Page:Tamil proverbs.pdf/486

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
468
பழமொழி.
  1. பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.
    Halting where the sun sets.

  2. பொழுதுவிடிந்தது பாவம் தொலைந்தது.
    The day has dawned, sin is ended.

  3. பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
    He alone who conquers his senses is a teacher of wisdom.

  4. பொறுதி என்பது கடலிலும் பெரிது.
    Forbearance is greater than the ocean.

  5. பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.
    Although suffering may be bitter, continued endurance will make it sweet.

  6. பொறுத்தார் பூமி ஆள்வார்
    Those who put up with injuries may rule the earth.

  7. பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
    They who endure will reign as kings, the irascible will wander through the jungles.

  8. பொறுமை புண்ணியத்திற்கு வேர் பொருளாசை பாவத்திற்கு வேர்.
    Patient endurance is the root of religious merit, avarice is the root of sin.

  9. பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.
    A gold vessel does not sound, a brass one does.

  10. பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.
    Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.

  11. பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.
    The smell of a flower of gold and that of the murukku flower are alike.