Tamil Proverbs/பொ

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
பொ
3768019Tamil Proverbs — பொPeter Percival

பொ.

  1. பொக்கவாய்ச்சி மெச்சினாளாம் பொரிமாலை.
    It is said that a toothless dame appreciated the rice flour.

  2. பொங்கும் காலம் புளி பூக்கும், மங்கும் காலம் மா பூக்கும்.
    In times of plenty the tamarind tree blossoms, in times of scarcity the mango bears in abundance.

  3. பொதி அளக்கிறதற்குமுன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
    Am I to measure out the hire, before measuring out the load?

  4. பொதியை வைத்து விட்டுப் பிச்சைக்குப் போனான், அதையும் வைத்து விட்டுச் செத்துக் கிடந்தான்.
    Having loaded his bullock, he went abegging; the product he put on one side, and died.

  5. பொதி வைக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
    Am I to measure out the hire before adjusting the load!

  6. பொத்தைச் சுரைக்காய்போலே.
    Like a fleshy gourd.

  7. பொய் இருந்து புலம்பும் மெய் இருந்து விழிக்கும்.
    Falsehood will never cease to weep, truth will ever be conspicuous.

  8. பொய் உடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே.
    The falsehood of a liar by reason of its force, may appear like truth, may appear like truth.

  9. பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.
    The mouth accustomed to lies will be deprived of food.

  10. பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.
    The mouth accustomed to lies will be deprived of even parched corn.

  11. பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.
    No one ever prospered by telling lies, no one was ever reduced to poverty by speaking truth.

  12. பொய் மெய்யை வெல்லுமா?
    Will falsehood conquer truth?

  13. பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.
    The false love of money, will take away the real love of divine grace.

  14. பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.
    Falsehood on one side, and envy on the other.

  15. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.
    Though you tell lies, do so consistently.

  16. பொருடனைப் போற்றிவாழ்.
    Preserve your substance and live.

  17. பொருளாசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?
    Will covetous desires and conscience agree?

  18. பொருளும் கொடுத்துப் பழியும் தேட.
    Giving one’s wealth and incurring censure.

  19. பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.
    Wealth and pleasure will be separated from us, but virtue will abide.

  20. பொருள் போன வழியே துக்கம் போம்.
    Whithersoever wealth goes, sorrow follows in the same path.

  21. பொல்லாத மனம் கேளாது.
    The wicked heart resists reproof.

  22. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
    Avoid whatever is evil.

  23. பொல்லாத காலம் சொல்லாது வந்தது.
    Inauspicious times come without giving notice.

  24. பொல்லாதவர்கள் சினப்பட்டால் கல்வின் பிளவு போல ராசியாகமாட்டார்கள்.
    The anger of the wicked is like a fracture in a stone, they are not easily reconciled.

  25. பொல்லாத குணத்துக்கு மருந்து உண்டா?
    Is there any medicine for a bad temper?

  26. பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் வீழ்ந்த நீர் போல.
    The friendship of the wicked is as bitter as water in brackish soil.

  27. பொல்லாப் பிள்ளையில் இல்லாப் பிள்ளை.
    A bad child is worse than none.

  28. பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.
    Halting where the sun sets.

  29. பொழுதுவிடிந்தது பாவம் தொலைந்தது.
    The day has dawned, sin is ended.

  30. பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
    He alone who conquers his senses is a teacher of wisdom.

  31. பொறுதி என்பது கடலிலும் பெரிது.
    Forbearance is greater than the ocean.

  32. பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.
    Although suffering may be bitter, continued endurance will make it sweet.

  33. பொறுத்தார் பூமி ஆள்வார்
    Those who put up with injuries may rule the earth.

  34. பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
    They who endure will reign as kings, the irascible will wander through the jungles.

  35. பொறுமை புண்ணியத்திற்கு வேர் பொருளாசை பாவத்திற்கு வேர்.
    Patient endurance is the root of religious merit, avarice is the root of sin.

  36. பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.
    A gold vessel does not sound, a brass one does.

  37. பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.
    Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.

  38. பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.
    The smell of a flower of gold and that of the murukku flower are alike.

  39. பொற் பூ வாசிக்குமா?
    Does a golden flower diffuse fragrance?

  40. பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
    The ornament of reputation is greater than ornaments of gold.

  41. பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?
    Gold may be lent, can flowers?

  42. பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
    If the word gold be uttered, even a corpse will open its mouth.

  43. பொன்கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?
    May one cut his throat with a knife because it is made of gold?

  44. பொன் காத்த பூதம்போல.
    Like the demon that guarded treasure.

  45. பொன்செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.
    Though golden slippers, they must be put on the feet.

  46. பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்?
    Why should a woman who has no gold beads be called Ammani?

  47. பொன்முடி அல்லது சடை முடி வேண்டும்.
    One should wear either a gold crown, or matted hair.

  48. பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது?
    If one has a golden house, what house can he not get?

  49. பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.
    The golden hall of-Chidambaram, and the town Puvanagiri, are always in trouble.

  50. பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.
    If acid be mixed with ponnánkáni-Illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate.

  51. பொன்ணாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.
    The compound of ponnánkáni greens-illecebrum-and tamarind, will enable a girl who has lost her appetite to eat an ulak of rice.

  52. பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.
    He ulcerates the golden mind.

  53. பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.
    Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.

  54. பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.
    Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.

  55. பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம்.
    Golden ploughs were used for the cultivation of the millet, and the crop was less than the seed-corn.

  56. பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?
    Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?

  57. பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?
    Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?

  58. பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.
    Flowers, at least, must be offered in a temple in which gold is offered.

  59. பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?
    Although you may throw away gold, you may not throw away edible herbs!