Page:Tamil proverbs.pdf/426

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
408
பழமொழி.
  1. நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.
    Use ghee after melting, and curds diluted.

  2. நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்?
    Though it be but a thistle that has entered your foot, you must sit down, must you not, to pull it out?

  3. நெருப்பில் ஈ மொய்க்குமா?
    Will flies swarm in fire?

  4. நெருப்பினும் பொல்லாது கரிப்பின் வாதை.
    The distress of famine is worse than that of fire.

  5. நெருப்பிலும் பொல்லாச் செருப்பு.
    Shoes worse than fire.

  6. நெருப்பிலே புழுப் பற்றுமா?
    Will worms breed in fire?

  7. நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும்.
    A river of fire, and a bridge of hair.

  8. நெருப்பு இல்லாமற் புகை புகையுமா?
    Will there be smoke where there is no fire?

  9. நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நின்றாலும் நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.
    Something may possibly remain in a forest after a fire, but nothing remains after a flood.

  10. நெருப்பு என்றால் வாய் வேகுமா?
    By pronouncing the word fire, will the mouth be burnt?

  11. நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.
    Whether you tread on fire wittingly or unawares, it will burn you.