Page:Tamil proverbs.pdf/176

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
158
பழமொழி.
  1. எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?
    Are all men good men, are all stones rubies?

  2. எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.
    He can do all things, but when dead he cannot resuscitate himself.

  3. எல்லோரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மனார் பொற்பட்டம் கட்டப்போகிறார்.
    All have embarked, my uncle is about to receive a golden mark of distinction.
    Spoken of aspirations beyond one’s merits.

  4. எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சாஸ்திரியார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.
    On mounting a jaded horse that all had ridden, the astrologer slipped and fell down.

  5. எல்லாம் அறிந்தும், கழுநீர்ப்பானையில் கையிடுகிறதா?
    What, is one who knows all things, to put his hand into filthy water?

  6. எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக்கடமை விடார்.
    Though the landmarks be destroyed, they will not remit the ground-rent.

  7. எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?
    Will any one take medicine to poison himself?

  8. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
    Will crying avail for money lent of which no account has been kept?

  9. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
    The condition of the man who keeps no accounts is like the place in which an ass has rolled itself.

  10. எழுதிய விதி அழுதால் தீருமா?
    Will destiny be averted by weeping?