Page:Tamil proverbs.pdf/475

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
457
  1. பூனைச்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.
    Amusement to the cat, and agony to the rat.

  2. பூனைக்குச் சிமாளம் வந்தால் பீற்றற்பாயில் புரளுமாம்.
    It is said that if a cat be merry, she will roll about on an old mat.

  3. பூனை பால் குடிக்கிறதுபோல.
    As a cat drinks milk.

  4. பூனைபோல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான்.
    He was quiet as a cat, and sprang like a tiger.

  5. பூனையைக் கண்ட கிளிபோலப் புலம்பி அழுகிறான்.
    He cries as a parrot encountered by a cat.

  6. பூனையைத்தான் வீட்டுப் புலியென்றும், எலி அரசனென்றும் சொல்வார்கள்.
    A cat is called a domestic tiger, and the king of rats.

பெ.

  1. பெட்டியிற் பாம்புபோல் அடங்கினான்.
    He was as quiet as a snake in a box.

  2. பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.
    The basket is torn, but the rim is strong.

  3. பெட்டைக் கோழி கூவியோ விடிகிறது?
    Does the day break at the crowing of a hen?

  4. பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?
    Can a hen flap her wings and crow like a cock?

  5. பெண் என்றால் பேயும் இரங்கும்.
    Even a demon will pity a woman.

  6. பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.
    Love of women on the one hand, and love of property on the other.