Tamil Proverbs/யா

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
யா
3767041Tamil Proverbs — யாPeter Percival

யா.

  1. யாதி முற்றினால் வியாதி.
    Matured meditation ends in disease.

  2. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?
    A black elephant is worth a thousand gold peices, what will a black cat fetch?

  3. யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.
    Sixty feet from an elephant, seventy from a dwarf.

  4. யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.
    As an elephant throws sand on its head.

  5. யானை தின்ற விளாங்கனிபோல்.
    Like a blighted wood-apple.

  6. யானை மிதிக்கப் பிழைப்பார்களா?
    Will they survive who have been trampled on by an elephant?

  7. யானைமுன்னே முயல் முக்கினதுபோல.
    As a hare strained itself before an elephant.

  8. யானைமுதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா; அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.
    Large beasts such as elephants &c., when they fall down from a high place, live not, so are the great.

  9. யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?
    Having bought an elephant for a hundred pieces of gold, why hesitate to buy its iron goad?

  10. யானையைத் தேடக் குடத்துக்குட் கை வைத்தது போல.
    As one put his hand into a jar when he was seeking an elephant.