Page:Tamil proverbs.pdf/82

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
64
பழமொழி.
  1. ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.
    Not even hair is found where sheep were penned.

  2. ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.
    A place where sheep were penned and a place once occupied by an Agambadyan are profitless.

  3. ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.
    Not a leaf will be found where the sheep lay.

  4. ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.
    The fattening of the sheep is an advantage to the shepherd.

  5. ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான்.
    He that has bought a sheep will wander about; he that has bought fowls will go about crying them for sale.

  6. ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
    Will the shepherd who refused to give a sheep give a cow?

  7. ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?
    Will a sheep lead itself when the shepherd is absent?

  8. ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.
    Though he may fall headlong when dancing, he will not thereby meet with greater success.

  9. ஆடுங்காலத்துத் தலைகீழாக விழுந்தால் ஓடும் கப்பரையும் உடையவன் ஆவான்.
    If one should fall headlong when he ought to be active, he will be so impoverished as to possess only broken pots and an alms-dish.
    Indolence in youth leads to poverty in old age.

  10. ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார்.
    If one say, O my teacher, can the sheep be of any use to you, he replies yes, all except the horns and the hoofs.