Tamil Proverbs/கீ

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
கீ
3778955Tamil Proverbs — கீPeter Percival

கீ.

  1. கீரி கடித்த பாம்புபோலே.
    Like a snake bit by a mungoose.

  2. கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.
    Inveterate enmity exists between the mungoose and snakes.

  3. கீரியும் பாம்பும்போல.
    Like a mungoose and a snake.

  4. கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.
    An opposition shop is good even among green grocers.

  5. கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே.
    As if a parasite should spring from the lower part of a vegetable.

  6. கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா?
    When I order the greens to be pruned, is a garland put up?

  7. கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?
    Why sing eléla when plucking up greens?

  8. கீரையை இரண்டு கறி பண்ணாதே.
    Do not make two curries of a vegetable.

  9. கீர்த்தியால் பசி தீருமா?
    Will hunger be appeased by fame?

  10. கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன?
    Whence sorrow to him who hag obtained praise?

  11. கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கிறான்.
    If it is said that a snake is below, he looks up.

  12. கீழ்குலத்தான் ஆனாலும் கற்றவன் மேல்குலத்தான்.
    Though of low origin, the learned ranks with the highest class.

  13. கீழ்க்காது மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி.
    Her ears are rent at both ends; in an affray she is equal to Durga.

  14. கீறி ஆற்றினால் புண் ஆறும்.
    If lanced, the sore will heal.