Page:Tamil proverbs.pdf/588

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
570
பழமொழி.
  1. வையத்தில் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.
    Water drawn for the rice crop, benefits the grass also.

  2. வையத்தில் நெல் அரிசி வேண்டாதாரும் உண்டு, புல் அரிசி சிக்காதாரும் உண்டு.
    In the world there are those who do not care for rice, as well as those who can scarcely procure even the reeds of grass.

  3. வையத்தில் சைவனுக்குச் சைவன்மேல்.
    As a rule one saiva regards himself superior to another.

  4. வையத்தில் வைஷ்ணவனுக்கு வைஷ்ணவன் மேல்.
    One vaishnava thinks himself superior to another vaishnava.

  5. வையத்தில் தந்தையிலும் தாய் விசேஷம்.
    On earth a mother is more serviceable than a father.

  6. வையத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும்.
    While on earth the things which do not cloy, are rice and water.

  7. வையத்தில் நல் வினையால் ஆகாதது தீவினையால் ஆகுமா?
    May that which cannot be accomplished by good deeds, be accomplished by evil deeds?

  8. வையத்து மனிதர் நாலு வகை.
    There are four kinds of men in the world.

  9. வையம் தோறும் தெய்வம் தொழு.
    Worship God through all the world.

  10. வையம் ஏற்றின் ஐயம் இல்லை.
    When the whole world applauds one, his merit is unquestionable.

  11. வையம் ஒத்தால் ஐயம் இல்லை.
    If the world agree, there is no question about the matter.

  12. வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.
    When the whole world praise one, his character is unimpeachable.