Page:Tamil proverbs.pdf/199

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
181
  1. ஒன்றும் இல்லையென்று ஊதினான் அதுதானும் இல்லையென்று கொட்டினான்.
    He blew a conch to report that there was nothing, and beat a drum to intimate that there was not even that.

  2. ஒன்றும் அற்றவனுக்கு ஒன்பது பெண்டாட்டி.
    Nine wives to him who has nothing.

  3. ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா?
    Is a ceremony of nine days to be performed for a destitute woman?

  4. ஒன்றே குதிரை ஒன்றே ராவுத்தன்.
    One horse, one horseman.

  5. ஒன்றே ராஜா ஒன்றே குதிரை.
    One king, one horse.

  6. ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.
    If one thing only be obtained, it ought to be good.

  7. ஒன்றை பிடித்தாற் சாதிக்க வேண்டும்.
    The thing asserted must be maintained.

  8. ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.
    Though you get only one thing, get it quickly.

  9. ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு.
    If you get only one as your hire, take a calf.

  10. ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.
    Though you touch but one thing, touch what is good.
    Most likely referring to the choice of a wife.

ஓ.

  1. ஓ கொடுப்பானுக்கு வாழ்க்கைப் பட்டு ஓட்டம் ஒழிய, நடை இல்லை.
    Having become the wife of the wretch, I am compelled to run instead of walking.