Page:Tamil proverbs.pdf/511

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
493
  1. மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். அதுபோல, அந்தம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.
    A shining arrow will occasion pain, in like manner, those who are handsome in person may produce pain.

  2. மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம்.
    It is said that a barber who had nothing to do, shaved a cat.

  3. மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?
    Does a fire fly dispel darkness?

  4. மின்னலைப்போல் பல்லை விளக்கானும், மினுக்கக் கொள்வானும் பதர்.
    He who will not clean his teeth so as to shine like lightning, and he who is fond of show, are chaff.

  5. மின்னாமல் இடி விழுமா?
    Does the thunder-bolt fall without previous lightning?

  6. மின்னாமல் மழை பெய்யுமா?
    Does it rain without previous lightning?

  7. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததுபோல.
    As a thunder-bolt fell without lightning and thunder.

  8. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
    All that glitters is not gold.

  9. மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.
    Lightning is always followed by rain.

மீ.

  1. மீகாமல் இல்லா மரக்கலம் ஓடாது.
    An unpiloted vessel will not sail.

  2. மீதூண் விரும்பேல்.
    Be not gluttonous.