Page:Tamil proverbs.pdf/300

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
282
பழமொழி.
  1. கோணக் கொம்பு ஏறி என்ன குதிரை ஏறி என்ன வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.
    Whether they mount a palanquin or a horse, the distance between the vain and reputation is very great.

  2. கோணி கொண்டது எருது சுமந்தது.
    That which the sack contained the buffalo carried.

  3. கோணிக் கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
    It is better to bestow a small gift freely than lacs with a wry face.

  4. கோத்திரம் அறிந்து பெண் கொடு, பாத்திரம் அறிந்து பிச்சை இடு
    Having ascertained the character of the family give your daughter in marriage, and knowing the worthiness of the applicant give alms.

  5. கோத்திரவீனன் சாத்திரம் பார்ப்பான்.
    One of low birth consults a fortune-teller.

  6. கோபம் இல்லாத துரையும் சம்பளம் இல்லாத சேவகனும்.
    A master without anger, a servant without wages.

  7. கோபம் பாபம், நித்திரைச் சத்துரு.
    Anger is sin, sleep is an enemy.

  8. கோபம் சண்டாளம்.
    Anger ends in cruelty.

  9. கோபம் அற்றாற் குரோதம் அறும்.
    When anger ceases, revenge ceases.

  10. கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
    Where there is anger, there may be excellent qualities.

  11. கோபி குதிரைமேல் கடிவாளம் இல்லான்.
    The irascible is like a man on horseback without a bridle.