Page:Tamil proverbs.pdf/358

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
340
பழமொழி.
  1. தவளை தாமரைக்குச் சமீபமாக இருந்தும் அதின் தேனை உண்ணாது. அதுபோல, அறிவீனர் கிட்ட இருந்தாலும் கற்றுக் கொள்ளார்கள்.
    The toad living near the lotus drinks not its honey, the illiterate though they live near the learned remain ignorant.

  2. தவளை தன் வாயாற் கெடும்.
    The frog perishes by its own mouth.

  3. தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.
    Like requesting one who eats bran to feed on ambrosia.

  4. தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல.
    Like telling one who is eating bran to blow a trumpet.

  5. தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.
    When she went out in expectation of fetching bran, her samba rice was carried off by a dog.

  6. தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்.
    The hand that is ready to steal bran will be ready to steal money also.

  7. தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு, பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
    A flourishing tree has shade, a woman who has recently borne a child, has milk.

  8. தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை, மெள்ள மெள்ள திறப்பான் ஏன்?
    Why open it gently again and again, when I am trying to bolt the door?

  9. தனக்குப் பிறந்தபிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம் ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கலியாணம் செய்கிறானாம்.
    While his own child cries for bran, he is conducting the nuptials of his neighbour’s child.