடு இருக்கிறது.
    The village still exists and also the alms-dishes.

  8. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
    If the village be divided into two parties, it will be advantageous to the commedians.

  9. ஊர் இளப்பம் வண்ணானுக்குத் தெரியும்.
    That which is bad or exceptionable in a village is known to its washerman.
    The clothes of all pass through his hands, he has therefore the opportunity of inferring much from their condition.

  10. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
    There is a village for alms, and a tank for water.