Page:Tamil proverbs.pdf/513

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
495
  1. முக்காதம் சுமந்தாலும் முசல் கைக்தூக்குத்தான்.
    Though carried thirty miles, a hare is carried in the hand.

  2. முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகாது.
    Though a crew bathe three times a day, it will not thereby become a white crane.

  3. முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?
    Will a crow by bathing three times a day become a crane?

  4. முக்கூட்டுச் சிக்கு அறாது.
    A triparty business is always involved.

  5. முசலை எழுப்பி விட்டு, நாய் பதுங்கினதுபோல.
    Like a dog crouching after starting a hare.

  6. முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.
    Crooked grass prevents the flow of six kalams of water.

  7. முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.
    A lame man is very boisterous before a cripple.

  8. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.
    As a lame man longed for the honey that hung from a branch.

  9. முடவன் சந்தைக்குப் போனாற்போல.
    Like a lame man going to market.

  10. முடிக்காதவனே படிக்காதவன்.
    He who does not accomplish his object lacks training.

  11. முடிச்சுப் போனதும் அல்லாமல் இளித்தவாய்ப்பட்டமும் கூடக் கிடைத்தது.
    You have not only lost the bundle of money, but also incurred a reproachful name.

  12. முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?
    If you plant bundles, will heaps be produced?