Page:Tamil proverbs.pdf/590

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
572
பழமொழி.

வௌ.

  1. வௌவாலுக்கு ஒரு கனிக்கு நூறு கனி நஷ்டம்.
    For every fruit consumed by a bat, a hundred are spoiled.

  2. வௌவாலுக்கு மரமே கதி, அதன் குஞ்சுக்கு அதுவே கதி.
    Trees are the asylum of bats; bats are the refuge of their young.

  3. வௌவாலுக்கு எது தூரம்?
    What place is too remote for a bat?

  4. வௌவாலுக்கு இரவில் கண் தெரியும்.
    Bats can see in the dark.

  5. வௌவாலுக்கு நீளவும் தெரியும் குறுகவும் தெரியும்.
    Bats know how to extend or contract the body.

  6. வௌவாலைத் தின்றாலும் அணிலைத் தி்ன்னல் ஆகாது.
    Though one may feed on bats, he may not feed on squirrels.

  7. வௌவாலைக் கொன்றாலும் பிடியை விடாது.
    A bat will not let go its hold though killed.

  8. வௌவாலைப் பட்சி என்னலாமா?
    May a bat be called a bird?

  9. வௌவாலோடு அணிற்பிள்ளை சேருமா?
    Do squirrels mix themselves with bats?

  10. வௌவாலோ சிறிது அதன் அடியோ வலிது.
    Small as the bat is, its stroke is powerful.

  11. வௌவால் அடித்துத் தின்னும், அணில் கடித்துத் தின்னும்.
    Bats devour by striking, squirrels by nibbling.

  12. வௌவால் அடிக்குப் பயப்படலாமா?
    May one fear the stroke of a bat?

  13. வௌவால் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
    Bats are found in companies.