Tamil Proverbs/சோ

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
சோ
3762684Tamil Proverbs — சோPeter Percival

சோ.

  1. சோம்பல் இல்லாத் தொழில் சோதனை இல்லாத் துணை.
    Untiring service is reliable help.

  2. சோம்பலுக்குத் தொடர்ச்சி வறுமை; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி மூடம்.
    Indolence leads to poverty, inaction to ignorance.

  3. சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
    Indolence is the parent of want.

  4. சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
    The sluggard eats his plantain, skin and all.

  5. சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?
    Is it the realm of Chola, or the realm of deceit?

  6. சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?
    Is it after snatching away his bag one gives alms to a beggar?

  7. சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.
    What can rice effect? whatever you like.

  8. சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?
    If rice be spilt it may be picked up, but if one loses his sense of honour can he recover that?

  9. சோறு சிந்தினால் பொறுக்கலாம் நீர் சிந்தினால் பொறுக்கலாமா?
    If rice be spilt it may be picked up, can water?

  10. சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?
    Can he who would not pick a stone out of the rice, lift up the stone lintel of a temple gateway?

  11. சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?
    Can he who will not pick a stone out of his rice, lift a buffalo out of the mud?

  12. சோற்றுக்கு வீங்கின நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயே.
    Thou dog, greedy of boiled rice, come to the January ox-festival.

  13. சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?
    Of what use is a pumpkin which will not be available for food, is it to be suspended to a pandal swing?

  14. சோற்றுச் சுவையோடு தொத்தி வந்த நொள்ளை.
    The blind that came drawn by the smell of rice.

  15. சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.
    He is a waste of rice, he is a burden to the earth.

  16. சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?
    What, to cut one’s throat after giving rice?