Page:Tamil proverbs.pdf/522

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
504
பழமொழி.
  1. மூடின முத்து மூன்று லோகம் பெறும், மூடாத முத்து முக்காற் காசும் பெறாது.
    A pearl concealed is worth the three worlds, one that is uncovered wont fetch three quarters of a cash.

  2. மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.
    A porter’s sense is in his knees.

  3. மூத்தது மோழை இளையது காளை.
    The first-born is a hornless animal, the younger is a bull.

  4. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
    The utterances of elderly persons are ambrosia.

  5. மூப்பிலும் தருமம் செய்தல் முயற்சிதான்.
    The charitably disposed exert themselves even in old age.

  6. மூப்பு ஏன் பிடிப்பது, மூதேவி வாசத்திற்கு அடையாளம்.
    Why does one grow old? it is a sign that he is under the influence of the goddess of misfortune.

  7. மூர்க்கனும் முதலையும் சரி.
    The stubborn and crocodiles are alike.

  8. மூர்க்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள்.
    The goddess of misfortune dwells in the face of the stubborn.

  9. மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான், மூடனைச் சேர்ந்தவன் படியான்.
    He who associates with the angry will not prosper, and he who associates with fools will not learn.

  10. மூர்க்கம் உள்ள ராஜாவும் மூட மந்திரியும் அழிவார்கள்.
    A king that is easily provoked, and a prime minister wanting discretion, will come to ruin.

  11. மூர்க்கரோடு இணங்கேல்.
    Associate not with the angry.