Page:Tamil proverbs.pdf/586

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
568
பழமொழி.
  1. வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத பேர்கள் இல்லை.
    There is none that does not know, at least, a little of medicine.

  2. வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.
    Domestic medicine is preferable to that of a physician.

  3. வைத்தியன் பெரிதோ மருந்து பெரிதோ?
    Which is greater, a physician or his medicine?

  4. வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.
    But a fourth part of a quack’s pretensions proves to be true.

  5. வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.
    The malady of a physician cleaves to him till death.

  6. வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம்.
    Medical science is the most important of all sciences.

  7. வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.
    His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple.

  8. வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.
    In all the world, he who is sincere is a friend.

  9. வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.
    At the ankled feet of the giver of all good is found the refuge of the world.

  10. வையகம் ஒழியும் வான் ஒழியும் வல்லவர் வசனம் ஒழியாது.
    Earth, and heaven, will perish, but the words of the mighty will endure.

  11. வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.
    All the world do not follow the same course.

  12. வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை.
    There is no one in the world who has not uttered a falsehood.