Page:Tamil proverbs.pdf/546

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
528
பழமொழி.
  1. வாய்தான்‌ இருக்கின்றது வாய்க்கு அரிசிக்கு வழி இல்லை.
    He has a mouth, but no means of procuring rice for it.

  2. வாய்‌ திறக்கப்‌ பொய்‌ திறக்கும்‌.
    When the mouth opens, lies come forth.

  3. வாய்த்‌ தவிடும்‌ போய்‌ அடுப்பு நெருப்பும்‌ போனதுபோல.
    Like losing bran from the mouth, and fire from the hearth.

  4. வாய்‌ நல்லதானால்‌ ஊர்‌ நல்லது.
    When the mouth is good, the village is good.

  5. வாய்‌ பார்த்தவள்‌ வாழ்வு இழந்தாள்‌ அம்பலம்‌ பார்த்தவன்‌ பெண்டு இழந்தான்.
    She who was looking at the mouth, became a widow: and he who watched the house, lost his wife.

  6. வாய்‌ புளித்ததோ மாங்காய்‌ புளித்ததோ?
    Which is sour, the mouth or the mango?

  7. வாய் மதத்தால் வழக்கு இழந்தான்.
    He lost his suit by the haughty words of his mouth.

  8. வாய் மதத்தால் வாழ்வை இழந்தான்.
    He lost his fortune by the arrogance of his mouth.

  9. வாய்‌ வாழைப்பழம்‌ கை கருணைக்கிழங்கு.
    Plantain fruit in the mouth, and karanai roots in the hands.

  10. வார்த்தை இருந்துபோம்‌, வழி தூர்ந்துபோம்‌.
    Words will endure, ways will fall into disuse.

  11. வாலிபத்திலே முதிர்ந்த புத்தி குறுக்கின வயதுக்கு அடையாளம்.
    Premature genius foretokens a short life.

  12. வால்‌ நீண்ட கரிக்குருவி வலம்‌ இருந்து இடம்‌ போனால்‌, கால்நடையாய்ப்‌ போனவர்கள்‌ கனக தண்டிகை ஏறுவார்கள்‌.
    If a long tailed blackbird fly from right to left, those who went on foot will, on their return, mount palanquins wrought with gold.